பயனர்:சஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் கந்தர்மடம்[தொகு]

கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாறு பற்றிய ஆதார பூர்வமான எழுத்து ஆவணங்கள் கிடைக்காத போதும் இப்பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் பலர் வாயிலாகக் கேட்ட தகவல்களின் அடிப்படையை கொண்டே  இச் சுருக்கவரலாறு

தரப்பட்டுள்ளது என்பதனை முதலில் தெரிவித்து கொள்கின்றோம். சுவாமிநாதர் கந்தர் தாய் மாமன் ஆகிய புராண முத்தரிடம்  கந்தபுராணம் சைவ சித்தாந்தமும் படித்தவர். அவர் 1817 ஆம் ஆண்டு கந்தபுராணம் படிப்பதற்காக ஒரு மேடம் காட்டினார் மடத்தின் பெயர் கந்த புராண மடம் கந்தர் கட்டிய மடம் என்பதனால் அம்மடத்தை சுற்றியுள்ள பகுதிகள் கந்தர்மடம் என பெயர் பெற்றது. மடத்தின் மூலஸ்தானத்தின் மூலவராக ஞானவேல் பிரதிஷடை செய்யப்பட்டது சீர்காழியில் திருஞான சம்பந்தர் சந்ததியில் வந்த சீதாபதி என்னும் குருக்கள் அழைக்கப்பட்டு பூசகராக நியமிக்கப்படடார் என அறிகின்றோம்.

சுவாமி கந்தர் மறைவுக்கு பின் அவர் மகன் காசிப்பிள்ளை மறைவுக்கு பின் மடாலயத்தை நிர்வகித்து வந்தார். சீதாபதி ஐயர் மறைவிற்கு பின் அவர் மகன் கனகசபாபதி ஐயர் பூசை செய்து வந்தார். பின்பு கனகசபாபதி ஐயர் காலமானதும் அவர் மகன் சுப்ரமணியம் ஐயர் அத்தொண்டினை மேற்கொண்டார். சுப்ரமணிய ஐயரை சக்கையார் என்றும் அழைப்பர். சக்கையாவின் மகன் பரமேஸ்வர குருக்கள் பழம் வீதி அக்கிரகாரத்தில் பிறந்தார்.

பின்பு மாப்பிள்ளை வேலுப்பிள்ளையின் பழம் வீதியில் உள்ள காணியை கந்தர்மட பிரபுக்கள் சக்கையாவிற்கு வாங்கி கொடுத்தார்கள். சக்கையார் அக்காணியில் வீடுகட்டி குடிபுகுந்தார். அச்செழு போயிட்டியைச்சேர்ந்த முதலியார் ராமஸ்வாமி என்பவர் ஆறுமுகத்தின் மக்கள் மாணிக்கத்தை திருமணம் செய்தபடியால் வந்த சீதன காணியின் பின் மூலையில் நின்ற பெரிய திருவாத்திமரத்தின் கீழ் 1901 ஆம் ஆண்டு கிணறு ஒன்றை வெட்டினார் அக்கிணறு தண்ணீர் நிலைக்கு கிட்ட வெட்டியதும் திருவாத்தி வேர் சுற்றப்பட்ட நிலையில் கல் ஒன்று தோன்றியது அன்றிரவு வீட்டுக்காரருக்கும் கிணறு வெட்டிய ஆச்சரியாருக்கும் கனவில் பிள்ளையார் வடிவில் தோன்றி தன்னை அதில் வைத்து வணங்கும் வண்ணம் காட்சி கொடுத்தார். அவர்கள் அந்த பிள்ளையாரை திருவத்தி வேர் கட்டப்பட்ட நிலையிலேயே எடுத்து ஒரு கொட்டகை அமைத்து விளக்கு வைத்து வழிபட்டு வந்தனர் .இக்கால கட்டத்தில் கொடிகாமத்தை சேர்ந்த கதிர்காமர் என்பவர் கிடுகு வியாபாரம் செய்து வந்தார். அவர் மாப்பிளை வேலுப்பிள்ளையின் உதவியால் வண்ணார்பண்ணை சிவன்கோவில் காணியில் தனது மனைவி அன்னப்பிள்ளை சகிதம் குடியேறினார். அன்னப்பிள்ளையே இக் கொட்டகையை சாணத்தால் மெழுகி வழிபாடும் நடத்தி வந்தார். பின்பு சாக்கையர் அருகாமையில் குடியிருந்த படியால் அவரையே பூசை செய்வதட்கு நியமித்தனர். சிறுபிள்ளையாராக இருந்தவர். நாளுக்கு நாள் வளர்ந்து தற்போது இருக்கும் அளவுக்கு வளர்ந்ததும் வளர்ச்சியை நிறுத்திக் கொண்டார். சாக்கையர் மரணித்ததும் இக்கோவிலுக்கான பூசை செய்யும் பொறுப்பை பரமேஸ்வர குருக்கள் ஏற்றுக்கொண்டார். பின்பு கால்வாயை சேர்ந்த ச.க.கதிரவேலு (சட்டத்தரணி) கந்தர்மடத்தை சேர்ந்த சிவகுருநாதர் மகளை திருமணம் செய்ததன் பின் முன் வந்து கோடிடக்கைக்குள் இருந்த பிள்ளையாரை சுண்ணாம்பு சுவரால் ஆன சிறு கோவில் அமைத்து அதட்கு அருகாமையில் அம்மன் கோவிலும் கட்டப்பட்டு வரும் வேளையில் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட கார்த்திகேசு மகன் செல்லையா என்பவர் கந்தர்மட வாசி ஆனதும் அவர் தலைமையில் 1952 ம் ஆண்டு ஊர் மக்களின் பித்தளை பாத்திரங்களின் அன்பளிப்புடன் ஒரு கண்டமணி வார்க்கப்பட்டு கோபுரத்தில் ஏற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்பு 1954 ம் ஆண்டு பராமசாமி குருக்கள் தலைமையில் ஊர் மக்களின் உதவியுடன் விநாயகப்பெருமான் வார்க்கப்பட்டு 10 நாட்கள் அலங்கார திருவிழாவும் வெளி வீதி உலாவும் நடைபெற்றது. விநாயக பெருமானின் திருவிழாக்களில் ஒன்றான சப்பற திருவிழா அன்று உயிர் குதிரை பூட்டி விநாயகப்பெருமான் வீதிஉலா செல்லும் காட்சியும் நடந்தது.


