உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:வெங்கட்ராமன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லால்ரெம்சியாமி

லால்ரெம்சியாமி (பிறப்பு 30 மார்ச் 2000) ஒரு மிசோ இந்திய தொழில்முறை கோல்பந்தாட்டம்(Hockey) வீரர், இந்திய தேசிய அணியில் வார்வட் இடத்தில் விளையாடுகிறார். [1] 2018 உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேர் கொண்ட அணியில் லால்ரெம்சியாமி இடம் பெற்றிருந்தார்.. அதைத் தொடர்ந்து நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது . மிசோரமிலிருந்து ஆசிய பதக்கம் வென்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார் லால்ரெம்சியாமி. [3] அவருக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு 2019 ஆம் ஆண்டின் ரைசிங் ஸ்டார்(Rising Star) விருது வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண் லால்ரெம்சியாமி. [11]

வாழ்க்கைப்  பின்னணி

மிசோரத்தின் ஐஸ்வாலில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள கோலாசிப்பில் , ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் லால்ரெம்சியாமி. அவரது தந்தை, லால்தான்சங்கா ஸோட், ஒரு விவசாயி மற்றும் தாய், லாசர்மாவி, ஒரு இல்லத்தரசி. 10 உடன்பிறப்புகளில் ஒருவரான லால்ரெம்சியாமி தனது குழந்தை பருவத்தில் தான் ஹாக்கி விளையாடத் தொடங்கினார். அவர் 11 வயதாக இருந்தபோது, செர்ச்சிப்பின் தென்சாவலில் மிசோரம் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஹாக்கி அகாடமியில் தேர்வு செய்யப்பட்டார். பின்பு 2016 ஆம் ஆண்டில், புதுதில்லியில் உள்ள தேசிய ஹாக்கி அகாடமியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் இந்தி மொழி பேச போராடிக் கொண்டிருந்தர்., பிறகு அணி வீரர்களின் உதவியுடன் மொழியைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார். சக வீரர்கள் அவரை 'சியாமி' என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள். [2] [3]

சாதனைகள்

லால்ரெம்சியாமி 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் விளையாடிய 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் ஒருவராக இருந்தார். ஆசிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுத் தகுதிச் சுற்றில் 18 வயதிற்குட்பட்ட அணியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். லால்ரெம்சியாமி ஐந்து ஆட்டங்களில் ஏழு கோல்களை அடித்தார். 2017 ஆசிய கோப்பையில் தங்கம் வென்ற மூத்த அணியில் அவர் சேர்க்கப்பட்டார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு இது மிகவும் தேவைப்பட்ட வெற்றியாகும். [4]

லால்ரெம்சியாமி, 2018 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஐந்து போட்டிகளில் மொத்தம் 31 நிமிடங்களில் விளையடிய அவர் இரண்டு கோல்களை அடித்தார், இதில் ஒன்று முக்கியமான இறுதிச் சுற்று- ராபின் போட்டியை சமநிலைப்படுத்த உதவியது . இதன் விளைவாக, அவர் போட்டியின் 'U-21 ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார். [2]

லால்ரெம்சியாமி 2018 உலகக் கோப்பைக்கான 18 பேர் கொண்ட அணியில், தனது 18 வயதில், இந்தியாவின் ஒரு இளைய வீரராக தேர்வு செய்யப்பட்டார். [2] லீக் ஆட்டங்களில் வலுவான ஆட்டங்களுக்குப் பிறகு, லால்ரெம்சியாமி இத்தாலிக்கு எதிரான கிராஸ்ஓவர் போட்டியில், அப்போட்டிக்கான தனது முதல் மற்றும் ஒரே கோலை அடித்தார். இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது, ஆனால் தோல்வியடைந்து எட்டாவது இடத்தில் முடிந்தது. கடைசியாக இந்திய மகளிர் ஹாக்கி அணி, உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றது 1974ஆம் ஆண்டு ஆகும். [5]

