உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:பெ.கோமதி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                         நிறைகுடம்
    தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருந்து வருவது நிறைகுட வழிபாடு. “நிறை குடம் தழும்பாது” என்பது பழ மொழி. தமிழ்மக்கள் வீடுகளில் எவ்வித வழிபாடு நடந்தாலும் அவற்றில் முதன்மை இடம் பெறுவது நிறைகுடமாக இருந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இத்தகைய வழிபாடுகளை  நம்மக்கள் மறந்துவிட்டனர் என்றே கூறவேண்டும்.ஆனால் ஈழத்தமிழர்களிடையே இப்வழிபாடு இன்றும் நீடித்து இருக்கின்றது.
  உலகில் தோன்றுகின்ற ஒவ்வொரு உயிரினங்களும் (தாரவ உயிர்களும்)நீரை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்றன. இவ்வாறு நீரிலிருந்து தோன்றுகின்ற உயிரினங்கள் மீண்டும் தண்ணீரிலேயே ஐக்கியமாகிவிடும் என்பது வேதவாக்கு. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளை நீரின்மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டு வருவதே நிறைகுடவழிபாடு.
  உருவ வழிபாடு எனும்பொழுது உடல் அமைப்பு தேவைப்படுகின்றது. அதற்கேற்ப நிறைகுடம் அலங்கரிக்கப்படுகிறது. அதனை மனித உடலாகப் பாவித்து முடி முதல் அடிவரை இருக்கும் உறுப்புகளாக சிலவற்றை உருவாக்கும் வகையில் தேங்காய்,  கூர்ச்சம், மஞ்சள்,குங்குமம், பு, தர்ப்பை ,தங்கம் ,பொன்னரிசி ஆகிய எட்டு மங்களப்பொருள்களால் அலங்கரிக்கப்படுகிறது.

நிறைகுடம் தயார் செய்யும் முறை

   பித்தளை அல்லது செப்பு, அல்லது மண் குடத்தை எடுத்து தூய்மை செய்து கொள்ள வேண்டும்.  அக்குடத்திற்கு முதலில் திரிக்கப்பட்ட  முப்புரி நூல் கொண்டு சுற்ற வேண்டும். பின்னர் ஐம்புாதங்களைக் குறிக்கும் வகையில் சிவப்பு ,மஞ்சள், நீலம், பச்சை , ஆகிய ஐந்து நிறங்களில் நூலை நட்சத்திர வடிவில் சுற்றி வைக்க வேண்டும்.இது மனிதனின் உடலில் உள்ள நரம்புகளைக் குறிக்கும். அடுத்ததாக நறும்புகை காட்டி அகத்தூய்மை செய்ய வேண்டும். பின்னர் தூய்மையான நீரைக்கொண்டு நிரப்ப வேண்டும். அந்த நீர் கெடாதிருக்க கிராம்பு ஜாதிக்காய் தூள், பச்சசைக் கற்புாரம்,குங்குமப்புா ,கஷ்தூரி மஞ்சள் போன்ற நறுமணப்பொருள்களை உள்ளே இடுதல் வேண்டும். ஐந்து மாவிலைகள் அடங்கிய மாவிலைக் கொத்து நிறைகுடத்தின் மேல் பகுதியில் வைத்து பின்பு முடியுடன் கூடிய நல்ல தேங்காயை மஞ்சள் தடவி திருநீறு , சந்தனம் , பொன்னரிசி , குங்கும் வைத்து குடத்தில் வைக்கவேண்டும். இப்பொழுது நிறைகுடத்திற்கு தலை முதலிய உறுப்புக்கள் நிறுவப்பட்டுவிட்டன. அடுத்து முதுகுத்தண்டு  என்ற மிக முக்கியமான  எலும்புப் பகுதியாக கூர்ச்சம் தண்டு வைக்கப்படுகிறது.இது 9 தா்பை புற்களைக் கொண்டு தயார் செய்யப் படுகிறது. 9 என்ற எண்ணிக்கை  உடலில் 9 துவாரங்களைக் குறிக்கும். தேங்காய்முடிப்பகுதியில் தர்ப்பையால் கூர்ச்சமுடி அமைக்க வேண்டும்.இனி மலரால் அலங்காரம் செய்யவேண்டும். இப்பொழுது நிறைகுடம் தயார். ஒரு மேசையைத் தூய்மை செய்து அதன்மீது விரிப்பொன்றை விரித்து அதன மீது தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு  இட்டு அதனில் நெல் அல்லது  பச்சரிசி பரப்பி ஓம் என்று எழுதி அதன்மீது நிறைகுடத்தை வைக்கவேண்டும். இருமருங்கிலும் குத்துவிளக்கினை வைத்து ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்நிறைகுடத்தில் உரிய மந்திரங்களைப் பாடி இறைசக்தியை ஆவாகணம் செய்ய வேண்டும் . பின்பு வழிபாடு செய்வர். 
   இவ்வாறு வழிபாட்டுக்கு நிறைகுடத்தை தயார் செய்வர். இன்றைய காலத்தில் இந்நிறைகுடம் கொண்டு பெரியவர்களை வரவேற்கும் முறையை நாம் பார்க்கின்றோம். இம்முறை பழங்காலம்முதல் இருந்தமைக்கு கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களே சான்று. ஆண்டாள் நாச்சியார் “ புாரண பொற்குடம் அமைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் ” என்று பாடியுள்ளமை இதற்குச்சான்று.இதனை புார்ணகும்ப மரியாதை என்று கூறுவர். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் நிறைகுடம் மேற்கூறிய சில வழிமுறைகளைப் பெற்றிருக்காது.