பயனர்:வைஷ்ணவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்: வைஷ்ணவி

NAME: VAISHNAVI RAMANATHAN 

பள்ளி: சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

School: Chua Chu Kang Secondary School

Chua Chu Kang Secondary School

சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி, 1992ஆம் ஆண்டு, பத்து ஆசிரியர்களுடனும் பள்ளி முதல்வர், திருமதி சம் சீ வாவுடனும் தொடங்கியது. 1993ஆம் ஆண்டு, 318 மாணவர்கள் இப்பள்ளிக்கு வந்தார்கள். 1993ஆம் ஆண்டு, இப்பள்ளி அதிகாரப்பூர்வமாகது துணைப் பேராசிரியர், லொ சியௌ செவால் அவர்களால் தொடங்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு, திருமதி ரொசலின்ட் சிம் பள்ளி முதல்வராகப் பொறுப்பேற்றார்.  2003ஆம் ஆண்டு, சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி தரத்தில் முதல் இருபது பள்ளிகளில் ஒன்றாக இடம் பெற்றது. 2010ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை, திருமதி சுவா கோ இங் கொ, பள்ளி முதல்வராக இருந்தார். பிறகு, 2015ஆம் ஆண்டிலிருந்து நடப்பாண்டு (2017) வரை, திரு தான் கெங் ஜூ, சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டு வருகிறார். இவரைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், இவர் மாணவர்களுடன் நண்பர்களைப் போல பழகுவார். சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியில் பல இணைப்பாட வகுப்புகள் இருக்கின்றன. அவற்றை நான்கு வகையாக நாம் பிரிக்கலாம். அவை கலை நிகழ்ச்சி, விளையாட்டுக்கள், சீருடைக் குழுக்கள் மற்றும் சமூக குழுக்கள். மேலும், மாணவர்கள் சமூகத்துடன் தங்கள் இணைப்பை வெளிப்படுத்தவும் சமூகசேவையின் முக்கியத்துவத்தை அறியவும்  மாணவர்களுக்காகப் பல நிகழ்ச்சிகளை ஒவ்வொறு ஆண்டும் பல நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட பண்புகளைத் தங்கள்  நடவடிக்கைகளின்மூலம் வெளிப்படுத்த, மாணவர்கள் வீடு வீடாகச் சென்று, செய்தித்தாள்கள் சேகரிகப்பதில் ஈடுபடும் நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது. அதில் பள்ளியில் உள்ள அனைவரும் பங்கு கொள்வர். அதுமட்டுமில்லாமல், சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்  வெளிநாட்டு பயணங்களுக்குச் செல்ல கற்றல் பயணங்களும் உண்டு. அதோடு, விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை உணர்த்த, ஒவ்வொறு ஆண்டும் பல விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளியின் முத்திரையில் உள்ள

வட்ட வடிவம்: வட்டத்தைப் போல, மாணவர்களுக்கு எப்பொழுதும் தன்னால் முடிந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் என்ற பள்ளியின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

மின்விளக்கு: பள்ளியின் பொன்மொழியான, பணியாற்றுதல், வளர்ச்சியடைதல், சிறந்து விளங்குதல் என்ற குறிக்கோளை விளக்குகிறது.

புத்தகம்: கற்றலின் மீதுள்ள பேரார்வத்திற்குப் பள்ளி அளிக்கும் முக்கியத்துவத்தைக்  குறிக்கிறது

சமமான எடை: அறிவுசார்ந்த வளர்ச்சி மற்றும் பிற களங்களுக்கு இடையே வளர வேண்டிய சமநிலையைக் குறிக்கிறது.

பச்சை வண்ணம்: பள்ளியின் வளர்ச்சியையும் ஆயுளையும் பிரதிபலிக்கிறது.

மாணவர்கள் 21ஆம் நூற்றாண்டு திறன்களில் சிறந்து விளங்கும் வகையில், அவர்கள் பல்வேறு போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்மூலம் அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், சிறந்த குடிமக்களாகவும் உருவாக முடியும் என்பதில் பள்ளி அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வைஷ்ணவி&oldid=2251191" இலிருந்து மீள்விக்கப்பட்டது