பயனர்:சேவியர் ராஜப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றத்திற்கான பயணம் சேவியர் ராஜப்பா- இராமேசுவரம் டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்களின் இந்தியா 2020 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெங்களூருவைச்சேர்ந்த சையது சஜ்ஜாத் அஹமது என்றசுற்றுச்சூழல் ஆர்வலர், தானே வடிவமைத்துத் தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் காரில் பெங்களூருவிலிருந்து புதுடில்லிவரை சென்று திரும்பியுள்ளார். 6000 கிலோ மீட்டர் பயனத்தில் அவர் ச்ந்தித்த சவால்கள் அதிகம். தொடர்ச்சியாக பெஙளூருவிலிருந்து கன்னியாகுமரி சென்று அங்கிருந்து, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்களின் சொந்த ஊரான ராமேசுவரத்திற்கு இன்று வந்தார்.இரண்டாவது பயணம் 2000 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கியது. எதற்கு இந்தப்பயணம்? சூரியன் தரும் வெப்பமும் ஒளியும் இல்லையென்றால் இந்த உலகம் இயங்க முடியாது. தேவைக்கு ஏற்றாற்போல மனிதர்கள் தங்கள் வாழ்வை தகவமைத்துக்கொள்ள சூரிய ஒளி அவசியம். சூரியனின் ஒளி ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றி மின்சக்தியைப் பெறலாம் என்பது எல்லோரும் அறிந்ததே. அந்த மின்சக்தியைக்கொண்டு ஊர்திகளை இயக்கலாம் என்பதும் நமக்குத்தெரியும். சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் அதே நேரத்தில், குறைந்தபட்ச செலவில் மாற்று எரிசக்தியாககவும் பயன்படும் சூரிய மின்சக்தியைக்கொண்டு இயக்கபடும் ஊர்திகள் இன்று வரவேற்பு பெற்று வருகின்றன. அவ்வகையில் சஜ்ஜாத்தின் வாகனம் சிறப்பாகக் கவனத்தை ஈர்க்கின்றது. இவரது சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணியைப் பாராட்டி கர்னாடக அரசு, ‘ஏ பி ஜெ அப்துல் கலாம் பரிசாரா ப்ரசாஸ்தி 2006’ என்ற விருதினை அளித்து உற்சாகப்படுத்தியது. 2013 ஆம் ஆண்டில் இவர் கண்டுபிடித்த இந்த சோலார் கார் இது வரை ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. இவரது பயணம் இன்னும் முடியவில்லை. ஸ்வஸ்தா பாரதம் முதல் வழமான பாரதம் வரை என்றும் தூய்மையானம் பாரதமே நலமான பாரதம் என்றும் முழக்கமிடும் இவர், அப்துல் கலாமின் இந்தியா 2020 ன் ஒரு அம்சமானா மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை மக்களிடத்தில் எடுத்துச்செல்லவே இந்தப்பயணம் என்றார். இந்தியா முழுவதும் சுற்றிவந்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பும் இவரை வாழ்த்துவோம்! சையது சஜ்ஜாத் அஹமது பெங்களூரு 9845229757,92443194596, 08022296009 E mail lunarahmed@yahoo.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சேவியர்_ராஜப்பா&oldid=2081578" இலிருந்து மீள்விக்கப்பட்டது