பயனர்:பிரித்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்: மதுலிஷா

NAME: MADHULISHA D/O JEYAKUMAR

பள்ளி: சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

School: Chua Chu Kang Secondary School

 

ஹா பர் வில்லா

ஹா பர் வில்லா  - இவ்விடம் பாசிர் பாஞ்சாங்கில் அமைந்து உள்ளது. இது ஒரு கேளிக்கை பூங்கா. இந்தப் பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள்  உள்ளன. மேலும், நூற்று

ஐம்பது பெரிய டியோராமாக்கள் காட்சிகள், சீன புராண கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட நாடோடிக் கதைகள், புனைவுகள், வரலாற்று நிகழ்வுகள் இங்கு இருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இப்பூங்கா டைகர் பாம் பூங்கா என அழைக்கப்பட்டது. இப்பூங்காவில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற படத்தில் இடம் பெற்ற ‘‘சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’’ என்ற பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.

இந்தப் பூங்கா 1937இல்  சீன பர்மானியர்களான அவ் புண் ஹவ், அவ் புண் பார் சகோதர்ரகளால் கட்டப்பட்டது. இவர்கள் டைகர் பாம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர். இப்பூங்கா பாரம்பரிய சீன பண்புகளைக் கற்பிப்பதற்காகக் கட்டப்பட்டது. அவர்கள் தங்களுடைய வர்த்தகத்தைப் பர்மாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1926இல் மாற்றினர். 1935இல் இந்த பூங்காவை இவர்கள் வாங்கினர். 1988ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுற்றுலா கழகம் ‘டைகர் பாம் பூங்கா’ என்பது ‘ஹா பர் வில்லா டிராகன் உலகம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த பெயர் ஹா, பர் என்ற சகோதரர்களின் பெயர்களை வைத்து உருவானது. சீன மொழியில்  ஹா என்றால் புலி. பர் என்றால் சிறுத்தை. இப்பூங்காவில் சிலைகள், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், கரண நிகழ்ச்சிகள், நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்கு செல்பவர்களுக்கு நுழைவு கட்டணம் விதிக்கப்பட்டது.

ஹா பர் வில்லாவில் அனைவரையும் ஈர்க்கும் இடம் அதன் நரக உலகமாகும். அதில் பத்து நீதிமன்றங்கள் உள்ளன. நரகத்தில் நடக்கும் கொடூரத் தண்டனைகளைச் சிலையாக வடித்துக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்காட்சிகள் சீன பூராண கதைகளை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன. 1995இல் இப்பூங்கா பண இழப்புகளைச் சந்தித்தது. 1998இல் கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாகச் செல்ல வசதி செய்யப்பட்டது. 1988இல் இப் பூங்கா டைகர் பாம் பூங்கா என பெயர் சூட்டப்பட்டது. இந்த பூங்கா காலையில் 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை திறந்திருக்கும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பிரித்தி&oldid=2251187" இலிருந்து மீள்விக்கப்பட்டது