பயனர்:சின்னமனுர் சித்தன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டினப்பாலையும் நாகரிகப் பொருளாதாரமும்

மு. அப்துல் காதர்ää எம்.ஏ.ää எம்.பில்.ää உதவிப் பேராசிரியர் - தமிழ்த்துறைää ஹாஜி கருத்தராவுத்தர் ஹதிவுயா கல்லூரிää உத்தமபாளையம்.

பண்டைய இலக்கியங்கள் சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை முறையினைச் சித்திரித்துக் காட்டுகின்றன. அவற்றுள் பட்டினப்பாலையின் பங்கும் இன்றியமையாததே. சங்க கால மக்களின் பொருளாதாரமும் வாணிகமும் கிராமியச் சூழலை அடிப்படையாகக் கொண்ட நாகரிக முறையாகும். அதனைää பொருளாகக் கொண்டு பட்டினப்பாலை மெய்ப்பிக்கிறது. பட்டினப்பாலையில் காணலாகும் பொருளுக்கு ஆதாரமான வணிகக் கருத்துக்களைää பகுப்பாய்வு அடிப்படையில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகவும் அமைகிறது. இலக்கிய அறிமுகம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்திய காலச் சூழலில் சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய பகுதி காவிரிப்ப10ம்பட்டினமாகும். இப்பட்டினப் பகுதியில் கற்பு நெறிப்பட்ட இல்லற வாழ்க்கை வாழ்கின்ற தலைவன்ää பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரியக்கூடிய சூழல் ஏற்படுகிறது. அதனைத் தலைவி குறிப்பால் உணர்ந்து கொள்கிறாள். நான் என் தலைவியை விட்டுப் பிரியமாட்டேன். அவளுடைய மென்மையான அகன்ற தோள்கள் திருமாவளவனின் செங்கோலைக் காட்டிலும் தண்மையானவை. அவளைப் பிரிவது என்பதுää திருமாவளவன் பகைவர் மேல் எறியும் வேலைக்காட்டிலும் கொடுமையானது. அதனால் தலைவியைப் பிரிய மாட்டேன் என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறான். இதனை. “……முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரேன் வாழிய நெஞ்சே….” என்ற வரிகள் மெய்ப்பிக்கின்றன. இவ்வாறான கருத்துச் சுருக்கத்தை மையமாக வைத்தே பட்டினப்பாலை இலக்கியம் அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திங்கண்ணனார். 301 அடிகளை கொண்ட இப்பாடல் கரிகாலனைää பாட்டுடைத்தலைவனாகக் காண்பிக்கிறது பாலைத் திணைக்குரிய பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாட்டின் உரிப்பொருளாக அமைவதால்ää இவ்விலக்கியம் அகத்திணை வகையைச் சாரும். ‘காவிரிப்ப10ம்பட்டினத்தையே நான் கொடையாகப் பெறுவதாயினும’; என்றும் கூறும் பொழுதுää பட்டினத்தினத்தின் சிறப்புகள் என்னென்ன? என்பதை புலவர் கீழ்க்கண்டவாறு சித்திரித்துக் காட்டுகிறார். • வணிகர்களின் சிறப்பு • சுங்கம் கொள்வோரின் சிறப்பு • துறைமுகப் பண்டக சாலையின் முற்றம் • அங்காடி வீதிகள் • ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் • வணிகர்ää வேளாளர் குடிச்சிறப்பு ஆகிய வணிகää பொருளாதார நிலைகளைச் சொல்லி நகரத்தின் பெருமையை உயர்த்திக் காண்பிக்கின்றார் புலவர். பல மொழிகள் கற்ற வணிகர்கள். வேளாளர்கள்ää வணிகர்கள்ää வணிகம் காரணமாக வந்த அயல்நாட்டவர்கள் மற்றும் பல மொழிகளைக் கற்ற வணிகர்கள் காவிரிப்ப10ம்பட்டினத்தில் வாழும் மக்களோடு கலந்து இனிதாக நீண்ட நாள் தங்கி வாழ்வார்கள். அந்நகரமே விழாக் கோலம் ப10ண்டது போல் காட்சியளிக்கும் இதனை. “பல் ஆயமொடு பதிபழகி வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு மொழி பல பெருகிய பழிதீர் தே எத்துப் புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்” என்ற பட்டினப்பாலை வரிகள் மெய்ப்பிக்கின்றன. பல்வேறு நாட்டவர்களையும் தம் உறவாக மதித்து கலந்து வாழும் காவிரிப்ப10ம்பட்டின மக்கள் மனிதநேயப் பண்புக்கு சிறந்த உதாரணமாக இருந்துள்ளனர்.


