உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கணேசன் நாச்சியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புநிறை இதயங்களுக்கு....

   "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்"..என்ற தெய்வ வரிகள் நம் அனைவருக்கும் தெரியும்.ஆனால் அதற்கு ஆதாரம் உள்ளதா என்று அறிய ஒருசிலரே முனைந்தாலும்,அவர்களும் அதனை வெளிப்படுத்தவில்லை.

இசுலாமியர்களுக்கு வேதம் "குர்ஆன்" 

கிறித்துவர்களுக்கு வேதம் "பைபிள்".

ஆனால் உலக மக்களுக்கே மூத்த குடியாயும்,மூத்த மொழியாயும் உள்ள தமிழினத்தாருக்கு வேதம் எது என்று கேட்டால் ஒருவருக்கும் சொல்லத் தெரியாதது மாபெரும் இழுக்கு.

அந்த அற்புத வேதத்தை உலகறியச் செய்ய இறைவன் எனக்கிட்ட கட்டளையாக இந்த மாபெரும் தொண்டில் தடம் பதிக்கின்றேன்.

தெய்வத்தமிழாம் தமிழை எழுத்துவடிவில் உலகுக்கு காட்டியவர் "திருமூலர்"

அவரே உலகின் முதல் வேதமாக "திருமந்திரம்" என்ற தமிழ் வேதத்தையும் தந்தவர்.இதற்கான சான்றுகள் பல அவரது வரிகளிலேயே உள்ளது.

பல காரணங்களால் மறைக்கப்பட்ட இந்த தெய்வ வரிகளில்...இன்றளவும் நமக்கு கிடைத்தது . ௩௦௬௫..(3065) மந்திரங்கள் மட்டுமே.

அதனை தொகுத்து தமிழ் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

உண்மை அறிவிக்கும் இந்த தொண்டில் உங்களது பங்கு இருக்குமாயின் பெறுதற்கரிய பேறாம் இம்மனிதப்பிறவி புனிதமடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தெய்வத் தமிழ்வேதம்  தந்த திருமூலரே காப்பு