பயனர்:ஐ.சிவநிரூபன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடசாலையின் 1962-2012ம் ஆண்டு வரையான வரலாறு[தொகு]

அன்னியர் ஆட்சி எம் ஈழவள நாட்டில் புகுவதற்கு முன் இன்று அபிவிருத்தியை நோக்கி கால்பதிக்கும் வன்னிபெருநிலப்பரப்பு பொருளாதார வளம் நிறைந்த்கவும் சமயபண்பு நிறைந்த்கவும் காணப்பட்டதாக சித்திரங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியல் தலைவர்கள் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டனர். இன, மத வேறுபாடு இன்றி கௌரவ டி.எஸ்.சேன்யக்கா, S.W.R.D.பண்டாரநாயக்கா. திரு.வீ.குமாரசாமி, திரு.தி.முருகேசப்பிள்ளை, திரு.ம.ஸ்ரீகாந்தா ஆகியின் விடாமுயற்சியினால் வன்னி பெருநிலப்பரப்பின் இரண்டாவது பிய நீர் தேக்கமான வ்னிக்குளம் மீள் திருத்தம் செய்யப்பட்டு நீர் தேக்கும் நிலயமாக்கப்பட்டது. இக்குளத்தின் பெயராலே ˞˞ʽவவுனிக்குள குடியேற்றத்திட்டம்̚ ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நற்பதியில் வாழ்ந்த அறநெறி வழங்கிய யோகர் சுவாமிகளை தம் குருவாக் கொண்ட திரு.ம.ஸ்ரீகாந்தா வலது கரை பகுதிக்கு ”யோகபுரம்” எனத் திருநாம் சூட்டினார். இடது கரைக்கு செல்லப்பா சுவாமிகளின் நினைவாக ”செல்வபுரம்” எனவும் நாம் சூட்டப்பட்டது. வலதுகரை பகுதியான யோகபுரம் பகுதியில் முதன்முதலாக 01.06.1962ம் ஆண்டு யோகபுரம் 1ம் பகுதி 3ம் யுனிற் அரசினர் தமழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 35 மாணவர்களுடன் தலைமையாசியராக திரு. வே.இளையதம்பியும் உதவி ஆசியராக அவரது மனைவியும் கடமையாற்றினார்கள். இப்பாடசாலையை அக்காலத்தில் வடமாகாண பிரதம வித்தியாகியாக இருந்த திரு.க.கனகசபாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார். சிறப்பான வளர்ச்சியினை முன்னெடுத்து வந்த காலத்தில் தலைமை ஆசியர் இடமாற்றம் பெற்றுச்செல்ல 1963ம் ஆண்டு திரு.இ.கந்தசுவாமி அவர்கள் தலைமை ஆசியராக பாடசாலையினை பொறுப்பேற்றார். கடமையை கண்ணாக கருதி கடமையாற்றிய இவரது காலத்தில் முதன் முறையாக க.பொ.த.சா/த பீட்சைக்கு மாணவர்கள் தோற்றினர்கள். இக்காலத்தில் பாடசாலையில் கலைவிழாக்கள், கூட்டுறவு தின விழா போன்ற விழாக்கள் நடைபெற்றமை பாடசாலையின் புறச்செயற்பாடுகளுக்கு வழிசமைத்த்.

வடக்கில் இருந்து வடக்கன் மாட்டு வண்டியில் தமது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வந்திருக்கும் திரு.க.பியதம்பி தலைமையாசியர் 05.02.1966ம் ஆண்டு பாடசாலையினை பொறுப்பேற்றார். இவரது அயராத சேவையினை அன்றிலிருந்து அனைவரும் நன்கறிவர். இவரது சேவை காலத்தில் 1968ம் ஆண்டு இப்பாடசாலையானது யோகபுரம் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. இன் நிகழ்வானது பாடசாலையின் வரலாற்று பாதையின் சிறப்பான பதிவாகும்.

