பயனர்:ஞா.லாவண்யாபிரகாஷ்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை: தலைப்பு:"பண்-ஓர் பார்வை" குறிப்புச்சட்டகம்: • முன்னுரை, • பண்-ஓர் ஒப்பீடு, • இசை நூல்கள், • இசை வளர்த்த சான்றோர்கள், • இசை உலகில் புகழ் அடைந்தவர்கள், • இசையும் நாடும், • முடிவுரை. முன்னுரை:

                     இசையோடு பிறந்து,இசையோடு வாழ்ந்து,இசையோடு செல்வது மானிடர் வாழ்க்கை.உலகில் மொழி தோன்றியதற்கு முன்பே இசை பிறந்து விட்டது என்பர்.மனிதனின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு மிகச் சிறந்த கருவி இசை.இக்கட்டுரையில் இசைப் பற்றியும்,இசை வளர்த்த சான்றோர்கள் பற்றியும் தற்கால் இசை வளர்ச்சி பற்றியும் காண்போம்.

பண்-ஓர் பார்வை:

                   இசைப் பற்றி "நரம்பின் மறை"என்று மிகப் பழமையான  தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் கூறுகின்றது.
                   பண்டையக் காலம் முதலே தமிழர் வாழ்வில் இசை  மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.பண்கள்,இசை கருவிகள்,இசைக்கலைஞர்கள்,இசைப் பாடல்கள், பற்றிய குறிப்புகள் பல தமிழ் நூலில் உள்ளன.பாணன்,பாடினி,கூத்தன்,விறலி,என்று பல கலைஞர்கள் இருந்தனர்.
               " குழலினிது யாழினிது"என திருக்குறள் கூறுகின்றது.மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இசை இன்றியமையாத இடத்தை வகிக்கிறது.

இசை நூல்கள்:

                        " பாட்டைத் திறப்பது பண்ணாலே"என தமிழ் செய்யுள் கூறுகிறது.இசை நூல்கள் சிலவற்றைக் காணலாம்.

பரிபாடல்,பஞ்ச மரவு,வாய்ப்பியம்,பஞ்ச பாரதீயம்,பதினாறு படலம்,இசைநுணுக்கம்,தேவாரப்பாடல்கள்,திருவாசகம், திருவருட்பா, நாலாயிரப்திவ்வியபபிரபந்தங்கள் ,திருப்புகழ்,இந்திரகாளியம்,சருவ சமயக் கீர்த்தனைகள் என்பன சிலவாகும். இசை வளர்த்த சான்றோர்கள்;

                                                        சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் திருவாரூர் தியாகராச சுவாமிகள்(கி.பி 1767-1847)

முத்துச்சாமி தீட்சிதர்(கி.பி.1775-1835)சியாமா சாஸ்திரிகள்(கி.பி 1762-1827) இவர்கள் கருநாடக இசையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

                                                   அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,திருஞானசம்மந்தர் போன்றோர் நற்றமிழை இசையுடன் வளர்த்தனர்.

இரண்டாம் சரபோசி மன்னர் காலத்தில் வாழ்ந்த ஆனை,அய்யா என்ற இரு சகோதரர்கள் இசை வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றனர். ஆழ்வார்களில் 1361 பிரபந்தங்கள் பாடி திருமங்கையாழ்வார் பூசித்து வந்தார். குலசேகர ஆழ்வார் 105 பாசுரங்கள் பாடியுள்ளார்.இவர் அருளியது பெருமாள் திருமொழி ஆகும். 16000 பாடல்கள் பாடியுள்ளார் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர். மாரி முத்து அவர்கள் தமிழ் கீர்த்தனைகள் பாடியுள்ளார். காவடிச்சிந்து பாடுவதில் சிறந்தவரான அண்ணாமலைச்செட்டியார் இசை உலகில் பெரும் பங்கு வகித்தார்.இவர் காலம் 1861-1890 வரை ஆகும். பாரதியார்,பாரதிதாசன்,நாமக்கல் கவிஞர்,பெ.தூரன் போன்றோர் பங்கும் சிறந்தது. இசை உலகில் புகழ் அடைந்தவர்கள்:

                                                                   எம்.கே.தியாகராச பாகவதர்,எம்.எஸ். சுப்பு லட்சுமி,கே.பி சுந்தராம்பாள்,டி.ஆர் மகாலிங்கம்,கிட்டப்பா,படேகுலாம் அலிகான் போன்றோர் புகழ் பெற்றவர்கள்.

மிருதங்க இசையில் புகழ் வாய்தவர்கள்: பாலக்காட்டு மணி அவர்கள்,டி.கே.மூர்த்தி அவர்கள்,ரகு,பழனி சுப்பிரமணியம் அவர்கள்,காரைக்குடி மணி அவர்கள் மிருதங்க துறையில் வல்லுநர்கள் ஆவர். வயலின் துறையில் புகழ் அடைந்தவர்கள்:

திருக்கொடி காவலர் கிருட்டினர்,ராச மாணிக்கம்,டி.என்.கிருட்டினன்,எம்.எசு.கோபாலக்கிருட்டினர் அவர்கள்,லால்குடி செயராமன்,லலிதா நந்தினி அவர்கள்,குன்றக்குடி வைதியநாதன், போன்றோர்கள் சில வல்லுநர் ஆவர்.

பிற இசை வல்லுநர்கள்: மாண்டலின் சீனிவாசன்,தபேலா சாகிர் உசேன்,கோட்டுவாத்தியம் ரவிகிரன்,கிதார் ரவிசங்கர், போன்றோர் சிலர் ஆவர். இசையும் நாடும்: நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த பொழுது பாடல்கள் மூலம் விடுதலை வேட்கை தூண்டியவர்கள் நம் கவிஞர்கள். ஊழிக்காலத்தின் உடுக்கைச் சத்தத்தையும்,மரகத வீணையின் ராகங்களையும் பாரதியின் பாடல்களில் காணலாம் என பத்மதேவன் அவர்கள் கூறியுள்ளார். "உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்கிறார் பாரதி. தற்போது திரைத்துறை இசையின் வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது.அக்காலத்தில் இருந்து தற்போது வரை இசை வளர்ச்சி பெற்று வருகிறது. முடிவுரை: "கம்பனின் விருத்தப்பா இளங்கோவின் அகவற்பா வள்ளுவனின் குறள் வெண்பா உள்ளம் இனிக்க வஞ்சிப்பா,மருட்பா இத்தனை பாவிருக்கு பொருள் வளம் இருக்கு சொந்த மொழியினில் உந்தன் அறிவினைப் பெருக்கு" என்று பேராசிரியர்.மே.வே.சக்கரவர்த்தி அவர்களின் கவிதை வரியை மனதில் கொள்வோம்!தமிழை உயர்த்துவோம்! துணைநூல் பட்டியல்: தமிழ் எளிது –ஆசிரியர்( முனைவர்.ச.ப.அருளானந்தம்) தமிழ்நாடு பாடநூல்கள் பாரதியின் கவிதை தொகுப்பு-(கவிஞர் பத்மதேவன்)