பயனர்:ஏக்கூப் பைஸல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாம் அனைவரும் இலங்கையர்கள்;.. ! ( ஏக்கூப் பைஸல் ) மதத்தினை காப்பாற்ற இலங்கை குடிமகன் மசூதிக்கு கல் எறியத் தயாராக இருக்கிறான். ஆனால் கல் அடியினை வாங்கும் மசூதியூம் ஒரு மதத்தினைச் சார்ந்தது என்பதை ஏற்க அவன் தயாராக இல்லை .

இனம் என்ற ஆயூதத்தில் முப்பதாண்டுகளாய் ரத்த வாடை கண்ட நம் மண்ணில் இனியூம் யூத்தக் கனவூகள் வேண்டாம் . எப்போது விடியூம் என்று காத்திருந்து விடியாது போன கிழக்கு மக்களின் சுதந்திரப் பொழுதுகள் மரணத்திலே விடிந்த நாற்கள்தான் ஆயிரம். இனம் என்ற பாகப்பிரிவினையால் வடக்கில் இருந்து வயது பாராது பிறந்த மண்னை இழந்து வந்த வலிகள் இன்றும்; புலம் பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் மனதில் ஆறாத காயமாய் இப்போதும் இருக்கின்றது. காத்தான் குடியில் தன்னை மறந்து மக்கள் இறைவன் இல்லம் நிற்கும் போது முதுகுகளுக்குப் பின்னால் இரும்பு ரவைகள் பாய்ந்து முன்னால் விழுந்த மரணத்தின் சுவடுகளை அந்த மண் மறக்க முடியாத நினைவூகளாய் இன்று கூட அழுகிறது. எங்களை வாழ விடுங்கள் சொந்த நாட்டுக்குள் அகதிகாளய் முப்பதாண்டுகள் நாங்களும் வாழ்ந்தவர்கள். அபிவிருத்தி என்ற பயணத்தில் நம் நாடு மட்டும் ஏனைய நாடுகளில் இருந்து புறந்தள்ளி நின்கின்றது. நம் நாட்டின் கலை இ கலாசாரம் இ விழுமியங்கள்இ பொருளாதரம் இ தொழிநுட்பம் இ என்ற விருத்தியினை முப்பது ஆண்டு கால யூத்தம் விழுங்கி நம் நாட்டை ஏனைய நாடுகளின்; அபிவிருத்தியில் இருந்து புறந்தள்ளிவிட்டது. அரசியல்வாதிகள் வாக்குக்களை சம்பாதிக்கும் மூலதனமாக மக்களைப் பயன்படுத்தினார்கள் என்பதினை வரலாறு எமக்கு சொல்கிறது. சுயநலமான சிலர்களால் சுயலமற்ற சிலர்களை இனம் என்ற தீக் கிடங்கில் திட்டமிட்டு எறியூம் யூத்த மந்திரம்ந்தான் நம் நாட்டு அரசியல் வரலாராக இருக்கின்றது. சிந்தித்து செயற்படுவது மக்களின் கடமை . சிந்திக்கத் துhண்டுவது மதத் தலைவர்களின் கடமை இ நல்ல விடயங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து விடுவது படித்தவர்களின் பங்களிப்பு . பிழையான நேரத்தில் சரியான செய்திகளை சமூகத்திற்கு எடுத்துச் சொல்வது ஊடகத்தின் பொறுப்பு . இந்த நிலை நடைமுறையில்லாத போது ஏனை நாடுகள் நம் நாட்டை பிறித்தாலும் சூழ்சிக்குல் சிக்க வைத்து மதங்களுக்கிடையில் பிரச்சினைகளை தொடர வைக்கும் என்பதை நாங்கள் மறுக்க முடியாது. உலகில் சுதந்திரத்திற்கு பின்னர் வளர்ச்சியடைந்த நாடுகளை பார்த்து நாங்கள் வெட்கப்பட வேண்டியிருக்கின்றது. பிரித்தானியர்களின் ஆட்சிக்கு பின்தான் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று நாங்கள் மார்தட்டிப் பேசுகின்றௌம். பிரித்தானியரின் ஆட்சிக்கு பின்னர் நம் நாட்டில் யூத்தம் என்ற சிறையில் எங்கள் சுதந்திரம் பறிபோனது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. எதிர்காலச் சந்ததிகள் வாழ நாட்டை பாதுகாப்போம் என்று சொல்லிச் சொல்லிச் முப்பதாண்டுகளாய் நம் இளய தலைமுறைகள் பிறந்த நாட்டை இழந்து விட்டு வெளிநாடுகளில் வாழுகின்றார்கள். ஒரு காலத்தில் சிங்கப்பூர் ஆசைப்பட்டது இலங்கையைப் போல் நம் நாடும் முன்னேர வேண்டும் என்று . இன்று இலங்கை ஆசைப்படுகின்றது சிங்கப்பூர் போல் நம் நாடும் முன்னேர வேண்டும் என்று. நாங்கள் வளர்சிபெற்ற நாடுகளில்; இருந்து 300 வருடங்கள் பின்தள்ளி நிற்கின்றௌம் என்பதை வளர்சியடைந்த நாடுகளின் தொழிநுட்பத்தை பார்க்கும் போது எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. இளஞர்களை துhண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஒன்று நாட்டில் வளர்ந்து வருகின்றது. வெட்டி எறிய வேண்டியவர்கள் உரம் போட்டு வளர்கின்றார்கள். நற்பண்புகளை வளர்க்க வேண்டிய மத குருக்கல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கல் எறிகின்றார்கள். ஒரு நாட்டின் எழுச்சிக்காக எழுத வேண்டிய பேனாவினைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தினை அச்சுருத்தி விழ்ச்சியடைய எழுதுகின்றார்கள் . மதிக்கப்பட வேண்டிய புனிதத் தளங்களை உடைக்கப்பட வேண்டும் என போராடுகின்றார்கள். நாட்டில் பிறந்தவர்கள் எவரும் நிறந்தரமாய் வாழுவதில்லை என்பதே உண்மை . நாளைய சமூதாயத்தின் எதிர் காலத்திற்காக இன்றைய சமூதாயம் வாழ்க்கையை வாழ மறந்து போராடுகின்றது. நாட்டில் எவராக இருந்தாலும் அதிகாரத்தினை மக்களுக்கு அதிகம் பயன்படுத்த நினைத்தால் அது ஒரு நாள் அவரை கிட்லரின் நிலைக்கு கெண்டு செல்லும் என்பது மறுக்க முடியாது . இலங்கையில் பிறந்த பிரஜையின் தலைக்குரிய கடன் இன்று 300இ000 ரூபாயாக இருக்கின்ற வேளையில் பிரச்சினைகளை விட்டு வி;ட்டு கடனை செலுத்த மூவின மக்களும் உழையூங்கள். அனைவரும் சேர்ந்து கடனில் வாழும் நம் நட்டை கட்டியெழுப்புவோம். தமிழ்இ சிங்களஇ முஸ்லிம் என்ற பிறிவினையை மறந்து நாம் அனைவரும் இலங்கையன் என்ற பெயரை உச்சரிப்போம். இன்று எது உன்னுடையதோ நாளை அது பிறருடையது இதற்கு எதற்கு பிணக்கு - நீ நாட்டை வளமாய் ஆக்கு !

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஏக்கூப்_பைஸல்&oldid=1395049" இலிருந்து மீள்விக்கப்பட்டது