பயனர்:பிராமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி.சரவணபவன் மலேசியாவில் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை கொழும்பு விவேகானந்தா கல்லுாரியிலும் பின்னர் உயர் கல்வியை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியிலும் கற்றார்.


தனது பட்டப்படிப்பை பேராதெனிய பல்கலைகழகத்தில் தொடர்ந்த அவர் தனது முதுகலைமாணி பட்டத்தை (Journalism and Mass Media) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.


தனது 18 ஆவது வயதில் தமிழ் செய்திவாசிப்பாளராக சக்தி தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர் பின்னர் இலண்டன் தீபம் தொலைக்காட்சி இலங்கை தேசிய தொலைக்காட்சியிலும் செய்திவாசிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.


2015 ஆம் ஆண்டு சிங்கள நாடக வரலாற்றில் மைல்கல்லாக விளங்கிய இடதென்ன நாடகத்தின் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதுவரையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தும் குரல் கொடுத்தும் உள்ளார். பல ஆங்கில திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும் உள்ளார்.


தனது சிறுவயது முதலே வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பிராமி&oldid=1812704" இலிருந்து மீள்விக்கப்பட்டது