பயனர்:ரங்கசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                         'அயல் நாடுகளில் வளரும் தமிழ் புகழ்

தமிழர்கள் பல்வேறு நாடுகளில் தமிழை பரப்பியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அண்மை காலத்தில் படித்தவர்கள் அலுவகப் பணி தேடி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளில் குடியேறி உள்ளனர். உதாரணமாக கூறினால், கோ. சாரங்பாணி, முருகு சுப்பிரமணியம் ஆகியோர் மலாயா, சிங்கப்பூரில் தமிழ்ப் பணியாற்றியவர்கள் ஆவர். மேலும், இது போன்று பல்வேறு தமிழர்கள் தமிழுக்காக தலைநிமிர்ந்து வாழ்ந்துள்ளனர். இருந்தும் அங்கே நம் தமிழர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. பட்டினி கிடந்து பலர் பலியாயினர். தமிழ் மொழி உலகெல்லாம் பரவ பாடுபட்டவர்கள் பலர் உள்ளனர்.இதில், பொன்.இராமநாதன்,சி.கணேசையர், ஆனந்த் குமாரசாமி, தனி நாயக அடிகள். சுவாமி விபிலானந்தர் போன்றோர். இவர்கள் தமிழுக்காவே முழு மூச்சாய் வாழ்ந்தவர்கள்.மேலும், சரவண முத்துப்புலவர் தமிழ் நாளேடுகள், வார, மாத இதழ்கள். சிற்றிதழ்கள், அச்சகங்கள் போன்றவற்றை நிறுவித் தமிழை வளர்த்துள்ளார். அயல்நாடுகளில் இலங்கை வாழ் தமிழர்களின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் உலகில் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் ஒன்று சேர்த்து தங்கள் படைப்புகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இவர்கள் போன்ற தமிழ் மீது நேசமுள்ளவர்களால் தான் தமிழ் மொழி உலகெல்லாம் பரவிவுள்ளது என்பது , நம் தமிழ் உணர்வை மீண்டும் தட்டி எழுப்ப செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரங்கசாமி&oldid=1536721" இலிருந்து மீள்விக்கப்பட்டது