பயனர்:சிவ.விருத்தாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யாறு செய்யாறு & வாழைப்பந்தல் வரலாறு

பார்வதிதேவி பரமசிவனை வணங்கி இடப்பாகம் கேட்ட போது,

"முத்திமா நகரம் தன்னை நினைத்தபேர்க்கு அளிக்கும்மூதூர்" ( அருணாசலபுராணம் : 279 )

தென்பால் ஒரு நகரம் அதனை நினைத்தால் முக்தியுண்டாகும், அவ்வீடகம் வந்தால் இட பாகம் தருவோம் என்றார். பார்வதி தேவியின் மற்றொரு அம்சமாகிய அவதாரசொரூபியாக காஞ்சிபுரத்தில் காமாட்சியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காஞ்சி காமாட்சி அண்ணா மலையாரை தொழ திருவண்ணாமலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆதிகாலங் களில் புனித மண்ணில் சிவலிங்கம் செய்து சிவனை வழிபடுவது வழக்கம்.

காஞ்சிபுரத்திற்கும் திருவண்ணாமலைக் கும் இடையில் ஒரு ஆற்றங்கரையில் பார்வதி தேவி சந்தியா பூஜை செய்யும்கால் சூரிய பகவானின் சுட்டெரிக்கும் வெயில் படாதிருக்க வாழை மரத்தினால் முருகப் பெருமான் பந்தல் அமைத்துக் கொடுத்தார். அதன் பெயர் காரண மாக அமைந்ததுதான் இன்றை வாழைப் பந்தல் என்னும் பாடல்தலம் பெற்ற சிறப்பு மிக்க ஊரில் ஸ்ரீ பச்சையம்மன் தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது.

அன்னையும் குகனை நோக்கி,

"அரம்பையால் பந்தல் செய்து பன்னிரு கரமும் சால வருந்தினை" ( அ.புரா. : 286 ) எனப் பாராட்டினார்.

"கந்தல்வேல் அழைத்த ஆற்றில் கடன்எலாம் கழித்து வாழைப் பந்தரில் இருந்தாள், அப்போது உமைபதம் பணிந்து அவ்ஆற்றில்" ( அ.புரா. : 288 )

தன் இளையமகன் குகனிடத்தில் சந்தியா பூஜைக்கு பரிசுத்தமான ஜலம் வேண்டி கேட்க, முருகப் பெருமானால் தன் செவ்வோளை ஏவி னார். ஏழு மலைகளையும் ஊடுருவிச் சென்று செங்கன்மாமலையில் சொருகி பீறிட்டு தண் ணீர் ஊற்று எடுத்தது.

செங்கண்மாமலை என்பது நன்னன் என் கின்ற மன்னன் ஆண்ட பகுதியான இன்றை செங்கம். ஊற்று எடுத்த தண்ணீர் கடல் போல் ஓடி வந்த ஆறுதான் சேயாறு.

தாய் கேட்க சேயால் உருவான ஆறு என்ப தால் சேய் + ஆறு = சேயாறு என்பதாகும். தற் போது மக்களால் செய்யாறு என்று வழங்கப் படுகிறது.

மேலும் நெமிலி என்பது நெல்மலிந்த ஊர் என்பது காரணப் பெயரால் நெமிலி என வழங்கப்படுகிறது.

விளாங்குப்பம் என்ற ஊர் சந்தவால் அருகே உள்ளது. வேலங்காட்டுப் பகுதியாக இருந்ததால் காட்டை அழித்து நிலப்பகுதியாக மாற்றி மக்கள் குடியேறி வழங்கிய பெயர்தான் வேலங்குப்பம் என்பது மருவி விளாங்குப்பம் எனப் பெயர் பெற்றது. வேளாண்மைக்கு சிறப்பு பெற்று விளாங்குப்பமாகத் திகழ்கிறது.

எனவே ஊர்களின் பெயர்கள், காரணப் பெயராகவும் கல்வெட்டுச் சான்றுகள், இலக் கியச் சான்றுகள், பாடல்தலம் பெற்ற சான்று கள் வாயிலாகப் பெயர் பெற்று மருவி இன் றைய அளவில் பெயர்களோடு விளங்கு கின்றன என்பதை அறியலாம்.

- ஆய்வியல் நிறைஞர் சிவ. விருத்தாசலம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சிவ.விருத்தாசலம்&oldid=2733717" இலிருந்து மீள்விக்கப்பட்டது