பயனர்:சிவ.குமாரவேல்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலர் சாகுபடி தோட்டக்கலை அல்லது தோட்டப்பயிர் என்ற நிலையில் மலர் சாகுபடி நடைபெறுகிறது. செம்மண் கலந்த நிலமே மலர் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. மலர் சாகுபடியில் மல்லிகை, முல்லை, ரோஜா, கனகாம்பரம், சந்தனமுல்லை, சம்பங்கி, சாமந்தி, மருவு, கொழிக்கொண்டை,காக்கட்டான் உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ==பதியன் மல்லிகை, முல்லை, ரோஜா, காக்கட்டான் உள்ளிட்டவை பதியன் முறையில் நடவு செய்யப்படுகின்றன. பதியமிட்டு 3-4 மாதங்களில் பதியன் வெட்டியெடுக்கப்பட்டு 4’x4’ இடைவெளியில் அரையடி சதுர குழி வெட்டி இயற்கை உரமிட்டு பயிரிடப்படுகிறது. 8-10 ஆண்டுகள் வரை நன்கு பலன்தரக் கூடியவை. இச்செடிகள் ஆண்டின் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்யப்படுகின்றன. ==விதைத்தல் சம்பங்கி சாமந்தி போன்றவை விதை விட்டு அரைஅடி நாற்று வளர்ந்த உடன் பிடிங்கி வேறிடத்தில் நடவு செய்யப்படுகின்றன. இவை 3-6 மாதங்கள் மட்டுமே பலன் தரக்கூடியது.