பயனர்:முஹம்மட் ஷப்ராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை தாய்மை


தாய்மை பேற்றின் துடிப்பை, துயரை, அயர்வை திருக் குர்ஆன் தளும்பும் சொற்களால் பதிவு செய்கிறது. இஸ்லாத்தில் ஒரு தாய் என்பவள் மரியாதைக்கும் கொண்டாட்டத்திற்கும் உரியவளாக கருதப்படுகிறாள்.

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே தந்தையை இழந்த நபிகள்  நாயகத்தின் பிறப்பும் ஆறு வயதில் அன்னையை இழந்து அநாதையாகி அவர், கருணையின் முளைப்பாரியாக கண்விழித்த வாழ்க்கைச் சூழலும் பெண்மை வாழ்க என்று அவரது நபித்துவக் காலம் நெடுகிலும் பேரன்புடன் நினைவு கூரச் செய்தது.

ஒரு முறை நபித்தோழர் ஒருவர் அவரது நன்றிக்கடனுக்கு அருகதையானவர்களை வரிசைப்படுத்திடக் கேட்டு நபிகளின் முன் நின்ற போது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என மூன்று நிலைகளில் தாய், தாய், தாய் என்று கூறி நான்காவது தான் தந்தை என நபிகள் நாயகம் தெரிவித்தார்.

மேலும் தாயைப்பற்றி கூறுகையில் *"அவனது அன்னை சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள், சிரமத்துடன் தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும் அவனை சுமப்பதற்கும் பால் குடியை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன"* என்கிறது திருக் குர்ஆன்.

வேறொருவர் நம்மைச் சுமக்கவில்லை, அவளே தான் கரு சுமந்தாள். வேறொருவர் உணவு தரவில்லை, அவளது உதிரம் தான் நமக்கு அமுதமானது. சூழ்கொண்ட கருவறையில் வேறெவரும் நம்மை பாதுகாக்கவில்லை, அவளது வெப்பமும் அவளது சேவிப்புலனும் அவளது விழிகளும் அவளது நடையும் அவளது அசைவும் அவளது தசையும் அவளது எழும்பும் அவளது சுவாசமும் தான் நம்மை சிசுவாகக் காத்து வளர்த்தெடுக்கிறது. நாம் பிழைப்பதற்காக அவள் அனைத்திருப்பாள்.

*"வார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல்* *ரசித்தேன் ...*

*காற்றே இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்...*

*என் தாயின் கருவறையில் மட்டும்..."*

எத்தனை முறை சண்டை போட்டாலும் தேடி வந்து பேசும் தெய்வம் என் தாயைத் தவிர வேறெவரும் உண்டோ...? இந்த உலகிலே...?

*"தூங்கச் செல்லும் முன்னர் பெற்றோர்களுக்காக  பிரார்த்தியுங்கள்.*

*எமது தூக்கத்திற்காக தமது தூக்கத்தை தொலைத்தவர்கள் அவர்கள்"*

சில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவை வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர். நன்றிக்கடனை பெற்றோருக்கு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமையாகும்.

முஹம்மத் நபி ( ஸல் ) அவர்கள், மரணித்த தம் பெற்றோருக்காக  பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் கூட சொல்லி வைத்துள்ளார்கள். இதன்படி பெற்றோர் விவகாரத்தில் இஸ்லாம் எவ்வளவு தூரம் கரிசனை காட்டி இருக்கின்றது என்பது நன்கு தெளிவாகின்றது.

ஒருமுறை  மனிதர் ஒருவர் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து" எனது பெற்றோர் இறந்து விட்டால் அவர்களுக்கு உபகாரம் செய்தல் என்று ஒரு விடயம் உள்ளதா.? எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் நபி ( ஸல் ) அவர்கள்" ஆம்" எனக் கூறிவிட்டு பின்வரும் விடயங்களை குறிப்பிட்டார்கள்.

*"அவர்களுக்காக  பிரார்த்தனை செய்தால், அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருதல், அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல், அவர்கள் மூலமான உறவுகளை சேர்ந்து நடத்தல்"*

இவ்வாறு தாயைப் பற்றியும், தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் மேலும் கூறுகின்றது, தாயை என்று உலகம் போற்றும் என்றும் அழியாத ஓவியம்.