உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ஜவஹர் அலி/அரசியலும் சமயமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசியலும் சமயமும் வெவ்வேறானவை அல்ல.

அரசியல் சார்ந்து சமயத்தை முதன்மை படுத்துவதும், சமயம் சார்ந்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதும் உலக வரலாற்றில் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டிருப்பவை.

பௌத்தம்[தொகு]

இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னன் எல்லாளனை வெற்றிகொள்ள துட்டகைமுனு "பௌத்தத்தை நிலைநாட்டுவதற்கான போர்" எனும் கவர்ச்சிகரமான கோசத்தை 2500 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்திருந்தான். இங்கே இது அரசியல் சார்ந்து சமயத்தை முதன்மைப் படுத்தலாகும்.

போரில் வென்றதும் துட்டகைமுனு கதிர்காம கந்தனுக்கே முதலில் நேற்றிக் கடன் செய்கிறான்; என்றாலும் அவன் பௌத்தச் சமயத்தை இலங்கை எங்கும் தலைத்தோங்க செய்பவன் என பௌத்த பிக்குகளின் கோசங்களும் செயல்பாடுகளும், சமயம் சார்ந்து அரசியல் நகர்த்தியதாகும்.

இந்நிலை இன்று இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலேயே அரசியல் கோமாளியாக கருதும் "மர்வின் சில்வா" வரை தொடர்கிறது.

கிறிஸ்தவம்[தொகு]

மத்திய கிழக்கில் உருவான கிறிஸ்தவம் உரோமர்களுக்கு அறிமுகமாகாமல் இருந்திருந்தால் கிறிஸ்தவம் உலகெங்கும் பரவியிருக்க வாய்ப்பேயில்லாமல் போயிருக்கும்.

கிறிஸ்தவம் எனும் சமயம் சார்ந்த அரசியலை உரோமர்கள் முன்னெடுக்காமல் இருந்திருந்தால் ஐரோப்பிய முழுதுமான உரோமர் செல்வாக்கு கிட்டாமலும் இருந்திருக்கும். கைப்பற்றும் நிலத்தின் ஆட்சியை நியாயப்படுத்த மதம் பெரிய ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சமயம் சார்ந்த அரசியலும், அரசியல் சார்ந்த சமய முன்னெடுப்புமே கிறிஸ்தவம் உலகம் முழுதுமாக பரவக் காரணமாகின.

உரோமர்கள் கிறிஸ்தவம் சார்ந்த அரசியலை இங்கிலாந்தில் முன்னெடுத்தப் போது அதனை அந்நாட்டவர் எதிர்த்ததும், ஒரு காலக்கட்டத்தில் முற்றுலும் (கத்தோலிக்க) கிறிஸ்தவத்தை தடை செய்த நிலைப்பாடுகள் கூட உள்ளன. அதேவேளை பிரித்தானியர் தனது காலனியாதிக்கத்தை எங்கெங்கு நிலைநிறுத்த முயன்றனரோ, அங்கெல்லாம் கிறிஸ்தவ சமயம் சார்ந்த முன்னெடுப்பையும் கூடவே பயன்படுத்திக்கொண்டனர். அது அப்படியே இன்று அமெரிக்கா வரை சமயம் சார்ந்த அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதைக் காணலாம். இந்த சமயம் சார்ந்த அரசியல் தற்போது சற்று மாறுபட்ட வகையில் உளவறிய உதவும் ஒரு சக்தியாக மாறிவருகிறது. சமய நடவடிக்கை அல்லது பணியெனும் பெயரில் அமெரிக்காவால் எந்த நாட்டிற்கும் தமது சாட்சியாளர்களை அனுப்பவும், அந்தந்த நாடுகளில் இருந்து கொண்டே அந்தந்த நாட்டின் எந்த மூளையில் உள்ள தரவுகளை பெறவும் முடிகிறது. இதுவும் அரசியல் தான். மாபெரும் உளவறியும் அரசியல்.