செம்பாட்டு ஒழுங்கையை சேர்ந்த கம்பளை மாணிக்கம் என்னும் பிரபல சுருட்டு வர்த்தகர் தனது செலவில் தேர் ஒன்று செய்து கொடுத்தார் அதன் பின் பரமேஸ்வர குருக்கள் இறக்க சோமாஸ்கந்த குருக்கள் பூசை செய்யும் பொறுப்பை பெற்றுக்கொண்டார். அக்காலத்தில் கந்தர்மட மக்கள் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து வந்தார்கள் பின்பு பிற இடத்திலிருந்தும் திருமணம் செய்ய முன் வந்ததாலும் இடவசதி இன்மையாலும் கோவிலுக்கு முன்பாக இருந்த வண்ணை சிவன்கோவில் காணியில் இருந்த மரக்காலையை வேறு இடத்திற்கு மாற்றி அதில் ஒரு கல்யாண மண்டபம் அமைக்க டாக்டர் கனகரத்தினம் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது . கந்தர்மட வாசிகள் பிரபல வர்த்தகர்கள் மடத்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் யாவருமே சேர்ந்து சிவன்கோவில் காணியை குத்தகையாக எடுத்து ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. அதில் இன்றும் திருமண நிகழ்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 1990 ம் ஆண்டு சோமாஸ்கந்த குருக்கள் கொழும்பு செல்லும் போது அவர் கருணாகர குருக்களை பூசகராகபவும் தனது வீட்டிட்கு பார்வையாளராகவும் நியமித்தார். கருணாகர குருக்கள் தனது இரண்டு புத்திரர்களின் உதவியுடன் வெகு சிறப்பாக கோவிலை பராமரித்து வந்தார்.

பின்பு 1995 ம் ஆண்டு ஐப்பசி மாதம் இடப்பெயர்வு ஏற்பட்டது. அதன் பின்பு 1996 ம் ஆண்டு சித்திரை மாதம் 16 ம் திகதி மீண்டும் திரும்பி வந்த போது அம்மன் கோவில் பக்கமும் கல்யாண மண்டபம் பாதிப்பு அடைந்து கிடந்தன. இடப்பெயர்வின் பின்னர் கருணாகர குருக்கள் மரணமானார்.அதன் பின் சோமாஸ்கந்த குருக்கள் கோவில் பூசை செய்வதற்கு சதானந்த சர்மாவை நியமித்தார். அந்தக்காலத்தில் அம்மன் கோவில் சேதத்தையும் கோவில் மின்சார இணைப்பு சீரழிவையும் சரிபார்த்து அந்தவருடத்துக்குரிய திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழா முடிவுற்றபின்பு கோவிலின் தேர் கொட்டகையையும் கல்யாண மண்டபத்தையும் திருத்தி அமைப்பதற்கு பிள்ளையார் பக்தர்கள் முன்வந்தார்கள் அப்பணியை நடராசா ஸ்ரீ விஜயா (ஸ்ரீனி ) தலைமையில் 5 லட்சரூபா செலவில் திருத்தி கொண்டு இருக்க பண்டாரக்குளம் பிள்ளையார் கோவில் தர்மகர்த்தாவாகிய ராசா வாமதேவன் மனமுவந்து தனது நேர்த்தியாக பஞ்சமுக பிள்ளையார் சிலையை செய்து கொடுத்தார். அப்பிள்ளையாருக்கு ஊரவர்களின் ஒத்தாசையுடன் கும்பாபிஷேகமும் தொடர்ந்து 10 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்றது.

