பயனர்:டோராவெங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.




# ஒப்பாரி #[1][தொகு]

நாம் நமது கிராமங்களில் பார்த்து கேட்டு ரசித்த இலக்கியத்தில் எழுதப்படாத பாடல் வகை தான் இந்த ஒப்பாரி பாடல்கள். இந்த ஒப்பாரி பாடல்கள் சாவில் அதாவது இறப்பின் போது பாடுவதாகும். இதை பெண்களே பாடுபவர்கள். இப்படிப்பட்ட பாடல்களுக்கு அவர்களாகவே இசைஞானியாக மெட்டு அமைத்துகொள்வார்கள். பாட்டிற்கு தாலமில்லை, எதுகையில்லை, அடுக்குத்தொடர்கள் இல்லை வல்லின, மெல்லின, இடையின வேறுபாடுகளை காட்ட கவிதைப் பேரரசுமில்லை. அவர்கள் பேப்பரிலும், பேனாவிலும் எழுதிப்படிப்பதும் இல்லை. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் சாவுக்குச் சென்று ஒப்பாரி வைப்பவர்கள் செத்தவர்களின் புகழை எடுத்துக் கூறுவார்கள். சிலர் இவர்களது வீட்டில் உறவினர்களை பிரிந்து வாழும் நிலையை வந்திருக்கும் சாவு வீட்டில் இட்டுக்கட்டி அழுவதும் வழக்கம். சிலர் இறந்தவரின் குடும்பம் இனி சந்திக்கப்போகும் சிக்கல்களை எடுத்துக் கூறுவதாகவும் அமையும். இந்த ஒப்பாரி இறந்தவரின் உடலை சூழ்ந்து நின்றுகொண்டு தங்களது மார்பில் அடித்துக்கொண்டு பாடுவார்கள். சில நேரங்களில் பெண்கள் ஒரு குழுவாக கைகோர்த்துக்கொண்டு, குணிந்துகொண்டு பாடுவார்கள். இந்த ஒப்பாரி பாடல்கள் பாடும்போது அவர்களின் துக்கமும் சேர்ந்துகொள்வதால் மிகுந்த உயிரோட்டத்துடன் கானப்படும். இந்த ஒப்பாரி பாடுவதன் மூலம் தங்களது மன அழுத்தம் முழுமையாக குறைகிறது. இதனால் நம் கிராமங்களில் பெண்கள் ஆண்களின் சராசரி வயதைவிட அதிகமாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்றோ துக்கத்தை வெளிப்படுத்த தெரியாமலும் ஒப்பாரி வைப்பதை ஏலனமாகவும் பார்க்கிறார்கள் இன்றைய நவநாகரீக பெண்கள். எடுத்துக்காட்டாக: (இறந்தவரின் மனைவிகுறித்த ஒப்பாரி) தனி ஒருவள் குழு பட்டு பொடவ எடுத்து பொடவ எடுத்து உன் பத்தினிக்கு போத்தி ஒரு போத்தி ஒரு வெள்ளி கொலுசு எடுத்து கொலுசு எடுத்து உன் வீட்டுக்காரி காலில்போட்டு காலில் போட்டு தங்க தாலி செஞ்சி தாலி செஞ்சி உன் தங்கத்துக்கு கட்டினியே கட்டினியே அந்த தங்க கையாலயே கையாலயே நீ தட்டி பறிக்கிறீயே பறிக்கிறியே வெள்ளியிலே மெட்டிபோட்டு மெட்டிபோட்டு வேந்தரெல்லாம் பார்க்கும் வண்ணம் பாக்கும்வண்ணம் நீ வேறமார்க்கம் போறீயே போறியே !!!!!

	இப்படி ஒருவரோடு ஒருவராக கூடி பாடி ”ஓ” வென அழுவார்கள்.
  1. ராமச்சந்திரன் (2015). வெளியே தெரியாத வெளிச்சம்.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:டோராவெங்கி&oldid=1964215" இலிருந்து மீள்விக்கப்பட்டது