பயனர்:வண்ணை சு.பேச்சிமுத்து/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                           வெற்றிலை விவசாயம்
       
                                 வெற்றிலை விவசாயம் என்பது ஒரு புனிதமான தொழில், தற்போது  தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் ஆத்தூர் முக்காணி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் இடைகால் போடிநாயக்கனூர் தேனி மாவட்டத்திலும் மதுரையை அடுத்த சோழவந்தான் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. கொடிக்கால் விவசாயம் என்பது நம் முன்னோர்கள் அந்த காலத்திலே செய்த கூட்டுப் பண்ணை விவசாயம். ஒரு குழுவில் 20 அல்லது 30 விவசாயிகள் இருப்பார்கள். இவர்கள் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம்செய்வார்கள். குத்தகை பணத்தை அவரவர்கள் விவசாயம் செய்வதிற்கேற்ப பகிர்ந்து கொள்வார்கள். சுமார் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தால் முதலில் அதை மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்வார்கள். வெற்றிலை பயிர் சுமார் முன்று ஆண்டுகள் தொடர்ந்து பலன் கொடுக்கும். முதல் ஆண்டில் முதலாவது பகுதியை பயன்படுத்துவார்கள். வெற்றிலைக்கு எப்பொழுதும் தண்ணீர் தேவை. ஆனால் வேரில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது.அதனால் சுமார் 3 அடி அகலத்தில் சுமார் 200 அடி நீளத்தில் மேடு பகுதி இருக்கும் இதை ஒட்டி இதே நீளத்தில் 1 அடி அகலத்தில் 2அடி ஆழத்தில் பள்ளம் இருக்கும். இதை அடுத்து மீண்டும் மேட்டுப்பகுதி இருக்கும். இந்த உயரமான பகுதியைத்தான் கண்ணி என்று குறிப்பிடுவார்கள். இந்த கண்ணிக்கு அடுத்து உள்ள நீள பள்ளப்பகுதியில் எப்போதும் தண்ணீர் நிற்கும். ஆனால் இந்த நீர் கண்ணிப் பகுதியை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் வேரில் தண்ணீர் படாது. வெற்றிலைக்கொடியை நடுவதற்கு முன்பு முதலில் கண்ணிப் பகுதியில் அகத்தி விதையை போடுவார்கள் விதை முளைத்து அகத்தி மரம் வளர்ந்த பின் தான் வெற்றிலைக்கொடியை நட்டு வைப்பார்கள். வெற்றிலை என்பது கொடி இனம். கொடி வளர்ந்ததும் அதை ஏற்கனவே விதை போட்டு வளர்த் அகத்தி மரத்துடன் சேர்த்து கட்டி வளர்ப்பார்கள் பொதுவாக ஆடி மாதத்தில்தான் கொடி நட்டு வைப்பார்கள். இது சுமார் 4 மாத காலத்தில் பலன் கொடுக்க ஆரம்பிக்கும் ஏற்கனவே வெற்றிலைக் கொடியின் ஆயுள் சுமார் 3 ஆண்டுகளாகும் .முதலில் ஆரம்பித்த பகுதி கொழுந்து என்பதாகும். இதற்கு அடுத்த வருடம் இதுபோல் அடுத்த வருடம் வெற்றிலை கொடி வைத்து பயிர் செய் ய ஆரம்பிப்பார்கள். அபபொழுது சென்ற வருடம் வைத்த வெற்றிலைத் தோட்டப்பகுதிக்கு இப்பொழுது பயிர் என்று பெயர்.இந்த வருடம் ஆரம்பித்த பகுதி இப்பொழுது கொழுந்து பகுதியாகும். மூன்றாம் வருடம் விவசாயம் ஆரம்பிக்கும் பகுதி அப்போது கொழுந்து அதற்கு முந்தைய வருட பகுதிக்கு பயிர் என்று பெயர். அதற்கு முந்தைய வருட பகுதி முதுவா எனப்படும்.முதுவா பகுதியில் வெற்றிலை பறித்து முடித்த பின் பங்குனி சித்திரை மாதங்களில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் உள்ள செடி கொடிகளை அழித்து விடுவார்கள்.பின் ஆடியில் அந்த இடத்தில் மீண்டும் கொழுந்து பகுதி உருவாகும். அதனால் வருடம் முழுவதும் வெற்றிலை பறிக்கலாம்.                                                                         
                                               வெற்றிலையே அகத்தி மரத்தில் படர்வதால் கொடிக்காலில் எப்பொழுதும் அகத்திக்கீரைக்கு பஞ்சமிருக்காது. வெற்றிலையின் ஊடு பயிராக வாழை மரம் இருக்கும் இது தவிர முருங்கை மிளகாய் கத்திரி சேம்பு வள்ளிக்கிழங்கு ஆகியவையும் பயிரிடப்படும். அந்த காலத்தில் முதுவா பகுதி அழிக்கப்படும்போது கிடைக்கும் அகத்தி மரக்கட்டைகள் வருடம் முழுவதும் விறகாக பயன்படும். வெற்றிலை விவசயத்தில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது. உதாரணமாக ஆக்கு கட்டுதல் என்பது வெற்றிலைக் கொடி வளரும்போது அது தரையில் படராமல் இருக்க அதை பனை நார் கொண்டு அகத்தி மரத்தில் சேர்த்துக் கடடுவார்கள். அது போல் கங்கு வைத்தல் (கஙகு என்றால் நெருப்புத்துண்டு என்ற அர்த்தம் உண்டு) என்றால் பள்ளத்தில் உள்ள சகதியை அள்ளி வெற்றிலைக்கொடியின் வேர் பாகத்தில் வைப்பதாகும்.வெற்றிலைக் கொடிக்காலை சுற்றி தென்னமட்டைகள் வாழை செத்தைகள் முதலியவற்றைக் கொண்டு வேலி அமைக்கப்படும். கொடிக்கால் உள்ளே செல்வதற்கு வேலியில் 2அடி அகலம் 2அடி உயரம் கொண்ட வாசல் உண்டு இந்த வாசலுக்கு தொண்டு என்று பெயர். இந்த தொணடின் மேல் ஓலை அல்லது வாழை செத்தை போடப்பட்டு தொண்டு வெளியில் தெரியாதவாறு மறைக்கப்பட்டிருக்கும் வழக்கமாக செல்லும் கொடிக்கால் விவசாயிக்கு மட்டும் இந்த தொண்டு எங்கு உள்ளது என்று தெரியும்.பொதுவாக வெற்றிலைக் கொடிக்கால் ஆற்றுப் பாசனப்பகுதியில் அமைக்கப்படும். இருந்தாலும் கோடையிலும் கொடிக்காலுக்கு தண்ணீர் தேவைப்படுவதால் கொடிக்காலுக்குள் கிணறு அல்லது குட்டை இருக்கும்.தமிழ்நாட்டில் கொடிக்கால் விவசாயம் என்று சொல்லப்படுகின்ற வெற்றிலை விவசாயம் இலவாணியர் என்று சொல்லப்படுகின்ற சேனைத்தலைவர் இன மக்களின் பூர்விகத் தொழிலாகும்