பயனர்:செம்மொழி.சிபிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமம் சிவப்பிரகாசவேலு நாயனார் மகன் செம்மொழிக் கண்ணன் நாயனார் மகன் செ.சிபிவெங்கட்ராமன் ஆவார். அழகிய தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர். தாடி வாத்தியார் என எல்லோராலும் அழைக்கப்படும் சிவப்பிரகாசவேலு நாயனாரின் இண்டாவது மகனின் மூத்த மகன். தாயார் திலகவதி அம்மையார். பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் இளங்கலை தமிழ். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் படிப்பு.புறநானூற்றில் மனித குல மேம்பாடுகள் என்னும் தலைப்பில் முனைவர் வ.குருநாதன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் முடித்தவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் புறநானூற்றில் பாட வேறுபாடுகள் என்னும் தலைப்பில் முனைவர் த.கலாஸ்ரீதர் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் மேற்கொண்டு வருபவர். இவை தவிர பி.எல்.ஐ.எஸ்.., கணினி அறிவியலில் டிப்ளமோ, ஓலைச்சுவடி இயலில் டிப்ளமோ முடித்தவர். ஓலைச்சுவடிகளின் மீது தீராத காதல் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செம்மொழி.சிபிராம்&oldid=3386751" இலிருந்து மீள்விக்கப்பட்டது