பயனர்:வானவில் காதர்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானவில் காதர்

#த்ரில்லர்_பயணம்_அனுபவிக்க_நீங்கள்_தயாரா.?

அப்ப ஜோராக கிளம்பலாம்.

#கெஜலெட்டி_தெங்குமரஹாடா

வனத்துக்குள் பயனிக்க நல்ல ஒரு வாய்ப்பு .!

அதை முறையாக பயன்படுத்தி 

புதிய அனுபவத்தை வனத்தில் அனுபவியுங்கள்.!

கடந்த ஞாயிறு விடுமுறை நாளை இந்த வெய்யில் காலத்தில் எங்கு செல்லலாம் யோசித்து பவானிசாகர் அணைக்கு சென்றோம்,

அங்கு சென்றதும் அடர்ந்த வனப்பகுதி கிராமமான 

கெஜலெட்டி தெங்குமரஹாடா செல்ல முடிவு செய்தோம்

மற்றநாட்களில் வனப்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லையாம். ஆனால் 

நாங்க சென்ற நாளின்போது வனத்தின் உள்ளே 

சுமார் 113 ஆண்டுகள் பழமைவாய்ந்த 

ஒரு தர்ஹாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றதையொட்டி அனுமதி பெருவதில் எந்த சிக்கலும் இல்லை 

தர்ஹாவிற்கு செல்வதாக சொல்லிவிட்டு

அடர்ந்த வனத்தில் பயனிக்க முடிவு செய்தோம்..!

குறிப்பிட்ட பகுதியோடு தார்சாலை தடுக்கப்படுகிறது

அடுத்தது என்ன கரடுமுரடான சரலைக்கல் நிரம்பிய மண்சாலைதான்..

எனவே நீங்கள் சொந்த வாகனத்தில் பயணம் செய்ய முடிவெடுத்தால் நான்கு டயர்களுமே குட் கண்டிசனில் இருக்க வேண்டும்.

இரண்டு பக்கமும் மரங்கள் நடுவே மண்சாலை 

அதன் வழியே பயணித்தால் சிறிது தூரத்தில்

காணக்கிடைக்காத கண்கொள்ளாகாட்சி.

ஆம் நண்பர்களே

மனிதர்களுக்குள் கூட்டுக்குடும்பம் வாழ்க்கை குறைந்துவரும் சூழலில் ..

யானைகள் கூட்டுக்குடும்பமாக கூட்டம் கூட்டமாக 

நாம் செல்லும் பக்கவாட்டில் தெரிகிறது..

அதை கடந்து சில தூரம் சென்றதுமே 

எண்ணிக்கையில் அடங்காத வகையில்

துள்ளி ஓடும் புள்ளி மான்கள் கூட்டம்

நாம் செல்லும் வாகனத்தின் குறுக்கே

குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்தோடுகிறது..

நாங்கள் சென்றது ஆம்னி வாகனம் என்றதால் 

சில இடங்களில் கரகாட்டக்காரன் படத்தில் 

வருவது போல

வண்டியை விட்டு கீழ் இறங்கி 

தள்ள வேண்டிய கட்டாயம்..

அதுவும் ஒரு ஜாலியான அனுபவம் என்றாலும்

வனவிலங்குகளால் நமக்கும் நம்மால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க

அங்கு செல்ல முடிவு செய்யும் நண்பர்கள் 

ஆம்னி ஆல்டோ போன்ற தரைதட்டும் 

வாகனங்களை தவிர்த்து விட்டு.

ஜுப். .சுமோ. பொலிரோ .மகிந்திரா பிக்அப்

போன்ற வாகனங்களை தேர்வு செய்வது கூடுதல் சிறப்பு.

அதுவும் ரேடியேட்டர் போன்றவற்றில் தண்ணீர் எல்லாம் நிறைவாக உள்ளதா என கவனிக்க தவறாதீர்கள்..

ஏனென்றால் தண்ணீரின் அருமையை அங்கு சென்றபோதுதான் அனுபவித்து உணர்ந்தோம்

பயணிக்கும் போதே நாம் இதுவரை பார்த்திராத புதுவகை பறவைகள் ஏராளமாக கண்குளிர காணமுடியும்.