பாடசாலையின் வளர்ச்சியோடு தலையாசியர் என்ற பதவி அதிபர் அதிபர் என்ற நிலையில் முதல் அதிபராக திரு.A.B.சேனாதிராசா அவர்கள் 01.07.1966ம் ஆண்டு தனது கடமையினை ஏற்று சிறப்பாக கடமையாற்றினார். 21.05.1967ம் ஆண்டு இவர் இடமாற்றத்தில் செல்ல தொடர்ந்து திரு.எம்.ச்சிதானந்தம் பாடசாலையினை சிறிதுகாலம் பொறுப்பேற்று நடத்தினார். தொடர்ந்து 04.08.1967ல் பாடசாலையினை பொறுப்பேற்று சிறப்பாக வளிநடாத்தியதுடன் பாடசாலைக்கு மேலும் பல ஆசியர்களை சேர்த்து திறம்பட வளிநடாத்தியதுடன் பாடசாலையின் 10ம் ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடியதுடன் பாடசாலையின் முதலாது புத்தகத்தினையும் வெளியிட்டுவைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் அதிபராக இருந்த திரு.தா.சிவசம்பு இவர் அதிபராக இருந்த காலப்பகுதியில் பாடசாலையில் க.பொ.த.உ/த கலைப்பிவு ஆரம்பிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது. அத்துடன் திரு.அ.மு.அருணாசலம் அதிபராக இருந்த காலத்தில் க.பொ.த.சா/த பீட்சையில் மாவட்டத்தின் முதல் நிலையினை செல்வன் வி.ஜீவகன் அவர்கள் 8ஏ சித்தியடைந்மை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவரதுகாலத்தில் பாடசாலையின் 36வது ஆண்டை முன்னிட்டு ”யோகதாரகை” எனும் இரண்டாவது புத்தக வெளியீடும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திரு.த.யோகானந்தராசா அவர்கள் அதிபராக பாடசாலையினை நிர்வகித்த காலப்பகுதியில் நாட்டின் போர்சூழல் காரணமாக பாடசாலை இடப்பெயர்வினை முகம் கொடுத்த். இதன்போது அதிபின் திறமையின் நிமிர்த்தம் இப்பாடசாலை சென்ற இடம் எங்கும் தனது சேவையினை மாணவர்களுக்கு ஆற்றியவண்ணமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் அப்போதய ஆளுனர் G.A.சந்திரசிறி அவர்களால் வித்தியாலயம் தனது சேவையினை மாணவர்களுக்கு வளங்குவதற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 2012ம் ஆண்டு வர்த்தக பிவும் 2013ம் ஆண்டு கணித விஞ்ஞான பிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு முல்லை யோகபுரம் மகாவித்தியாலயம் தனது சேவைகளை மாணவமணிகளுக்கு ஆற்றிவருகின்றது.

   குறிப்பு- வரலாறு என்பது கனமான ஒரு சொல் அற்த வகையில் நான் முல்லை யோகபுரம் மகாவித்தியாலய வரலாற்றின் சிறுபகுதியினை இவ் விக்கிபீடியா பகுதி ஊடாக காட்சிபடுத்த முடிந்தமையினை இட்டு நான் மிகிழ்ச்சி அடைவதுடன் இவ்வரலாறானது இப்பாடசாலையின் பத்தாண்டு நிறைவுமலர். யோகதாரகை மற்றும் சம்பவதிரட்டு பதிவு-1983 என்பவற்றின் துணையோடும் பாடசாலையின் பழமையான அதிபர்கள் ஆசிாியர்களிடம் இருந்து பெற்ற தகவல்களையும் நான் இப்பாடசாலையில் சிறுவயதில் இருந்து கல்விகற்றவன் என்றவகையில் எனக்கு தொிந்த தகவல்களையும் கொண்டு எழுதியுள்லேன். இப்பகுதியில் ஏதாவது தவறுகள் இருப்பின் இதனை குறையாக கருதாது திருத்துவதுடன் எனது இவ் சிறு முயற்சியினை ஊக்கப்படுத்துவீர்கள் என நம்புகின்றேன்.


