பயனர்:சுவடு ஹரி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொன்கொனா சென் ஷர்மா (பிறப்பு: டிசம்பர் 3, 1979), ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகை அபர்ணா சென்னின் மகள் ஆவார்.

1983இல் இந்திரா என்னும் வங்காள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின்னர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த வங்காள திரைப்படமான ஏக் ஜே ஆச்சே கன்யாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 2002ஆம் அவரது தாயின் இயக்கத்தில் வெளிவந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் என்னும் ஆங்கில மொழி திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார். இத்திரைப்படத்தில் அவரது நடிப்பிற்க்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.