தொலை தூரம் சுமார் 15 கிலோ மீட்டர்தான் என்றாலும்

சாலைகளில் இருக்கும் சூழலால் மிகுந்த நேரம்பிடிக்கும் .

பயணிப்பது வனப்பகுதியாக இருந்தாலும்

குடிநீர் 30 லிட்டர்கேனாக கொண்டுசெல்வதுதான்

மொத்த குடும்பத்திற்கும் சரியாக இருக்கும்.

கரடுமுரடான சாலைகள் பலவிலங்குகள்

என பயணிக்கும் போது தூரத்தில்

நடுகாட்டில் இரண்டு கட்டிடங்கள் 

நாம் ஆச்சரியப்படும்போதே அதுதான் கெஜெலெட்டி மின்வாரிய கட்டிடம் என தெரியவரும்.

அந்த பகுதியில் தான் அந்த தர்கா உள்ளது

படைத்த இறைவனுக்கும் நமக்கும் எந்த இடைத்தரகருமில்லை என நாம் உறுதியாக நம்புவதால் 

அந்த தர்கா குறித்து அதிக கவனம் செலுத்த தேவையில்லை..

என்னைப் பொறுத்தவரை

இந்த அடர்ந்த வனப்பகுதியில் பயணிக்க 

அந்த தர்கா ஒரு வாய்ப்பு அவ்வளவே ..

நாம் ஊருக்குள் வாழும்போது ஒருத்தரை ஒருத்தர் முகத்தை திரும்பிக்கொண்டு திரிந்தாலும்

இந்த காட்டுப்பகுதியில் ஒருவரை ஒருவர் நன்றாக நலம்விசாரித்து உணவு முதற்கொண்டு 

கொடுத்து மகிழ்கிறார்கள்..!

விரும்பம் இருந்தால் சாப்பிடலாம்

இல்லையென்றால் 

அப்படியே தர்காவை கடந்து பின்புறம் சென்றால்.

அடர்ந்த வனத்தில் அதன் அமைதியை கெடுக்கும் 

விதமாக சலசலவென இரைச்சலோடு சத்தம்

ஆக்ரோசமாக பாய்ந்து வருகிறது ஓரு ஆறு .

அதன் பெயர் மாயாறு என சொல்கிறார்கள் 

பெயர்காரணம் கேட்டால்

இந்த கோடைகாலத்தில் கூட

அதன் நீரின் அளவு தீடீரென உயருமாம் குறையுமாம் 

அதன் நீரின் போக்கை கணிக்கவே முடியாதாம்..

திருப்பூர் போன்ற பகுதியில் இருந்து சென்ற நான்

ஓடும் தண்ணீரை பார்த்தால் சொல்லவா வேண்டும்

சட்டென உடையை களைந்து பாய ஆசைதான்

என்ன செய்ய நீச்சல் தெரியாத காரணத்தால் 

ஆழம் பார்த்து ஓரமாக நின்ற நான் ஆனந்த குளியல்

குளிக்கும் போது அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள்.

கவனமாக பார்த்து குளிக்கவும் தம்பி

இந்த ஆற்றில் முதலைகளும் இடையில் வரும் என 

பிறகென்ன நாம யார் வம்புக்கும் போறதில்லையென

கரையேறிவிட்டோம்.!

அந்த ஆற்றில் குளித்ததும் அப்படி ஒரு புத்துணர்ச்சி

உள்ளபடியே சொல்கிறேன்..

மனிதர்களால் மாசுபடுத்தமுடியாத ஆறுகளில் 

இந்த மாயாறும் ஒன்றென்றால் அது மிகையில்லை.!

குளிக்கும் போது நேரம் சென்றதும் தெரியவில்லை 

அது போக நாங்கள் சென்ற வாகனமும் ஆம்னி என்ற காரணத்தால் இருட்டும் முன் வனத்தை விட்டு வெளியேறுவது உயிருக்கு உடமைக்கும் நல்லதென 

வனச்சித்தர் ஈரோடு எக்சான்​ அவர்களின் அறிவுருத்தலின் படி..