பாடசாலை கீதம்:-[தொகு]

வாழியவே வாழியவே வாழிய வாழிய வாழியவே

வாழியவே வாழியவே வாழிய வாழிய வாழியவே

வாழியவே எங்கள் மகா வித்தியாலயம்

வளர்பிறை போல் வளர்ந்தென்நாளும்

மேழி பிடித்திடும் உழவர்களின் மைந்தர்

மேன்மையடைந்திட வாழியவே வாழியவே.

                                                  வாழியவே வாழியவே

யோகபுரம் குடியேற்ற மக்களுக்கென

ஓங்கி வளந்திடும் வித்தியாலயம்

ஏழைகள் உயர்ந்திட அரசினர் உதவிடும்

இலவச கல்வி அளிக்குமிடம்.

                                                   வாழியவே வாழியவே

செந்தமிழதனோடு ஆங்கில மொழியை

பைந்தமிழ்ச் சிறுவர்கள் பயிலுமிடம்

நம் தமிழ்க் கலைகளை நல்லாசிாியர்கள்

நாட்டை முன்னேற்ற பயிற்றுமிடம்.

                                                  வாழியவே வாழியவே

கணித விஞ்ஞான விவசாய அறிவை

கருத்துடன் போதிக்கும் வித்தியாலயம்

கைப்பணி மனையியல் பாடங்கள் எல்லாம்

அற்புதமாய் அளிக்கும் வித்தியாலயம்.

                                                 வாழியவே வாழியவே

காட்டுப் பகுதியில் நாட்டறிஞ்ஞர்களை

காட்டிடவே எழுந்த வித்தியாலயம்

வீட்டிலும் நாட்டிலும் விடிவிளக்காக

விளங்கிடும் மாணவர் பயிலுமிடம்.

                                                 வாழியவே வாழியவே

அறுபத்திரண்டில் அரசினர் அளித்த

ஆரம்ப பாடசாலை வளர்ந்தின்று

உயர்ந்திடும் மகாவித்தியாலயமாகி

உன்னத நிலையை அடைந்ததுவே.

                                                  வாழியவே வாழியவே.

இராகம் - காபி. தாளம் - ஆதி. தயாாித்தவர்- திருமதி.புவனேஸ்வாி நடராசா.


பாடசாலையில் 1962ம் ஆண்டு தொடக்கம் இற்ரை வரைகடமையாற்றிய முதல்வர்கள் விபரம்.[தொகு]

01.திரு.வே.இளையதம்பி

02.திரு.இ.கந்தசாமி

03.திரு.க.பொியதம்பி

04.திரு.ஏ.பி.சேனாதிராசா

05.திரு.வே.க.நாகராசா

06.திரு.என்.சச்சிதானந்தம்

07.திரு.ஆ.காசிநாதர்

08.திரு.எஸ்.சிவவாகீசர்

09.திரு.வி.கந்தவனம்

10.திரு.கே.தவராசா

11.திரு.த.சிவபாலன்

12.திரு.தா.சிவசம்பு

13.திரு.ச.ச.பாலசுப்பிரமணியம்

14.திரு.சி.சண்முகவடிவேல்

15.திருமதி.பு.நடராசா

16.திரு.க.எழில்வேந்தன்

17.திரு.அ.மு.அருணாசலம்

18.திரு.கி.சிவப்பிரகாசம்

19.திருமதி.க.கிருஸ்ணபிள்ளை

20.திரு.த.யோகானந்தராசா


பாடசாலை கொடி வரலாறு:-[தொகு]

எமது பாடசாலையின் கொடியானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நீல நிறமதிர் நான்கு கரைகளிலும் வெள்ளை நிறத்தையும் கொண்ட கலங்கரை விளக்கமாக விளங்கியது.

1980ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.த.சிவசம்பு அதிபராக இருந்த காலத்தில் பணிபிந்த ஆசியர்களின் ஆலோசனைப்படி அதிபின் தீர்மானத்திற்கேற்ப நீல நிறமும் வெள்ளை நிறமும் கொண்ட மூன்று கீற்றுக்களாக துலங்கியது.

பின்னர் 1992ம் ஆண்டில் திரு.க.எழில்வேந்தன் அதிபர் காலப்பகுதியில் அபின் தீர்மானத்தின் படி ஆசியர்களின் கருத்திற்கு அமையவும் மண்ணிறத்தில் மஞ்சல் நிறச் சின்னத்தில் மகுட வாசகமும் பொறிக்கப்பட்ட கொடியாக் காணப்பட்டது.

