பயனர்:தமிழன் வீரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    தமிழன் வீரமணி(சமூக ஆர்வலர்)
தமிழன் ப.வீரமணி
தமிழன் வீரமணி
                இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 1994ம் ஆண்டு பிறந்தார்.பள்ளி காலங்கள் தொட்டே தமிழின் மீதும் கலைகளின் மீதும் அதிக ஆர்வம் கொண்டு விளங்கினார்.


    சமூக ஆர்வம்:
                இயற்கையின் மீது கொண்ட பற்றினால் இயற்கை ஆர்வலராகவும்,நாட்டு நடப்புகளை தன் கட்டுரை மூலமும் பாடல் மூலமும் மக்களுக்கு கொண்டு செல்வதும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதும் கொண்டார்.மேலும் தனி ஆளாகவும் கூட்டாகவும் நூற்றுக்கும் அதிகமான மரங்களை நட்டு பராமரித்த,மரம் நடுதலின் நன்மைகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறார்.இவருக்கு 2013ம் ஆண்டு இந்திய நாட்டின் முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களின் "இளம் சாதனையாளர்"விருது வழங்கப்பட்டது குறிபிடத்தக்கது.


தமிழன் வீரமணி
பெயர் தமிழன் வீரமணி

(இயற்பெயர் :வீரமணி )

பிறப்பு 1994 ,தமிழ்நாடு
நாடு இந்தியா பணி சமூக ஆர்வலர்,சமூக பாடகர்,

கட்டுரையாளர்,இயற்கை ஆர்வலர்,

மாநிலம் தமிழ்நாடு அறியப்படுவது தமிழ் தேசியம்

சார்ந்துள்ள இயக்கங்கள்  :

  • இனி ஒரு விதி செய்வோம் சமூக விழிப்புணர்வு இயக்கம்(ஒருங்கிணைப்பாளர்)
  • உலகத் தமிழர் பேரவை
  • பல்லுயிர் பாதுகாப்பு இயக்கம்(நிறுவனர்)
  • விவசாயம் காப்போம்
  • அப்துல்கலாம் பசுமை அறக்கட்டளை

போன்ற பல்வேறு சமூக பணிகளில் இடம் பெற்றிருக்கிறார்.


விருதுகள்:

1.இளம் சாதனையாளர்(2013)

2.சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விருது(2016)

3.தமிழ் இளம் பரிதி(2017)

4.இயற்கை பாதுகாவலர்(2019)

5.காமராசர் தன்னலம் கருதா விருது(2020)

6.சங்கத் தமிழன் விருது(2021)

7.அன்னை தெரசா விருது(2021)

8.இந்தியா சாதனையாளர் விருது

[India's Most Revolutionary Environmentalist] (2022)

மேலும் பல விருதுகளையும் பல்வேறு துறை சார்ந்த பாராட்டு சான்றிதல்களும் பெற்று, ஒரு முன் மாதிரி இளைஞராக வலம் வருகிறார்.


பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தின் 2160 மணி நேர உலக சாதனை நிகழ்வில் சாதனை நிகழ்த்தினார்

என்பது குறிப்பிடதக்கது.


தன்னுடைய எழுத்துகளின் மூலமும் சமூக சிந்தனை மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வரும் இவர்,"மனிதா நான்தான் இயற்கையடா"பாடல் பல இயற்கை ஆர்வலர்களின் மனதை கவர்ந்தது.

ஈழ தமிழ் மக்களின் நிலையை" எங்கே போனது என் இனம் அன்று அகதிகளாக"என்ற பாடல் வாயிலாக வெளிபடுத்தினார்.தாய்க்கு ஒரு தாலட்டு பாடல் தன் தாயின் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இன்னும் பல சமூகம் சார்ந்த பாடல் களை பாடிவரும் போதிலும் இவருக்கான அங்கிகாரம் பெருமளவில் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.


தமிழ் சார் நூல்களின் மீது அதீத பற்று கொண்ட இவர் எல்லா தரப்பு மக்களும் நூலகம் சென்று படிப்பதென்பது அரிதானது,எனவே இன்றைய சூழ்நிலைக்கேற்ப அனைவரின் கையிலும் உள்ள கைபேசி மூலமாக பழமையான மற்றும் அனைத்து விதமான தமிழ் நூல்களையும் தொகுத்து இணையநூலகம் https://inaiyanoolagam.blogspot.com/?m=1 என்கிற அமைப்பு மூலம் யாரும் எங்கிருந்தும் இணைய உதவியுடன் ஆயிரக்கணக்கான நூல்களை தரவிறக்காமல் படித்து பயன் பெரும் வகையில் உலாவியை வடிவமைத்து திறம்பட செயல்படுத்தி வருகிறார்.

2020 ஆம் ஆண்டு இவரின் சேவையை பாராட்டி புத்தக கண்காட்சியில் சிறந்த நூல் ஆர்வலர் விருது வழங்கப்பட்டது அதை தன் தாயாருக்கு (கண்ணம்மாள்)அற்பணித்தார்.

அறம் வளர்த்த தமிழா மரம் வளர்ப்போம் வா என்ற மந்திர வார்த்தையை கையில் எடுத்து பல நூற்றுக்கணக்கான மரகன்றுகளை நட்டு வைத்ததோடு,விதை பந்துகளை மண்ணில் வீசுவதன் மூலம் மரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் 12000 க்கும் அதிகமான விதை பந்துகளை வீசி மண்ணிற்கும் மக்களுக்கும் தொண்டு செய்து வருகிறார்.இன்னும் பல சமூக பணிகளை அன்றாடம் சிறப்பாக செய்துவருகிறார்.

http://tamilanveeramani.blogspot.com/?m=1


நிறுவனம்:

Tamizhanbotcast©

ThamizhnMediaNetwork (CEO)

BOOKGARDEN&BOOKBASKET (MD)

தமிழ் ஒலி இணைய வானொலி (நிர்வாக இயக்குனர்)




தொடரட்டும் உங்கள் இலக்கு......................................................................................


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழன்_வீரமணி&oldid=3934568" இலிருந்து மீள்விக்கப்பட்டது