காரணம் அந்த வனப்பகுதியில் சிங்கத்தை தவிர்த்து

புலி சிறுத்தை உட்பட அனைத்து வனவிலங்குகளும் உள்ளதென அறிந்த காரணத்தினால்

தெங்குமரஹாடா மலைக்கிராமத்திற்கு

இன்னொரு வாய்ப்பில் செல்லலாம் என 

கெஜலெட்டியோடு திரும்பிவிட்டோம்.!

திரும்ப வரும் போதும் 

கூட்டுக்குடும்பமாக யானைகள் கூட்டம்..

நம்மால் அதற்கு பாதிப்பு என்பதை அந்த விலங்குகள் உணராதவரை அவைகள் அமைதியாகவே உள்ளது

மாலை 6.40மணிக்கெல்லாம் வனப்பகுதியை கடந்துவிட்டோம் ,

பின்னர் இரவு திருப்பூர் வந்து கூகுலில் தெங்குமரஹாடா என தேடிபார்த்தால் அவ்வளவு ஆச்சரிங்களை உள்ளடக்கியஅழகிய மலை கிராமமாம்

இந்த தெங்குமரஹாடா.

மேலும் மைசூருக்கும் தமிழகத்திற்கும் விரைவாக வந்துசெல்ல திப்பு சுல்தான் பயன்படுத்திய இரகசியவழியும் மாயாற்றை கடக்க 

திப்பு சுல்தான் கட்டிய பாலமும் இன்னும் பல ஆச்சரியங்கள் அடங்கியுள்ளதாம்.

முன்னால் முதல்வர் ஓய்வெடுக்கும்

நீலகிரிமாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் 

காட்டுவழியாக நடந்தால் பத்துகிலோமீட்டர் மட்டும்தானாம்..ஆனால் ஆபத்து அதிகம்.

குறைந்த செலவில் குடும்பத்தோடு 

திகில் நிறைந்த த்ரில்லர் பயணம் செய்ய ஆசைப்படுபவர்கள் இந்த பகுதியை தேர்வு செய்யலாம்.!

அடர்ந்த வனப்பகுதியை ரசிக்க இங்கு செல்ல 

என்ன செய்யவேண்டும்.

எப்படி செல்லவேண்டும் 

எது செய்யக்கூடாது.!

ஏற்கனவே குறிப்பிட்டது போல 

சொந்த வாகனமாக இருந்தால்

பவாணிசாகர் அடுத்து பின்புறம் உள்ள நீர்பிடிப்பு பகுதியை ஒட்டியே சிறிது தூரம் பயணித்தால்

சுஜ்ஜல்குட்டை என்ற பகுதியில் சோதனை சாவடி வரும்.

மற்ற நாட்களில் 

தனியார் வகனங்களுக்கு அனுமதி கிடையாது

அதை மீறி செல்ல வேண்டுமென்றால் 

வனத்துறை காவல்துறை என 

சிறப்பு அனுமதி வாங்க வேண்டும்.!

அது ஓவர் ரிஸ்க் என நீங்கள் கருதினால்

உள்ளே நாயக்கர் சமூகமக்கள் வழிபடும் 

ஓர் கோவிலும் 

இஸ்லாமியர்கள் வந்து செல்லும் ஒரு தர்காவும் உள்ளது.

இவைகளில் உங்களுக்கு 

நம்பிக்கை இருக்கோ இல்லையோ

இந்த வனப்பயணத்தை அனுபவிக்க இது ஓர் வாய்ப்பு.

அந்த இந்து கோவிலில் மாசி மாதத்தில் 

திருவிழா நடக்குமாம்..

அப்போது எந்த கெடிபியும் இல்லாமல் 

அனுமதி கிடைக்கும் .

அடுத்து தர்கா அதில் இரண்டு க்ரூப்பாக 

ஒரே மாதத்தில் இரண்டு கொடியேற்ற உரூஸ் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

கடந்த சனி ஞாயிற்றுகிழமை என இரண்டு நாள் 

ஈரோட்டை சார்ந்தவர்கள் விழா எடுத்தார்கள்.

