உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:க.கதிர்வேல்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"கரைவலசு"(கிராமம்)[தொகு]

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் வட்டாரத்தில் கருப்பணவலசு ஊராட்சியில் கரைவலசு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் விளைகின்றன. மேலும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் மலரும் (வட்டார வழக்கு : கண்வலி பூ) இப்பகுதியில் விளைகிறது. இந்த கிராமம் அமைந்துள்ள கருப்பணவலசு ஊராட்சி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3255 ஆகும். இவர்களில் பெண்கள் 1613 பேரும் ஆண்கள் 1642 பேரும் உள்ளனர். [1]

  1. "கரைவலசுகிராமம்". {{cite web}}: |access-date= requires |url= (help); Missing or empty |url= (help)