பண்டமாற்று சோழநாடு குடிமக்களை நிரம்பவுடைய செழிப்பான பகுதியான காவிரிப்ப10ம்பட்டினம் ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கிடக்கும் பல ஊர்களை உடையது. அங்குள்ள மகளிர் பொருந்திய ப10ண்களை அணிந்தவர்கள். அவர்கள்ää நெல்லை உலரப்போட்டு காவல் காத்துக் கொண்டிருப்பர். அப்போதுää அந்நெல்லைக் கோழிகள் தின்ன வரும். காவல் காத்துக் கொண்டிருந்த பெண்கள்ää தங்கள் காதுகளில் அணிந்திருந்த மகரக்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுவர். அச்சூழலில்ää சிறுதேரினை ஊருட்டி விளையாடும் சிறுவர்களின் தேர்ச்சக்கரத்தை மகளிர் எறிந்தää கனங்குழைகள் புரட்டி விடும்ää இதனை “நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை பொன்கால் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்கால் சிறுதேர் முன் வழி விலக்கும். ஏன்று கவிஞர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார். நெல்லைத் தின்ன வந்த கோழிகளின் மேல் பெண்கள் தம் காதணிக்குழைகளை கழற்றி எறிந்துள்ளனர் என்பதனால் ஆபரணப் பொருட்கள் மலிந்திருந்தன என்று கூறுவது பொருத்தமானதாக அமையாது. இவர்கள் வாழ்கின்ற இடம் உப்பை மட்டுமே விளைவிக்கின்ற கடல்புறப் பகுதி. வேறு நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு உப்பைக் கொடுத்து பண்டமாற்றாக நெல்லை வாங்கி வந்திருக்கலாம். ஆதலால் நெல்லிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துள்ளனர் என்று புரிவதற்கும் இடமளிக்கிறது. பட்டினப் பகுதியில் உப்பங்கழிகளில் வசிக்கும் மக்கள் வலிமையான படகுகளில் வெள்ளை உப்பினைப் பண்டமாற்றம் செய்வதற்காக ஏற்றி வருவார்கள். உப்பினது கொள்ளும் விலையைச் சொல்லி நெல்லை வாங்குவார்களாம். நெல்லோடு வந்த படகுகளை உப்பங்கழிகளில் தறிகளில் வரிசையாகக் கட்டி வைப்பர். அக்காட்சி குதிரைகள் கட்டப்படடிருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றன. இதனை. “வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாயப் பஃறி பணை நிலைப் புரவியின் அணைமுதல் பிணிக்கும் கழிசூழல் படப்பைக்… என்ற வரிகளின் மூலம் அறியலாம். சுங்கம் கொள்வோர் நிலை கடலில் மீன்பிடிக்கப் படகில் சென்ற பரதவர்கள் நேரம் அறிந்து கரைக்குத் திரும்புவர். அக்கடையாமத்தில் சுங்கம் கொள்வோர் தம் கடமைகளில் ஈடுபட்டிருப்பர். அவர்கள் தம் அரசனுடைய பொருள்களைப் பிறர் கொள்ளாமல் காக்கும் தொழிலைச் செய்யும் பழைமையான புகழை உடையவர்கள். அவர்கள் சிறிதும் சோம்பலில்லாமல் சுங்கம் கொள்ளும் பணியைச் சலிப்பின்றி நாள்தோறும் செய்த கொண்டிருப்பர். துறைமுகப் பண்டகசாலை முற்றம் சுங்கம் கொள்வோர் சிறிதும் மனம் சலிக்காது சுங்கச் சேவையைச் செய்வர். சுங்கப் பொருட்களும் குறைவில்லாமல் வந்து குவிந்து கொண்டே இருக்கும். மழை பெய்யும் பருவத்தில் மேகம் கடலிலிருந்து முகந்த நீரை பொழிவது போல – கப்பலில் வந்த பொருட்களை நிலத்தில் இறக்குவர். மேகம் மலையில் பொழிந்த நீர் ஆறாகப் பெருகிக் கடலில் கலப்பது போல – நிலத்தில் உள்ள பொருட்களைக் கப்பலில் ஏற்றுவர். மழை பெய்யும் பருவத்தில் கடல் நீர் மலையையும்.ää மலையில் பெய்யும் மழை நீர் கடலையும் அடைவது போல இறக்குமதியும் ஏற்றுமதியும் ஒரே சமயத்தில் நிகழும் வகையில்ää அளவிட்டு அறியமுடியாத ;பல வகைப்பண்டங்கள் அறிய காவலமைந்த பெரிய பண்டக சாலையில் வந்து குவிந்த கொண்டிருக்கும். சுங்கம் கொள்வோர்ää அப்பொருள்களுக்குச் சுங்கம் விதித்துச் சங்கம் கொண்ட பிறகுää இலச்சினை பொறிப்பவன்ää சுங்கம் கொண்டதற்கு அடையாளமாகää சோழ மன்னனுக்குரிய புலி இலச்சினையைப் பொறித்து அப்பணடங்களைப் புறம் போக விடுப்பான். அங்ஙனம் மதிப்பிடப்பட்ட பொருள்கள் முடைமூடையாகக் கிடக்கும். அந்த மூடைகளின் மேல் ஆண்நாயும் ஆட்டுக்கிடாவும் ஏறித்துள்ளி விளையாடும். இத்தகைய பண்டகசாலை முற்றங்களை உடையதாய் விளங்குகிறது காவிரிப்ப10ம்பட்டினத்தை துறைமுகம்.