உலகக் கோப்பையைத் தொடர்ந்து நடந்த ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் லால்ரெம்சியாமி நான்கு கோல்களை அடித்தார். இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 24 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்., அவரது அணி 8-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்த ஆட்டத்தில் கஜகஸ்தானுக்கு எதிராக 21-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தார்; இந்த வெற்றியின் விகிதம் இந்தியாவின் இரண்டாவது சிறந்த வெற்றி விகிதமாக அமைந்தது..[6] நல்ல செயல்திறனுடன் விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஜப்பானிடம் 1-2 வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம், லால்ரெம்சியாமி மிசோரமில் இருந்து ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்ற முதல் விளையாட்டு வீரர் ஆனார். [7]

பியூனஸ் எயர்ஸ் இளைஞர் ஒலிம்பிக்கில் நடந்த ஐந்து பேர் ஒரு பக்கம் ஆடும் விளையாட்டில், இந்தியா வெள்ளிப் பதக்கத்தைப் பெற உதவினார். இது இந்திய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாகும். [9] போட்டியில் ஒன்பது கோல்களை அடித்தார் லால்ரெம்சியாமி, அதில் ஆஸ்திரியா, உருகுவே மற்றும் வன்வாட்டூ ஆகியவற்றுக்கு எதிரான இரு கோல்களும் அடங்கும். [8]

ஜனவரி 2019 இல் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில்ம் 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய வெற்றி பெற, இரு கோல்கள் அடித்தார் லால்ரெம்சியாமி. [10]

குறிப்புகள்

https://tms.fih.ch/people/17151 [1]

https://www.espn.in/field-hockey/story/_/id/23572238/how-lalremsiami-fought-language-barriers-become-india-rising-star [2]

https://web.archive.org/web/20180903111927/https://nenow.in/north-east-news/lalremsiami-first-mizo-sportsperson-win-asiad-medal.html [3]

https://www.firstpost.com/sports/womens-asia-cup-2017-from-rani-rampal-to-savita-punia-players-who-won-the-title-for-india-after-13-years-4195017.html [4]

https://sports.ndtv.com/hockey/womens-hockey-world-cup-indian-women-lose-to-ireland-via-shoot-off-1894360 [5]

https://web.archive.org/web/20180903114435/https://www.sportstarlive.com/asian-games-2018/asian-games-2018-hockey-results-highlights-india-vs-kazakhstan-indian-womens-hockey-team-mauls-kazakhstan-21-0/article24746751.ece [6]

https://www.thehindu.com/sport/hockey/asian-games-india-women-claim-silver-in-hockey-after-1-2-loss-to-japan/article24834347.ece [7]

https://www.rediff.com/sports/report/youth-olympics-indian-womens-hockey-team-thrash-vanuatu-16-0/20181010.htm [8]

https://www.tribuneindia.com/news/archive/sports/maiden-youth-olympic-silver-medals-for-indian-hockey-teams-668560 [9]

https://web.archive.org/web/20190206142945/https://scroll.in/field/911294/hockey-lalremsiami-brace-helps-india-defeat-spain-5-2 [10]

https://timesofindia.indiatimes.com/sports/hockey/indias-lalremsiami-named-fih-rising-star-of-2019/articleshow/74073589.cms [11]

தனிப்பட்ட தகவல்கள்

பிறப்பு 30 மார்ச் 2000 மிசோரம், இந்தியா உயரம் 1.57 மீ (5 அடி 2 அங்குலம்) எடை 52 கிலோ (115 பவுண்ட்) முன்னோக்கி விளையாடும் நிலை

பதக்கங்கள்

மகளிர் கள ஹாக்கி

பிரதிநிதித்துவம்: இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி

வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2018 டோங்ஹே சிட்டி

ஆசிய விளையாட்டு

வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2018 ஜகார்த்தா

இளைஞர் ஒலிம்பிக்

வெள்ளிப் பதக்கம் - இரண்டாம் இடம் 2018 பியூனஸ் அயர்ஸ்.