பயனர்:ஐஸ்வர்யா இளங்கோ/மணல்தொட்டி
பெயர்: ஐஸ்வர்யா
NAME: ELANGO AISHWARYA
பள்ளி: சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி
School: Chua Chu Kang Secondary School
Raffles Landing Site.
சிங்கப்பூரைக் கண்டுப்பிடித்தவர் ‘சர் ஸ்டாம்போர்டு ராஃபிள்ஸ்’. அவர் 1819 ஜனவரி 29 சிங்கப்பூருக்கு வந்தபோது முதன் முதலாக வந்திறங்கிய இடம், ராஃபிள்ஸ் இறங்கிய தளம் என்றழைக்கப்பட்டது.
ராஃபிள்ஸ், கிழக்கிந்திய நிறுவனத்தின் வியாபாரத்தை மேம்படுத்த சிங்கப்பூருக்கு வந்தார். சைனா டவுனில் உள்ள மாரியம்மன் கோவில் கட்டுவதற்குக் காரணமாக இருந்த நாராயணன் பிள்ளையைப் பினாங்கில் இருந்து அழைத்து வந்தவர் ராஃபிள்ஸ் ஆவார்.
1972ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காக ராஃபிள்ஸ் முதன் முதலில் காலடி வைத்த இடத்தில் அவருடைய பளிங்கு சிலை (polymarble) வைக்கப்பட்டது. இந்தச் சிலை சுமார் 2 மீட்டர் உயரமுடையது. ராஃபிள்ஸ் சிலைக்கு கீழே உள்ள விளக்கக் குறிப்பில் ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் போன்ற நான்கு மொழிகளிலும் சிங்கப்பூரின் கதையை விவரிக்கிறது. அந்த சிலை ஆங்கிலத்தில், “On this historic site, Sir Thomas Stamford Raffles first landed in Singapore on 28th January 1819, and with genius and pecerption changed the destiny of Singapore from an obscure fishing village to a great seaport and modern metropolis.” என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வருடம் (2017) இச்சிலைக்கு 198 வயதாகிறது. இச்சிலை இப்போது போட் கீக்கு அருகில் அமைந்துள்ளது. அக்காலத்தில் போட் கீ பகுதியில் குடியேறியவர்கள் நிறைய கட்டிடங்களை கட்டினர்.
ராஃபிள்ஸின் முதல் சிலை வெண்கலத்தால் 1887இல் வடிவமைக்கப்பட்டது. இதைக் கட்ட 20,446.10 வெள்ளி செலவானது. வெண்கலச் சிலையை வடிவமைத்தவர் தோமஸ் வூல்னர். அவர் ஓர் சிற்பியும் ஆங்கில கவிஞரும் ஆவார். முதல் சிலை 1919-ல் பாடாங் எனும் இடத்தில் இருந்து இடமாற்றப்பட்டது. அதற்குக் காரணம், அச்சிலை பெரும்பாலும் காற்பந்து விளையாட்டின்போது பறக்கும் காற்பந்துகளால் தாக்கப்பட்டது. அங்கு நடக்கும் காற்பந்து போட்டியை, பாடாங் பார்வையாளர்கள் அச்சிலையின் அடிப்பகுதியில் உட்கார்ந்து பார்த்தனர்.
ஜப்பானியர் ஆட்சியின் போது, அச்சிலை Syonan அருங்காட்சியகத்திற்கு (ராஃபிள்ஸ் மியூசியம்) மாற்றப்பட்டது. அது 1946 இல் எம்பிரஸ் என்ற இடத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது அச்சிலைக்கு எதிரே விக்டோரியா கச்சேரி அரங்கு இருந்தது. அச்சிலை முதலில் திறக்கப்பட்டபோது, சிங்கப்பூர் மக்கள் அதற்கு பல பெயர்களை இட்டனர். அதில் ஒன்றுதான், இரும்பு மனிதன். இன்று, அந்த சிலைகள் தேசிய உருவமாகவும் நவீன சிங்கப்பூரின் அடையாளமாகவும் விளங்குகின்றன. இந்த இடத்திற்கு வரும் மக்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குடும்பத்தினருடன் படகில் சென்று கட்டிடங்களையும், ராஃபிள்ஸ்யின் பளிங்கு சிலையையும் ரசிக்கின்றனர்.