உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:முனைவா் மு.அப்துல் காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பம் புதுப்பள்ளிவாசல் , ஜமாலியா மதரசாவில் ஹசரத்தாகப் பணிபுரிந்த கூன்அசரத் என்ற சையது அப்துல் காதரின் மகனான சை.முகம்மது யாசின் ஆசிரியர் அவா்களுக்கும் உத்தமபாளையம் ரோடு மேஸ்திரி நைனார் முகம்மதுவின் மகளான அலிபாத்திமா அவர்களுக்கும் 1977 ஆம் ஆண்டு மகனாப் பிறந்தவர் மு.அப்துல் காதர். சின்னமனூரிலும் உத்மபாளையத்திலும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து. உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் இளங்கலைக் கணிதப் படிப்பை நிறைவு செய்தவர். மதுரை யாதவர் கல்லூரியில் முதுகலைத் தமிழும், இளம்நிலை ஆய்வாளர் பட்டமும் பெற்றவர். தான் இளங்கலை படித்த உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் 28.06.2001 ஆண்டிலிருந்து தமிழ் விரிவுரையாளராகவும் 17.09. 2007 லிருந்து உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றி, தற்போது இணைப்பேராசிரியராக் பதிவி உயர்வு பெற்று தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாம் மற்றும் இசுலாமியத் தமிழ்த்துறையில் "திருக்குர்ஆன் தமிழுரைகளின் நெறிகள்" என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர். சுமார் 40 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் இஸ்லாமியத் தமிழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். "தீன் விளக்கம் காட்டும் வாழ்வும் வரலாறும்' என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரைக்கு இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் பரிசையும் பாராட்டையும் வழங்கி சிறப்பித்துள்ளது. இளம் ஆய்வாளருக்கான "தமிழ்ச் சுடர்" விருதையும் பெற்றுள்ளார். 2002 லிருந்து 2011 வரை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரியச் செயல்பட்டுள்ளார். பாலார்பட்டி கிராமமக்கள் சிறந்த கிராம சேவைக்கான “பென்னிக்குக் விருதை” வழங்கிக் கௌரவித்துள்ளனர். 2004ஆம் ஆண்டு சிறந்த நாட்டுநலப் பணித் திட்ட அதிகாரிக்கான விருதினை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கொடுத்து கௌரவித்துள்ளது. 2004 - 2005 ஆம் ஆண்டு சிறந்த நாட்டுநலப் பணி அதிகாரிக்கான விருதினை தமிழக அரசாங்கம் கொடுத்து கௌரவித்துள்ளது.. 2006 ஆண்டு இந்திய அரசாங்கம் நடத்திய ‘ஓலைச்சுவடி சேகரிப்பு வாரம்’ நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுள்ளார். 2012 லிருந்து 2014 வரை கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரகச் செயல்பட்டுள்ளார். 2015 லிருந்து தேசிய மாணவர் படை அதிகாரியாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். கம்பம் "அத்தாயிக் கல்விக் குழுமம் * சிறந்த கல்விச் சேவையாளர்" விருதினை கொடுத்து கௌரவித்துள்ளது.

இவர் எழுதியுள்ள நூல்கள் 1. எஸ்.எஸ்.பாக்கவியின் வாழ்வும் வரலாறும் 2. கம்பம் பள்ளத்தாக்கில் இஸ்லாமும் தமிழும் 3. தமிழ் இலக்கணமும் பயன்பாட்டுத் தமிழும்

4. திருக்குர்ஆன் தமிழுரைகளின் காலமும் கருத்தும் 8. சேக்ஸ்பியரின் “கிங் லீயர்" ( பதிப்பாசிரியர்) 6.முத்தொள்ளாயிரம் திறனுரை 7.அரபுத்தமிழ் – தமிழரபி 8. கம்பம் பள்ளத்தாக்கு இசுலாமியச் சுடர்கள்