அதன் பின்பு,இக்கோயில் வளர்ச்சி அடையத் தொடங்கியது .இக்கோயில் சுண்ணாம்பு கட்டிடம் என்பதாலும் சில வெடிப்புகள் இருந்தமையாலும் புனருத்தாரணம் செய்து முடிக்க சுவாமிநாதர் கந்தர் பரம்பரையில் வந்த ,நடராசா ஸ்ரீ விஜயா (ஸ்ரீனி) என்பவருக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றியது.இது சம்பந்தமாக கொழும்பில் இருக்கும் சோமாஸ்கந்தக்குருக்களுடன் தொடர்பு கொண்டு கதைத்த போது அவர் இது நல்ல விடயம் ,உம்மால் தனிமையில் நின்று செய்து முடிக்க கஸ்டமாக இருக்கும். ஆகையால் ஒரு குழுவை போட்டு செய்து முடிக்கவும் என ஆசியும் கூறினார்.அவர் கூறியபடி கூட்டமொன்றை கூட்டி பிரபல வர்த்தகரும் ,இக்கோயிலின் உற்ஸவ உபயக்காரருமாகிய குமாரசாமி கங்கைவேணியனை தலைவராகவும் ,பிள்ளையார் பெருங்கதை உற்ஸவ உபாயக்காரராகிய பேராசிரியர் சமாதிலிங்கம் சாத்தியசீலனைச் செயலாளராகவும் ,பங்குனி உற்ஸவ உபாயக்காரராகிய பொறியியலாளர் தம்பிராசா கணேசராசாவை பொருளாளராகவும் மற்றும் உறுப்பினர்களையும் கொண்ட திருப்பணிச்சபை அமைக்கப்பட்ட்து.08.07.2001 ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தானம் செய்யப்பட்டு 14.07.2001 இல் இராசா வாமதேவன் அவர்களால் அத்திவாரம் இடப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பமாகின .சதுர்த்தி ,விநாயகர் பெருங்கதை,அலங்கார உற்ஸவ உபயக்காரர்கள் ,பிரபல வர்த்தகர்கள் ,தென்மாகாணத்தில் வாழும் கந்தர்மடவாசிகள்,சாவகச்சேரியில் இருந்து இடம்பெயர்ந்த பக்தர்கள், வெளிநாட்டில் வாழும் கந்தர்மடவாசிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் முன்னாள் புனர்வாழ்வு அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் நிதி உதவியுடன் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் தி.மகேஸ்வரனின் அமைச்சின் நிதி உதவியுடனும் கோயில் திருப்பணி வேலைகள் பெருமளவு பூர்த்தியடைந்தன.

திருப்பணிச்சபையினரின் விடா முயற்சியினால் கோயிலின் தென் மேற்கு மூலையில் இருந்த(மூலஸ்தானத்திர்க்கு அருகாமையில்)முடக்கு காணித்துண்டை பெருங்குணம் படைத்த திரு.ரட்ணப்பிரகாசம் குடும்பத்தவரிடம் பெற்றமையால் கோயில் காணியை வடிவுடையதாக்கியது.இக்காணித்துண்டு கிடைத்தமை எம்பெருமானின் ஊர்வலம் வருதலையும் கோயிலின் அழகையும் பெரிதும் சிறப்பித்தது.நயினை நாகபூசணி அம்மன் பிரதம குரு பராமசாமி குருக்கள் தலைமையில் 07.02.2003 இல் கும்பாபிஷேகமும் அன்றய தினம் ராசா வாமதேவன் அன்பளிப்பில் மகேஸ்வர பூசையும் நடைபெற்றது அந்த்ரேய் இரவு எம்பெருமானின் அலங்கரிக்கப்பட்ட தண்டிகையில் தெருவீதி வளம் வரும்போது விநாயகப்பெருமானின் அடையாளமாக யானைமுன்பு செல்ல பக்தர்கள் பின்னால் எம்பெருமானுடன் வீதிவலம் வந்தனர். புனருத்தாரண பணிகள் நிறைவடைந்து மஹா கும்பாபிஷேகம் சிறப்புற நிகழ்ந்தமைக்கு திருப்பணி சபையினரும் கர்த்தா சோமாஸ்கந்த குருக்களும் கந்தர்மட வாசிகளும் விநாயகர் பக்தர்களும் காரணமாவதனை தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேகம் செய்யப்படு சங்காபிஷேகமும் நடைபெற்றது. திருப்பணிச்சபை தலைவர் அன்பார் மகேஸ்வர பூசையும் அன்று பிடிப்பாள் கும்பாபிஷேக மலர் வெளியீடும் திருப்பணி சபையினரால் வெகு சிறப்பாக நிறைவேறியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சஞ்சு&oldid=2180356" இலிருந்து மீள்விக்கப்பட்டது