பயனர்:செங்குட்டுவன்.அ/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவுடைமை


ig>படிமம்:படங்கள்|54.1px|frameless|வலது]] பொதுவுடைமை என்பது ஒரு குடும்பத்திலுள்ள சொத்துகள்,தொழில்கள்,இலாப நட்டங்கள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ,அது போல் கிராமத்திலோ,நாட்டிலோ உள்ள மேற்க்கண்டவை எல்லாம் அம்மக்களுக்கு பொதுவானது ஆகும். பொதுவுடைமைஎன்பதுபொதுமனிதம்,சமத்துவம்,கொண்டது,தேசியத்திற்கும், நீதிக்கும்,பகுத்தறிவிற்கும் ஒத்தது.பொதுவுடைமை வேறு;பொதுவுரிமை வேறு.பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்;பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஓழித்துவிடுமோமானால் தனிவுடைமையை மாற்ற அதிகபாடுபடாமலேயே நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும்.உண்மையான பொதுவுடைமை நிலைத்து நிற்கும்.சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய்,ஏழைகளாய் இருக்கிறார்கள். தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம்.சாதிநிலை,அந்தந்தசாதியில்பிறந்தவனுக்குதான்உண்டு.பிறக்காதவனுக்கு கிடையவே கிடையாது.மேல் நாட்டில் சாதி இல்லாததால் வகுப்புசண்டை துவங்கவேண்டியதாயிற்று. இங்கு சாதியிருப்பதால் பொதுவுடைமைக்கு முதலில் சாதி சண்டை துவங்கியது.

                             பொதுவுரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்சேரும்.  பொதுவுடைமை என்றால் நாட்டு சொத்துக்கள் சர்க்காருக்கு சொந்தம்நிலமாக இருந்தால் எல்லா மக்களுக்கும் பாடுபட்டு தொழில் செய்வது; தொழிற்சாலையாக இருந்தால் எல்லோரும் தொழில் பண்ணி,பாடுபட்டு வரும் பொருளை  எல்லோரும் அனுபவிப்பது. நாட்டு மக்கள் எல்லாம் ஒரு குடும்பம்  போல்;எல்லா மக்களும் பாடுபடவேண்டும்; வருகிற லாபம் விலைபொருள் முதலியவற்றை எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது.  இதுதான் அடிப்படைத் தத்துவமே மனிதன் கவலையற்று வாழவேண்டும் என்பதுதான்.சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த  

வாழ்வாகும்.மனிதன் சிந்தித்து அறிவை வளர்த்துக்கொண்டே போனால் பொதுவுடைமையில் கொண்டுபோய்விடும்.

                      தோழர்களே! பொதுவுடைமை இரஷ்ய  நாட்டில் கடவுளோ,மதமோ,சாஸ்திர நம்பிக்கையோ இல்லை.உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்கிறநிலையுமில்லை.எல்லோரும்சமமானவர்கள்;எல்லோருக்கும்சம்பளம்,வாழ்க்கைவசதி ஒன்றுதான்.வேலைதான் வேறு,வேறு.அங்கு மேல்,கீழ் என்று பாராட்டப்படுவதில்லை. அங்கு தனிமனிதனுக்கு சொத்து வைத்துக்கொள்ள உரிமையில்லாதகாரணத்தால்,தம்சொத்துக்குவாரிசுபிள்ளைஇருந்தாகவேண்டும் என்ற அவசியமுமில்லை. அங்கு ஓர் ஆள் இத்தனை மணி நேரம்தான் வேலை செய்யவேண்டும்,இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று உள்ளது. நேரம் முடிந்தால் நம் நாட்டுத் தொழிலாளர்கள் போல் ஓடமாட்டார்கள்.அதிகப்படியாக கொஞ்ச நேரம் வேலை முன்வந்து செய்வார்ககள்.இப்படி செய்பவர்களின் வேலை,நேரம் கணக்கிட்டு பட்டம் கொடுத்து மரியாதை செய்வார்கள்.அங்கு கழிப்பிணித்தனம் அவமானமாகக் கருதப்படும்.நாணயம் கரைபுரண்டு ஓடும்.
                   பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழவேண்டும் என்பதுதான்.தொழிலாளி உயர இலாபத்தில் பங்கு வேண்டும்.இப்படியாக காரியம் செய்தால்தான் தொழிலாளி நிலைமை ஒழிந்து ,மனித வாழ்க்கையில் சமநிலைப்பங்காளி நிலை ஏற்படுமே தவிர ,கூலிக்குக்கிளர்ச்சி என்பது தொழிலாளி தொழிலாளியாகவே ,முதலாளி முதலாளியாகவே இருக்க உதவுமே தவிர வேறு எதற்கும் இல்லை                                     மனித அறிவு நாளுக்கு நாள் மளமளவென்று மேலேபோய்க்கொண்டிருக்கிறது.  அதையொட்டிமக்களைக்கொண்டுபோகவேண்டாமா?புதியஉலகத்திற்குஉணர்ச்சிகள், புதிய கருத்துக்கள் கொண்டு செலுத்த வேண்டாமா?  
                                            -தந்தைப் பெரியார் அவர்களின் சொற்பொழிவுகள்,எழுத்துக்களில் இருந்து.
                     அ.செங்குட்டுவன்,தலைமைஆசிரியர்,ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,ஆனந்தக்குடி, காட்டுமன்னார்கோயில் ஒன்றியம்.  மின்னஞ்சல்:senguttuvancdm@gmail.com