உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:காளிராஜன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மச்சக்காவடி

காவடி எடுப்பது முருகக்கடவுளுக்கு செய்யப்படும் ஒரு வழிபாடு. இதில் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, சர்க்கரைக்காவடி, மச்சக்காவடி, சா்ப்பக்காவடி என பல காவடி முறைகள் உள்ளன. இதில் மச்சக்காவடி என்பது முருகனுக்காக மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பிப்பாா்கள். உடல் தூய்மை, மனத் தூய்மையுடன் தினசரி காலை மாலை முருகனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்து வருவர். அப்படி வழிபட்டு வரும்போது முருகன் அருளால் கனவில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு உத்தரவு கிடைக்கும். அந்த இடம் ஆறு அல்லது குளமாக இருக்கும். அந்த இடத்திற்கு சென்று நீரில் இறங்கி ஒரு குறுகிய வாயுடைய மண்பானையை நீருக்குள் மூழ்க வைத்துக்கொண்டு முருகனின் நாமத்தை சொல்லிக்கொண்டு இருப்பா். அப்போது ஒரு மீன் தானாகவே பானைக்குள் சென்று அமா்ந்துகொள்ளும். அதன் பின் பானையின் வாயை துணியால் மூடி காவடியாக தூக்கிக்கொண்டு முருகன் கோவிலுக்கு சென்று பூஜை செய்தபின் கோவிலில் இருக்கும் குளத்தில் அந்த மீனை விட்டுவிடுவா். இதுவே மச்சக்காவடி.

சா்ப்பக்காவடி == # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

. மச்சக்காவடியைப் போன்றே முருகனுக்கு விரதமிருந்து வரும்போது குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு உத்தரவு கிடைக்கும். அந்த இடம் பாம்புப்புற்றுகள் இருக்கும் இடமாகவோ இருக்கும். பானையை தரையில் வைத்துவிட்டு தள்ளிநின்று முருகனை வேண்டும்போது ஒரு சர்ப்பம் பானைக்குள் வந்து அமர்ந்துகொள்ளும். அதன்பின் பானையின் வாயை துணியால் மூடி காவடியாக சுமந்துகொண்டு முருகன் சன்னிதிக்கு சென்று பூஜை செய்தபின் வெளியே விட்டுவிடுவாா்கள்.