அங்காடி வீதிகள் காவிரிப்ப10ம்பட்டினத்தில் இறக்குமதி ஏற்றுமதியாகமும் பொருள்கள் விற்கப்படும் அங்காடித் தெருக்கள் மாடி வீடுகளோடு காணப்பட்டன. அலைகளையுடைய துறைமுகத்தில் கட்டுத்தனிகளை அசைக்கும் களிறுகளைப் போல நிறைந்த இருக்கைகளையுடைய கப்பல்கள் அசைந்து கொண்டிருக்கும். அவற்றின் மேல் வணிகர்களுக்கு விருப்பம் தரும் கொடிகளும் அசைந்து கொண்டிருக்கும். அவைமட்டுமல்லாது “கள்” விற்கும் மனையிடத்துக் கட்டப்பட்ட அடையாளக் கொடிகளும் பறந்து கொண்டிருக்கும். இவ்வாறான அங்காடி வீதிகள் காணப்பட்டன. ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் அயல்நாட்டிலிலருந்து கடல் வழியே வந்த குதிரைகளும்;;; உள்நாட்டிலிருந்து வண்டிகள் மூலம் வந்த கரிய மிளகுப் பொதிகளும்ää வடத்தில் உள்ள மேருமலையில் உண்டான மாணிக்கமும்;; சாம்புநதம் எனும் பொன்னும் ää மேற்கு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும்ää தென்கடல் முத்தும்ää கீழ்க்கடல் பவளமும்ää இலங்கையில் உள்ளவும் ää கடாரத்திலிருந்து வந்த நுகர் பொருளும் மற்றும் கிடைத்துண்டு அரியனவும் பெரியளவுமாகிய பலவகைப் பொருளும்ää நிலம் நெளியுமாறு ஒருங்கு கூடிய தெருக்களும் சூழ்ந்திருக்கும்ää “ நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் குhலின் வந்த கருங்கறி முடையும் வுடமலை பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தேக்கடல் முத்தும் குணகடல் துகிலும் குங்கை வாரியும் காவிரிப் பயனும்……” ஏன்ற வரிகள் மூலம் அறியலாம் வணிகர் முடிச்சிறப்பு வணிகர்கள் தம் குடிக்கு நேரக்கூடிய பழிக்கு அஞ்சி எப்போதும் உண்மையையே பேசுவர். தும்முடைய பொருட்களையும்ää பிறருடைய பொருட்களையும் சமமாகப் பாவிப்பர். தூம் பிறரிடம் இருந்து வாங்கும் பொருளைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகுதியாக வாங்காமல் ää தாம் பிறருக்கு கொடுக்கும் பொருளை அவரிடமிருந்து வாங்கி பொருளுக்குக் குறைவாக கொடுக்காமல் ää பல்வேறு பொருட்களையும் விலை கூறி விற்பர். ஆங்ஙனம் விற்றும் ää வாங்கியும் வாணிகம் செய்து தொன்று தொட்டு ஈட்டிய செல்வத்தை உடையவராய் நீண்ட நுகத்தடியில் நடுவில் உள்ள நின்ற நல்ல மனத்தை யுடையவராய் ஒழுகுவர். நிறைவுரை இன்றைய காலகட்டத்தில் சுமார் 2000 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வணிக ää பொருளாதார அறிவினை பட்டினப்பாலை இலக்கியம் திறம்பட எடுத்துக்காட்டுகின்றது. வணிகத்திலும் பொருளாதாரத்திலும் திறம்பட விளங்கிய நகரமான காவிரிப்பூம் பட்டினத்தையே பரிசும் பொருளாக பெறுவதாயினும் எனது அன்பான தலைவியை விட்டு பிரிய மாட்டேன் என்று கூறும் தலைவனின் பண்பு சிறப்பாக உள்ளது. பரிசுப்பொருளாக காவிரிப்பூம்பட்டினத்தைக் கூறுவதற்கு காரணம் என்னவெனில் ää தலைவன் தலைவியை விட்டு பொருள் தேடிப் பிரியச் செல்கிறான். (பொருள் வயின் பிரிவு)தனக்குத் தேவையான பொருளா தாரத்தைத்தேடி பிரியச் போகிறான் அந்த தேவையை நிறைவு செய்யக் கூடிய பொருளாதாரமும்ää வணிகமும் சிறந்து விளங்கக் கூடிய இடத்தையே உவமையாகச் சுட்டிச் கூறுகின்றான். வுpற்பனைப் பொருளை அடையாளம் கண்டு கொள்வதற்கு ää கடைகளின் குற்றங்களிலோ அல்லது மேல் பகுதியிலோ கொடிகள் பறக்கவிடப்பட்டன. இன்ன வகையான கொடிகள் பறந்தால் இன்னவகைப் பொருள் விற்கப்படுகின்றது என்பதை நுகர்வோர் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தன. இவை விளம்பர உத்திக்குரிய அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன. அது மட்டுமல்லாது ஏற்றுமதிää இறக்குமதி பொருட்களுக்கு முத்திரை பதிப்பதும் வணிகர்களின் உண்மையான விற்பனை முறையையும் பழங்காலத்தமிழர்களின் நாணயமான நாகரிகத்தையும் அடையாளப்படுத்துகின்றன.