பயனர்:பசுபதி நல்லப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள்

மலேசிய நாடு உலக வரை படத்தில் தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கிறது. வடக்கே தாய்லாந்து நாடும் தெற்கே சிங்கப்பூர் நாடும்  அமைந்துள்ளன. மேற்கே மலாக்கா நீரிணையும் கிழக்கே தென்சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது எங்கள் மலேசியா நாடு. மொத்த மக்கள் தொகை 31.7 மில்லியன் ஆகும்.  இதில் மலாய்க்காரர்கள் 68.8   சதவீதமாகும். சீனர்கள் 23.2 சதவீதமாகும். இந்தியர்கள் 7.0 சதவீதமாகும்.

மலேசியாவில் தமிழ் அன்னை மகுடத்தில்  வீற்றிருப்பதற்குக் காரணம் எங்கள் நாட்டில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகளே என்றால் அது மிகையாகாது. 1816ஆம் ஆண்டு 21 அக்டோபர் திங்களில் ஆதவன் தமிழோடு உதித்தான். அன்றுதான் எங்கள் நாட்டில் தமிழ்க்கல்வி எனும் அரும்பு பூத்து மலர்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பசுபதி_நல்லப்பன்&oldid=3523098" இலிருந்து மீள்விக்கப்பட்டது