அடுத்து வரும் 28.4.17. மற்றும் 29.4.17 அன்று என 

இரண்டு நாட்கள் சத்தியை சார்ந்தவர்கள் 

விழா நடத்துகிறார்கள்..

எனவே நண்பர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு 

வரும் 28.29 ஆகிய தேதிகளில் உங்களுக்கு வசதியாக ஒரு நாளை தேர்வு செய்து கிளம்புங்க.

சுஜ்ஜால் குட்டை சோதனை சாவடியை கடக்கும் முன் உங்களுக்கு தேவையான குடிநீர் உணவு அடிப்படைத்தேவைகளை சரிசெய்து விட்டு 

வனத்துக்குள் பயணிக்க தொடங்குங்கள் ..

மிருகநேசம் காட்டுகிறேன் என்ற பெயரில் 

அவைகளுக்கு உணவு வழங்குவதாக

ஆபத்தை விலையில்லாமல் வாங்காதீர்கள்.

வாகனம் ஓட்டுபவரும் பயணிப்பவர்கள் பாதை கவனம் இருப்பது போலவே பக்கவாட்டிலும் கவனம் செலுத்துவது ஏராளமான 

வனவிலங்குகளை காண உதவும்

பாதுகாப்பாய் த்ரில்லர் பயணம் செய்ய 

என் வாழ்த்துக்கள்.!

அதெல்லாம் சரிப்பா

எங்களுக்கு சொந்த வாகனம் கிடையாது 

எங்களுக்கு பயணம் செய்ய வாய்ப்பு இல்லையா 

என உங்கள் மனம் நினைப்பது எனக்கு புரிகிறது.

நீங்கள் என் இனம் 

ஆம் எனக்கு சொந்த வாகனம் இல்லை

நமக்குதான் இங்கு அதிக சலுகை விபரங்கள் கீழே.

காலை மாலை என இரண்டு பேருந்துகள் 

தெங்குமாரஹாடா பகுதிக்கு இயக்கப்படுகிறது

காலை நேரத்தில் புளியம்பட்டியில் இருந்தோ 

அல்லது சத்தியில் இருந்தோ பவானி சாகர் அணைக்கு குடும்பத்தோடு பார்வையிட்டு 

அணைப்பூங்காவில் சில மணிநேரத்தை களித்துவிட்டு 

வெளியே வந்த சிகப்பு பெயிண்ட் அடித்தது போல

சூடான அணை மீன்கள் கிடைக்கும் வாங்கி ருசித்துவிட்டு 

சுமார் 12 மணிக்கு காத்திருந்தால் 

பாவனிசாகரில் இருந்து அணைப்பக்தி வழியாக 

தெங்குமாரஹாடாவிற்கு செல்லும் அரசுப்பேருந்து வரும்..

நமக்கு செக்போஸ்ட் செக்கப் போன்ற 

எந்த கெடுபிடியும் இல்லை

நமக்கு இருக்கும் ஒரே சிக்கல் உட்கார இருக்கை கிடைக்கவேண்டும்..

இருக்கை இல்லையென்றால் 

பேருந்தின் மேல் டாப்பில் உட்கார அனுமதிப்பார்கள்..

அப்புறமென்ன மேலே உட்கார்ந்தா

நான்கு திசையிலும் இயற்கை வளத்தை 

கண்டு இரசிக்கலாம்.

#குறிப்பு

மனிதநடமாட்டம் குறைவான பகுதி

விலங்குகளுக்கும் சூதுவாது தெரியாது

பிளஸ்டிக் பொருட்களை அறவே தவிர்ப்பது 

அனைவருக்கும் நல்லது..!

இயற்க்கைக்கும்

இன்னபிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் 

உங்களது த்ரில்லர் பயணம் சிறப்பாக அமைய 

என் வாழ்த்துக்கள்.!

வானவில் காதர்​ திருப்பூர்.641604