பின்னர் 1997ம் ஆண்டு பணியாற்றிய திரு.அ.மு.அருணாசலம் அதிபர் காலப்பகுதியில் அபின் தீர்மானத்தின் படி ஆசியர்களின் கருத்திற்கு அமையவும் வானம் போன்ற நீலமும் மஞ்சலும் கலந்த்கப் பாடசாலைக் கொடி அமைக்கப்பட்டது.

தூய்மையான நீலவானத்தில் சியன் பட்டொளி வீசி உலகத்தையே பிரகாசிக்கச் செய்வது போல தூய்மையான மாணவ பிஞ்சுகளின் மனங்களில் அறிவு எனும் ஞானஒளி வீசி நற்பிரஜைகளாக வாழவேண்டும்மென்பதே எமது பாடசாலைக் கொடியின் நீல மஞசள் நிற வர்ணத்தின் கருத்தாகும்.

எமது கொடியின் மத்தியில் ”கலை பல கற்று நிலைபெறு வாழ்வில்” எனும் மகுட வாசகம் பொறிக்கப்பட்ட சின்னமும் காணப்படுகின்றது. இக்கொடியே இன்று எமது பாடசாலையில் பட்டொளி வீசி பறந்த வண்ணம் காணப்பமுகின்றது.


பாடசாலை இலட்சனை:-[தொகு]

எமது பாடசாலையில் தற்போது இருக்கும் இலட்சனை 1991இல் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இச் சின்னமானது நெற்கதிர்கள் மத்தியில் தீபம், நூல், யாழ் என்பன அமைக்கப்பட்டதுடன் ”கலை பல கற்று நிலைபெற வாழ்வில்” எனும் மகுட வாசகத்தினையும் கொண்டதாய் அமைந்துள்ளது. நெற்கதிர் கற்றைகள் குறித்து நிற்பது உணவுப் பொருட்களை வழங்கும் பெருமைக்கிய பிரதேசம். விவசாய குடும்பங்களின் சிறார்கள் என்பதைக்குறிக்கிறது. மத்தியில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் வழங்கும் சரஸ்வதி தேவிக்கு பதிலாக நூல், யாழ், தீபம் பொறிக்கப்பட்டுள்ளது. இவை இசையுடன் கல்விச் செல்வத்தை பெற்று வாழ்வில் ஒளியேற்றும் தீபங்களாக உலகமெங்கும் பிரகாசித்து விளங்க வேண்டும் என்பதனையும் அதனை மெருகூட்டும் வகையில் மகுடம் அமைந்துள்ளது.

தூரநோக்கு:-[தொகு]

மாற்றமுறும் சமூக தேசிய சர்வதேச தேவைக்கமைவாக பெருமை மிகு பண்பாடு கொண்ட தேர்ச்சி மிகு மாணவர்களை உருவாக்கி தேசியறிதியில் முதன்மைப் பாடசாலையாக மிளிர்தல்.

பணிக்கூற்று:-[தொகு]

• மாணவர்களின் ஆற்றல் மற்றும் விழுமியச் செயற்பாடுகளை கற்றல் கற்பித்தல் இணைபாட செயற்பாட்டின் மூலம் அதிகாித்தல். • பெற்றோர்களின் முழுமையான பங்கேற்பிற்கு வழிசமைத்து வெளிப்படைத் தன்மையுடன் ஒற்றுமையான மேன்மை தங்கிய சமூகத்தை கட்டியெழுப்புதல். • சமூகம், சமூகம் சார்ந்த திணைக்களம் மற்றும் அமைப்புக்களின் தொடர்பாடலில் சமநிலையை உறுதிப்படுத்தல். • பௌதீக ஆளணி வளங்களின் வினைதிறனுடனான உச்சப்பயன்பாட்டைப் பெறுவதுடன் மேலும் விருத்தி செய்து முதன்நிலைப்பாடசாலையாக மிளிர வழிசமைப்போம்.