உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:2211181dharshini/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளந்தமிழே!

தமிழ்மொழி நம் அடையாளம்; பண்பாட்டின் நீட்சி; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு உயிர்ப்போடும் இளமையோடும் இருப்பது. இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இலர் எனலாம். தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவிஞர்களின் அவா

உயர்தனிச் செம்மொழியாம் தமிழில் இழுமெனும் மழியால் விழுமியது பயக்கும் வகையில் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் அழகுணர்வு, மலரும் மணமும் போலக் கவிதையுடன் இரண்டறக் கலந்துள்ளது. கவிப்பொருளை அமைக்கின்ற விதத்தில், உணர்ச்சியைப் பாய்ச்சும் விதத்தில் தீங்கவிகளைச் செவியாரப் பருகச்செய்து கற்போர் இதயம் கனியும் வண்ணம் படைக்கும் அழகியல் உணர்வு, பண்டைக் கவிஞர்களுக்கு இயல்பாக இருந்தது.

வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தன்று, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றும் புலவரின் பாடல் ஒன்று பாடமாக…

அன்னை மொழியே சின்னக் குழந்தையின் சிரிப்பும் ஆனவள்; பழுத்த நரையின் பட்டறிவும் ஆனவள்; வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவள்; உணர்ந்து கற்றால் கல்போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள்; அறிவைப் பெருக்குபவள்; அன்பை வயப்படுத்துபவள்; செப்புதற்கரிய அவள் பெருமையைப் போற்றுவோம் .

செப்பரிய நின்பெருமை செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்? முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும் விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச் செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே! - கனிச்சாறு.

தமிழ்ச்சொல் வளம் - தேவநேயப் பாவாணர் 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்

தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்). பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப்பெ றும். அடி வகை ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள். தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அட தட்டு அல்லது தட ்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி கழி : கரும்பின் அடி கழை : மூங்கிலின் அடி அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி. கிளைப்பிரிவுகள் தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள். காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல் காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள். இலை வகை தாவரங்களின் இலை வகை களைக் குறிக்கும் சொற்கள். இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை; தாள்: நெல்,புல் முதலியவற்றின்

தோகை : சோளம், க ரு ம் பு

முதலியவற்றின் இலை; ஓலை: தென்னை, பனை முதலியவற்றின் இலை; சண்டு: காய்ந்த தாளும் தோகையும்; சருகு: காய்ந்த இலை. துளிர் அல்ல தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து; முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொ ழுந்து; குருத்து: சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து; கொழுந்தாடை : கரும்பின் நுனிப்பகுதி.பூவின் நிலைகள் பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள். அரும்பு: பூவின் தோற்றநிலை; போது: பூ விரியத் தொடங்கும் நிலை; மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை; வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை; செம்மல்: பூ வாடின நிலை பிஞ்சு வகை தாவர த்தின் பிஞ்சு வகை க ளுக்கு வழங்கும் சொற்கள். குலை வகை தாவரங்களின் குலை வகைகளைக் குறிப ்ப த ற ்கா ன (கா ய ்களையோ கனிகளையோ) சொற்கள்: கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை; குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை; தாறு: வாழைக் குலை; கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்; அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி. கெட்டுப்போன காய்கனி வகை கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள்: சூம்பல்: நுனியில் சுருங்கிய கா ய்; சிவியல்: சுருங்கிய பழம்; சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி; வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு; அளியல்: குளுகுளுத்த பழம்; அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்; சொண்டு: பதராய்ப் போன மிளகா ய். கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோ ட ்டான் உட ்கார்ந ்த தினா ல் கெ ட ்ட காய்; தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெ ட ்டகா ய் ; அல்லி க்கா ய் : தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக்காய்: தென்னையில் கெட்டகாய். பழத்தோல் வகை பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள்: தொலி: மிக தோ ல் : திண்ணமானது; தோடு: வன்மையான து; ஓடு: மிக வன்மையானது; குடுக்கை: சுரையின் ஓடு; மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி; கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி. மணிவகை தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்: கூலம் : நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள் ; பயறு: அவரை, உளுந்து; விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து; காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து; முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து; கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து; தேங்காய்: தென்னையின் வித்து; முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள். இளம் பயிர் வகை தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்: நாற்று: நெல் ; கன்று: மா , புளி, முதலியவற்றின் இளநிலை; குருத்து: வாழையின் இளநிலை; பிள்ளை: தென்னையின் இளநிலை;குட்டி: விளாவின் இளநிலை; மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை; பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.


அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின், தமிழின் புகழ்மணப் பதிவுகளை நுகர்வோமா!... கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ் போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்ப ட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநா ட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான். செய்தி- ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர


உ ல க த் தி லேயே ஒ ரு மொழிக்காக உலக மாநாடு ந டத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே. பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார


திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” ஒன்றை அமைத்திருப்பவர்; பாவாணர் நூல க ம் ஒன்றை உருவ ாக் கியவ ர் ; த மி ழ க ம் முழுவதும் திரு க் கு றள் சொற்பொழிவுகளை வழங் கி வருபவர்; த மி ழ்வ ழித் திருமணங ்களை நட த் தி வருபவர். விழிகளை இ ழக்க நேரிட்டால் கூ ட தாய்த்தமிழினை இழந் துவிடக்கூடாது என்று எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்ற ல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர். பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள்.

இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார். விண்ணோடும் முகிலோடும் உடுக்களோ டும் கதிரவனோடும் கடலோ டும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.

தொன்று தொட்டு இன்றுவரை நின்று நிலவும் ஊர்கள், தொன்மைத் தமிழ் நாகரிகத்தின் வேர்கள்! இலக்கியத்தின் சீர்களில்... முன்தோன்றிய மூத்தகுடி “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”

சிலப்பதிகாரம், காடுகாண் காதை:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:2211181dharshini/மணல்தொட்டி&oldid=3600417" இலிருந்து மீள்விக்கப்பட்டது