பயனர்:கவிஞர்அகவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெற்குணம் கிராமத்தில் 07.12.1969 ல் பிறந்தவர் அகவி. இயற்பெயர் க.விநாயகமூர்த்தி. கந்தையன், அழகம்மாள் இவரது பெற்றோர். ஐந்து ஆண்டுகள் திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். "தலித்தியக் கவிதைகளில் விடுதலை கூறுகள்" என்ற பொருண்மையில் முனைவர் பட்டம் முடித்தவர்.தலித் கவிதையியல் என்னும் தனது ஆய்வு நூலை இந்திய தலித் இலக்கியத்தின் தந்தை என்று சொல்லப்படும் வாழும் படைப்பாளி மும்பையிலுள்ள அர்ஜுன் டாங்ளே அவர்களை எழுத்தாளர் புதிய மாதவி கலை விமர்சகர் இந்திரன் அவர்களின் உதவியுடன் சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிட்டார். இது கலை விமர்சகர் இந்திரனின் யாளிப் பதிவு வெளியீடாக 2018 ல் வெளிவந்து பரவலான கவனத்தை பெற்றது. 2004 ல் இவரது கவிதை நூல் "சும்மாடு" கவிதை தொகுப்பும் 2015 ல் "தொப்புள்புள்ளி" எனும் கவிதை தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது மனைவி வி.விமலா என்பவர் ஒரு தமிழாசிரியர் , பரிவர்த்தனா, கனியமுதன் என்ற பிள்ளைகளும் உள்ளனர். பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் இவர் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர்.