பயனர்:கவிஞர் சாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்துள்ள மணலூர்பேட்டை என்ற ஊரில் 25:12:1982 ஆம் ஆண்டு பிறந்தவர்.பள்ளிப் பருவ நாட்களிலேயே எழுதத் துவங்கியவர்.அறிவியல் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ்மொழி மீது தீராத பற்று கொண்டவர்.தன் திறமையினால் படிப்படியாக முன்னேறி எண்ணற்ற கவிதைகள்,சிறுகதைகள்,கட்டுரைகள் படைத்தார்.ஜெயா தொலைக்காட்சியில் "கலைவாசல்"நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கவிதைகளை வாசித்தார்.அதுதான் இவரை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியது.சர்வதேச தமிழ் வானொலிகள் பலவற்றில் இவரின் கவிதை நிகழ்ச்சி ஒலிபரப்பானது.இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் மனதில் தனது கவிதைகளினால் நீங்கா இடம் பிடித்தவர்.இவரின் முதல் கவிதை தொகுப்பான "தென்பெண்ணை நதியோரக் கவிதைகள்" என்ற நூலினை திரைப்பட இயக்குனர் திரு அகத்தியன் அவர்களின் தலைமையில் வெளியிட்டார்.இந்திய அரசு தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் புதுவை கலை பண்பாட்டு துறையிடம் இருந்து சிறந்த நடிகருக்கான (புராண நாடகத்தில் நடித்தமைக்கு) விருதையும்,சான்றிதழையும் பெற்றுள்ளார்.

கட்டுரைகள் : சொல்லோவியம்,கூலி வாங்கிய எழுத்தாளர் சிறுகதைகள் : வெளிச்சம்,விதியின் விளையாட்டு,யார் குற்றம் கவிதை நூல் : தென்பெண்ணை நதியோரக் கவிதைகள்.

இவருடைய கவிதைகள் இயற்கை மற்றும் காதலை மையமாக கொண்டே அமைந்திருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கவிஞர்_சாரா&oldid=2179249" இலிருந்து மீள்விக்கப்பட்டது