இஸ்லாம்[தொகு]

பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதி அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்ட, பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதிய, தந்தை இறந்துவிட்டால் தந்தையின் மனைவியை (தாயை) மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதராணமாக இருந்த ஒரு சமுதாயக் கட்டமைப்பை எதிர்த்துத் தோன்றிய இஸ்லாம் (ஆதாரம் பார்க்க: [1]) எனும் மார்க்கம் இறைவனே உலகுக்கு அருளிய மார்க்கம் எனும் வகையில், இஸ்லாம் அல்லாதோர் "காபிர் (நிராகரிப்போர்)" அல்லது முஷ்ரிக் (இணை வைப்போர்) எனும் வகையிலும் பரப்பப் பட்டுள்ளது. இதனை சமயம் சார் கொள்கையுடன் அல்லாமல் அதனுள் இருக்கும் அரசியலைப் பார்த்தால் அங்கே முஹமது நபி உலகில் சிறந்த ஒரு அரசியல் ஞானியாக தென்படுவார்.

இன்று உலகளவில் மொழி, நிறம், சாதி போன்றவற்றிற்கு அப்பால், சமயச் சார்நிலையில் ஒன்றுபட்ட பலமாக இஸ்லாம் இருப்பதில் அதன் அரசியலும் தங்கியுள்ளது. ஆனால் சமயம் சார் நிலையில் உளவு நடவடிக்கைகள் அவர்களிடம் காண்பதற்கில்லை.

இந்து[தொகு]

அன்மையில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை வடக்கில் பல பாடசாலைகளுக்கு இந்திய "குருஜி" என்பவர் சென்று தனது குரு 300 ஆண்டுகள் வாழ்வதாக ஒரு கட்டவிழ்ப்பை மேற்கொண்டு வருகிறார். இதன் பின்னனியும் வருகையும் அரசியல் சார்ந்த உளவுகளாக இருப்பதனை அரசியல் அவதானிகளால் எளிதாக உணர முடியும்.

இந்தியாவில் இருக்கும் ஒரு போலி சாமியாருக்கு அமெரிக்காவிலும் உலகநாடுகளிலும் உடனடியாக எவ்வாறு கிளைகள் ஏற்படுகின்றன? அக்கிளைகளில் சாமியரின் பக்தர்களாக அந்நாடுகளுக்கு ஊடுருவுவோர் எவர்? புதிதாக தோன்றும் ஒரு சாமியார் உலகளவில் பிரசித்திப் பெற பின்னனியில் இயங்கும் ஊடகமும், ஊடகத்தின் பின்னாலுள்ள சக்திகளும் எவை? இதில் ஒரு அரசியல் பின்புலமும் உளவு நடவடிக்கையும் இருப்பது தெரியுமா?

அதே சாமியரை தேடி ஐரோப்பிய, அமெரிக்க வெள்ளையர்கள் வருவதும் கூடவே இருப்பதும், இந்த சாமியாரின் பின்னாலுள்ள உளவு நடவடிக்கையின் பின்னனியை அறிய வரும் இன்னொரு உளவு பிரிவு என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? (உளவுக்கு உளவு)

இந்திய அமைதிப் படை காலத்தில் இலங்கை எங்கும் புலி பள்ளும், நரி கொம்பும், பாசி மணியுடன் வீதி வியாபாரிகளாகவும், குறிச்சொல்பவர்களாகும் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஒருநேர உணவுக்கு போதிய வசதியற்ற இந்திய வீதியோர வியாபாரிகள் பல்லாயிரம் செலவளித்து விமானம் ஏறி இலங்கைக்கு எப்படி வீதியோர வியாபாரம் செய்ய வந்தனர் என்பதும் அதன் பின்புல உளவையும் விசயமறிந்தோருக்கு தெரிந்து தான் இருந்தது. அதில் பலர் காவியுடை அணிந்த சமய சாமிகளாகும். இதிலும் ஒரு சமய அரசியல் உண்டு. உளவுப் பிரிவின் வேவும் உண்டு.

இப்படி அரசியலும் சமயமும் வெவ்வேறானவை அல்ல; ஒன்றுடன் ஒன்றுக்கு நெருங்கியத் தொடர்பு உண்டு.

இதனை ஒரு அடிமட்ட அரசியல் தொண்டனாலும், பக்திவயப்பட்ட சமயவாதியாலும் உய்த்துணர முடியாது.