பயனர்:புஷ்பகவிதா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

= பருப்பொருளின் ஐந்து நிலைகள்:[தொகு]

  • திண்மம்
  • திரவம்
  • வாயு
  • பிளாஸ்மா
  • போஸ்- ஐன்ஸ்டீன் காண்டன்ஸேட்

https://upload.wikimedia.org/wikipedia/commons/4/42/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg

இந்த ஐந்து நிலை கட்டமைப்பு வேறுபாடுகளின் முக்கிய காரணம், அவற்றின் அடர்த்திகள் ஆகும்.

திண்மம்:[தொகு]

திண்மப்பொருட்களில் துகள்கள் மிக இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதால் அத்துகள்களால் எளிதில் நகர முடியாது. திண்மப்பொருள்களிலுள்ள துகள்கள் மிகக் குறைந்த இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணுவிலுமுள்ள எலக்ட்ரான்கள் இயக்கத்திலுள்ளதால் திடப் பொருள்களிலுள்ள அணுக்களுக்கு சிறு அதிர்வுகள் உள்ளன , ஆனால் அவை அந்த இடத்திலிருந்து நகர்வதில்லை.திடப்பொருள்கள் ஒரு திட்டவட்டமான வடிவத்தைக் கொண்டிருக்கும். அவைகள் வைக்கப்படும் கொள்கலனின் வடிவத்தை ஒத்தவை அல்ல. அவைகளுக்கு குறிப்பிட்ட பருமன் உண்டு. ஒரு திண்மப்பொருளில் உள்ள துகள்கள் மிக நெறுக்கமாக கட்டப்பட்டுள்ளதால் அழுத்தத்தின் மூலம் திடப்பொருளின் வடிவத்தை மாற்றுவது கடினம். திண்மப் பொருள்களின் துகள்களுக்கு இடையேயுள்ள ஈர்ப்பு விசை அதிகம்.

திரவம்:[தொகு]

திரவ நிலையில் துகள்களுக்கு இடையே உள்ள இயக்க ஆற்றல் திண்ம நிலையிலுள்ள துகள்களுக்கிடையே உள்ள இயக்க ஆற்றலை விட அதிகம். திரவ நிலையிலுள்ளப் பொருள்களிலுள்ள துகள்கள் ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இல்லாவிட்டாலும் அவை நெருக்கமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட பருமனைப் பெற்றுள்ளன. திரவங்களும் திண்மங்களைப் போல் மிகுந்த அழுத்தத்திற்கு உட்படாது. திரவங்களில் உள்ள துகள்களுக்கிடையே இடைவெளியுள்ளதால் அவை பாயும் தன்மையைப் பெற்றுள்ளது. அதனால் திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை.திரவத்தை எந்த கொள்கலனில் வைக்கிறோமோ, அந்த வடிவத்தைப் பெறும். திரவப் பொருள்களின் துகள்களுக்கு இடையேயுள்ள ஈர்ப்பு விசை குறைவு. === வாயு: === வாயுப் பொருள்களிலுள்ள துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் இயக்க ஆற்றல் மிக ஆதிகம். வாயு நிலையில் உள்ள பருப்பொருள்களின் துகள்கள் கொள்கலனில் முழுவதுமாக பரவியிருக்கும். வாயு நிலையிலுள்ள ஒரு பொருள் அழுத்தத்திற்கு உட்படும் பொழுது அதன் பருமன் குறைந்து துகள்கள் ஒன்றுடன் ஓன்று மோதும் போதுள்ள அழுத்தம் அதிகரிக்கிறது.வாய்க்களில் துகள்களுக்கிடையே உள்ள ஈர்ப்புவிசை மிகவும் குறைவு.வாயுப் பொருள்களுக்கு குறிப்பிட்ட பருமனளவோ, வடிவமோ கிடையாது.

பிளாஸ்மா:[தொகு]

பிளாஸ்மா என்பது பருப்பொருளின் நான்காவது நிலை. ‘பிளாஸ்மா ’என்பதற்கு அதிக வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை என்பது பொருள். பிளாஸ்மா என்பது பூமியில் காணப்படும் ஒரு பொதுவான பருப்பொருளின் நிலையல்ல, மாறாக அது பிரபஞ்சத்தில் காணப்படும் ஒரு பொதுவான நிலை.பிளாஸ்மாவில் அதிக மின்னூட்டம் பெற்ற துகள்கள் அதிக ஆற்றலுடன் காணப்படுகின்றன. பெரும்பாலும் பிளாஸ்மா நிலையில் வாயுக்களை மின்சாரம் பயன்படுத்தி ஒளிரச்செய்ய மந்த வாயுக்களான ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான். பயன்படுத்தப்படுகிறது. நட்சத்திரங்கள் யாவும் மிகை வெப்பப்படுத்தப்பட்ட பிளாஸ்மா பந்துகள் ஆகும். === போஸ்-ஐன்ஸ்டீன் காண்டன்ஸேட்: பருப்பொருளின் ஐந்தாம் நிலை’ போஸ்-ஐன்ஸ்டீன் காண்டன்ஸேட்’. இது அதிக குளிரூட்டப்பட்ட திடப்பொருள். 1995 ஆம் ஆண்டு தொழில் நுட்ப வளர்ச்சியானது விஞ்ஞானிகளை இந்த புதிய ஐந்தாம் நிலை பருப்பொருளை உருவாக்க வழிகோலியது. லேசர்களையும் காந்தங்களைப் பயன்படுத்தி எரிக் கார்னெல் மற்றும் வெயிமென் ஆக்யோர் ருபீடியம் என்னும் மாதிரி தனிமத்தை 1 டிகிரிக்கும் குறைவாக் (சுழி வெப்பநிலைக்கு) குறைத்தனர்.இந்த குறைந்த வெப்பநிலையில் மூலக்கூறுகளின் இயக்கமானது கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தும் வகையில் குறையும். கிட்டத்தட்ட எந்த ஆற்றலும் ஒரு அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்குக் கடத்தப்படாததால் அணுக்கள் ஒன்றாக தடிமனாகின்றன.