பயனர்:முத்துராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவடியின் அடையாளம்[தொகு]

தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே ஆவடி அமைந்துள்ளது. 65 சதுர கீலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஆவடி பெருநகராட்சி நீர் நிலைகள் அதிகம் கொண்டது.

அதற்கு ஏற்றாற்போலவே பசுக்களும் அதிகமாக இருந்தது. பசுக்களே ஆவடியின் அடையாளமாக இருந்தது. ‘ஆ’ என்றால் பசு என்று பொருள்படும். அதனால்தான் பசுக்கள் நிறைந்த ஊர் ஆவடி என பெயர்பெற்றது.

ஆனால் 1960 களுக்கு பிறகு ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்பு தொழிற்சாலை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. விரைவாக ஆவடி நகரமாக அசுர வளர்ச்சியடைந்தது.

அதன் விளைவாக ஆவடி என்பதன் ஆங்கில சொல்லின் விரிவாக்கமான Armoured Vehicles & Ammunition Depot of India என்பதே ஆவடியின் அடையாளமாக நிலைபெற்று விட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:முத்துராசு&oldid=2533515" இலிருந்து மீள்விக்கப்பட்டது