பயனர்:புவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவன் @ புவனேந்திரன். கரூர் மாவட்டம், இராயனூரில் வசித்து வருகின்றேன். தற்சமயம் நான் ஒரு இலங்கை அகதி என்றழைக்கப்படுபவன். ஆனால் நான் ஒரு இந்தியக் குடிமகன் என்ற எண்ணமே என்னுள் உள்ளது. ஏனெனில் எனது தாத்தா (எனது தந்தையின் தந்தை) அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, இஞ்சிமேடு அருகே உள்ள தளராபாடி என்னும் கிராமத்தில் பிறந்தவர். ஆங்கிலேயே ஆட்சியின் போது ஏற்பட்ட பஞ்சத்தினால் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பணிபுரிய சென்றுள்ளார். அவருடைய சகோதரர்கள் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு சென்று விட்டனர். எனது தாத்தா அவரைப் போன்று தேயிலைத் தோட்டப் பணிக்காக இந்தியாவிலிருந்து வந்திருந்த எனது பாட்டியைத் திருமணம் செய்துள்ளார். தோட்டப்பகுதிகளில் இருந்த போது ஏற்பட்ட வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அவர்கள் குடும்பத்தோடு இலங்கையின் வவுனியா மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த காடுகளை வெட்டி விவசாயம் செய்து வாழ்ந்துள்ளனர். அங்கும் இனப் பிரச்சனை ஏற்படவே 1990ம் ஆண்டு அகதியாக குடும்பத்தோடு இந்தியா வந்து விட்டனர். எனது தாத்தா, பாட்டி, எனது தந்தை இறந்து விட தற்போது நானும், எனது தாயாரும் அகதியாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றோம்.

B.Sc Maths படித்துள்ளேன். 7 ஆண்டுகளாக தொண்டு நிறுவனம் தன்னார்வத் தொண்டராக பணியாற்றிய நான் தற்போது சொந்தமாக காகிதாதிகள் மற்றும் நகல் எடுத்தல் கடை ஒன்றினை நடத்தி வருகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:புவன்&oldid=1831576" இலிருந்து மீள்விக்கப்பட்டது