பயனர்:சு.பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                        தலைஞாயிறு கிராமம்

இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரண்யம் வட்டம்,தலைஞாயிறு கிராமம்.சோழர்கால வரலாற்றுடன் தொடர்புடையது.சோழர்கள் எங்கள் ஊர் வழியாக பயணம் செய்தே கடல் கடந்து, இலங்கை சென்று வென்று வந்தனர்.இதனை பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படித்து தெரிந்து கொள்ளலாம்.எனது ஊர் அரிச்சந்திரா ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது. கடற்கரை கிழக்கு திசையில் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும்,வேதாரண்யத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. சிவன் கோவிலும்,பெருமால் கோவிலும் அருகருகே அமைந்துள்ளது. இரண்டு தொடக்கப்பள்ளிகளும், இரண்டு நடுநிலைப்பள்ளிகளும், ஒரு மேனிலைப்பள்ளியும் அமைந்து கல்வி வளத்தினை சேர்க்கின்றன. முதன்மை தொழிலாக வேளாண்மை விளங்குகிறது.மழையும், நதியும் எங்களை வாழ்விக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சு.பாலாஜி&oldid=1942452" இலிருந்து மீள்விக்கப்பட்டது