பயனர்:எஸ்.சுவாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்களும் சமுதாயமும்

    பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று தான் கூறுகின்றனர். ஆனால் நிலமை அவ்வாறூ இல்லை... அவர்கள் முடக்கப் படுகிறார்கள். அடக்கப்படுகிறார்கள்.நினைத்த படிப்பை படிக்க முடியவில்லை.. நினைத்த மாதிரி வாழ முடியவில்லை.. அவர்கள் ஒரு பணப்பொருளாக ஒரு போகப்பொருளாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.
  சமுதாயத்தில் சிலர் கூறுகிறார்கள். பெண்கள் பெயரில் தான் நதிகள் இருக்கின்றன.கடவுளர்கள் இருக்கிறார்கள் என்று. விதவிதமாய் சொல்வார்கள்.. ஆனால் நடப்பது என்ன?இரவில் மட்டும் அல்ல. பகலிலும் பெண் தனியாகப் போக முடியவில்லையே. என்ன செய்வது?
  முதலில் எப்போதும் சமைப்பதும் துவைப்பதும் வீடு பராமரிப்பதும் இதே தான் வேலையாக இருக்கிறாள் பெண். நடுத்தரக் குடும்பங்களில் அவளுடைய திறமைகள் அனைத்தும் அழித்து விடப்படுகின்றன.இதெல்லாம் மீறி அவள் இன்றைய தொலைக்காட்சிப் பெட்டிக்குள் உட்கார்ந்து விடுகிறாள்.
  பெண்களை எல்லாக் கதைகளீலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அவள் திருமணத்திற்கு தயாராக வேண்டும் என்பது போலவே காட்டுவது தான் கொடுமையாக இருக்கிறது. அவள் மீறி தன் லட்சியங்கள் நோக்கி பயணம் போனாலும் அது தவறான பாதை அது என்று அச்சுறுத்தப்படுகிறாள்.பயப்பட வைக்கிறார்கள்..கவலைப்பட வைக்கிறார்கள்.
  பெண்கள் வாழையடிவாழையாக ஆண்களூக்கு ஒரு ப்டி கீழ் உள்ளவர்களாகத்தான் காட்டப்படுகிறார்கள்.எது செய்தாலும் உன்னை யார் கட்டுவார்கள்? உனக்கு எப்படி மாப்பிள்ளை பார்ப்பது? போற வீட்டுல எப்படி பொழைக்கப்போறே? என்றெல்லாம் கேட்டுக்கேட்டு அவள் உளவியல் ரீதியாகவே திருமணத்திற்கு மட்டுமே என்றான விதையை மனதில் விதைத்து விடுகிறார்கள். அதைத்தாண்டி அவளால் எதுவும் செய்யமுடியாது என்ற கண்ணோட்டத்தில் அவளை மூழ்க வைத்து விடுகின்றனர்.உண்மையிலேயே வீட்டிலும் வேலை பார்த்து விட்டு வெளியிலும் வேலை செய்கின்றனர். ஆனால் அவள் வேலை பார்ப்பதையும் அவள் தான் குடும்பத்திற்கு அதிகமாக உழைகிறாள் என்பதையும் அறியவிடாமல் ஒரு மாய வலைக்குள் அவளை சிக்கவைத்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.ஒரு பெண் தன் வருமானம் முழுவதும் தன் குடும்பத்திற்காகவேதசன் செலவு செய்கிறாள். தனக்கென அவள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. தன் ஆரோக்கியத்தையும் கவனிக்கத்தவறிவிடுகிறாள்.
  இந்தியாவில் பெண்களீன் கல்வி சதவீதம் மிகவும் குறைவான நிலையிலேயே இருகிகிறது.கல்வி முழுமையாகக் கொடுக்கப்படாததால் தான் அவள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறாள்.அவள் அடிமை படுகிறவளாக ஆகி விடுகிறாள். ஆண்களை எதிர்த்து போராட இயலவிலலை. தனக்கான தேவைகளைக்கூட அவளால் துணிந்து சொல்லமுடியவில்லை. தனியே நின்றால் அவள் நடத்தை ரீதியாகப் பேசப்படுகிறாள். எனவே பல பெண்கள் தற்கொலை என்ற முடிவுக்குக்கூட வந்து விடுகின்றனர்.
   பெரும்பாலான பெண்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பின்றிதிறமையற்ற தொழில்களையே செய்து வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எஸ்.சுவாதி&oldid=1535864" இலிருந்து மீள்விக்கப்பட்டது