பயனர்:குமரகுரு/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்: குமரகுரு

NAME: KUMARA GURU VELLUSAMY

பள்ளி: சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

School: Chua Chu Kang Secondary School

இந்திய மரபுடைமை நிலையம்

சிங்கப்பூரில் இந்திய சமூகத்தின் பல்வேறு பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வகையில் தென்கிழக்காசியாவின் முதலாவது அருங்காட்சியமாக இந்திய மரபுடைமை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு மாடியில்  கட்டடக்கலை நயத்துடன் இம்மையம் அமைந்துள்ள இடம், லிட்டில் இந்தியாவாகும். இது அனைத்து பார்வையாளர்களுக்கு ஓர் அதிவேகக் கற்றல் அனுபவத்தை வழங்கும் என்று இதன் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த மையத்தில் ஐந்து கருப்பொருள்கள், ஒரு சிறப்பு கண்காட்சிக் கூடம் மற்றும் நிரந்தர காட்சியகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அதே போல் கல்வி மற்றும் கற்றல் பயணங்களுக்கான நடவடிக்கைகளையும் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் இந்திய சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்கள், மற்றும் உலக இந்திய புலம்பெயர்ந்தோரின் வரலாறு அவர்களின் வளமான வாழ்க்கைகள் ஆகியவற்றை உணர்த்தும் இடமாக இது அமைந்துள்ளது, இந்திய மரபுடைமை நிலையம்.

காட்சியகங்கள் அனைத்தும் இந்திய வரலாற்றின் காலவரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வருகை தரும் பார்வையாளர்கள், இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையே உள்ள  வரலாற்று இணைப்புகள், அதேபோல் தென்கிழக்கு ஆசியாவிலும் தெற்கு ஆசியர்கள் அனுபவங்கள் பற்றியும் அறிந்துக் கொள்வதோடு, சிங்கப்பூர் இந்திய சமூகம் நவீன சிங்கப்பூருக்கு எத்தகைய பங்களிப்புகளைக் கொடுத்துள்ளது என்பதனையும் அறிந்து கொள்ள முடியும்.

அறிமுகம்

இது சிங்கப்பூரின் இந்தியர்களை பற்றிய அறிமுகம். இந்தியாவிலிருந்து இங்கே வந்த பிரிடிஷ்காலனித்துவ இந்தியர்கள், ஸ்ட்டெயிட்ஸ் செட்டில்மெண்ட்டில்(நீரிணைக் குடியிருப்புகளில்) பிறந்த இந்தியர்கள், சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூர்ரைத் தாயகமாக்கிக் கொண்ட தெற்கு ஆசிரியர்கள் போன்றோர்தான் சிங்கப்பூர் இந்தியர்கள்

குடியேற்றங்கள்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் நகரின் பெரும் பகுதிகளிலும் குடியேரினர். ஆயினும்,சில இடங்களில் அவரவர் தொழில் ரீதியாகப் பலர் குவிந்தனர். அவ்வாறு 1830களுக்கு முன்பு சூழியா கிராமத்திலும் மார்க்கெட் ஸ்ட்ரீட்டிலும் வணிகர்களும் வட்டிக்கடை முதலாளிகளும் தொழில் நடத்தனர்.

சிறப்பு அம்சங்கள்

Ø இந்தியர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியர்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு பற்றியும் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பு பற்றியும் ஒலி ஒளிக் காட்சிகள் வாயிலாகவும் விளக்கப்பட்டுள்ளன.

Ø மூன்றாவது தளத்திலும் நான்காவது தளத்திலும் இந்தியர்கள் கையாண்ட அரிய பழம்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரிலும் மலாயாவிலும் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய மக்கள் வாழ்ந்த நிலைமைகள், சிங்கப்பூரைக் கட்டமைத்த வரலாறு, இந்து, இசுலாம், புத்தம், கிறித்தவம் எனப் பல்வேறு இனக் குடிமக்கள் சிங்கப்பூரில் வந்து குடியேறி ஒற்றுமையாக அமைதியாக வாழும் நிலையைச் சித்தரிக்கும் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது.

Ø தமிழக நகரத்தாரின் வீட்டு வாசல்கால்கள், இந்தோனேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட  புத்தரின் உருவத்தலை, தென்னிந்தியர்கள் பயன்படுத்திய காசுமாலை, வகை வகையான தாலிகள், சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, சுபாசு சந்திர போசு போன்றோர் சிங்கப்பூருக்கு வந்தபோது பிடித்த நிழற்படங்கள் பெரியார் ஈ. வெ. இராமசாமி, லீ குவான் யூ, கோ. சாரங்கபாணி, சி. இராசரத்தினம் போன்றோரின் நிழற்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முடிிவு

சிங்கப்பூரின் தேசிய மரபுடமை வாரியம் இந்த அருங்காட்சியகத்தைக் கட்டியது மட்டுமல்லாமல் பராமரித்தும் வருகிறது.