பயனர்:சிவானந்தம் நீலகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவானந்தம் 1980ல் தமிழ்நாட்டின் கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவர். தந்தை பெயர் நீலகண்டன். தாயார் விஜயலட்சுமி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் சொந்த ஊர் திருக்கண்ணங்குடி. நாகப்பட்டினத்துக்கும் திருவாரூருக்கும் இடையே அமைந்துள்ள இந்த கிராமம் 108 வைணவத்திருப்பதிகளுள் 26வதாக அறியப்படுகிறது.