பயனர்:விஷ்ணுதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளூர் மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தை சொந்த ஊராக கொண்ட விஷ்ணுதாசன் திருவள்ளூரில் 15.07.1972ல் சுசீலா- சுப்பிரமணியம் தம்பதிக்கு எட்டாவது மகனாக பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் சென்னை அம்பத்தூரில் பள்ளி படிப்பை முடித்தார். திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக்கில் 3 ஆண்டு டிப்ளமா படிப்பை தொடர்ந்தார்.

பின்னர் தமிழ் மீதான பற்றால் சென்னை பல்கலைகழகத்தில் பி.ஏ. தமிழ், எம்ஏ தமிழ் படித்து பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே கவிதை எழுதுவது கை வந்த கலையானது. இறைவன் மீது அவ்வப்போது எழுதிவைத்த கவிதைகளை தொகுத்து கதம்பமாலை, விநாயகர் நான்மணிமாலை, கண்ணன் என் தோழன் என்று சொந்த செலவில் புத்தகமாக வெளியிட்டார். மேலும் தமிழ் நமது தெய்வம் என்ற தொகுப்பையும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு அந்நிறுவனத்தின் இதழில் எழுதிய கவிதைகளை தொகுத்து சேவைத்தேன் ரெட்கிராஸ் என்று புத்தகமாக வெளியிட்டார். சென்னை வானொலியில் நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். பல்வேறு முன்னணி நாளிதழ்கள், சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் பிரசூரமாகியுள்ளது. தினகரன் ஆன்மிகபலன் புத்தகத்தில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். பத்திரிகை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:விஷ்ணுதாசன்&oldid=2528638" இலிருந்து மீள்விக்கப்பட்டது