பயனர்:எமல்டாகுயின்மேரி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியலூர் வட்டார முஸ்லிம்களின் வாழ்வியல் கூறுகள்

அரியலூர் வட்டாரத்தில் சுமார் 4000 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒரே ஒரு பள்ளிவாசல் மட்டும் உள்ளது.லப்பை , பட்டானி ,ராவுத்தர் என பல்வேறு பிரிவினராய் இருந்தனர்.தற்சமயம் தமிழக அரசின் உத்தரவின் பேரில் ‘லப்பை’ என்று மட்டுமே குறிக்கப்படுகின்றனர். அரியலூர் வட்டாரத்திலேயே தோல் மண்டி ராவுத்தர் முதலாய் நான்கு குடும்பங்கள் மட்டுமே நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். ஏனைய இஸ்லாமியர்கள் திண்டுக்கல் , தேனி , திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து பிழைக்க வந்தவர்கள். உருதும், தமிழும் மட்டும் பேச கூடியவர்கள். அரியலூர் வட்டார முஸ்லிம்களிடம் காணலாகும் வாழ்வியல் கூறுகள் தமிழகம் முழுதும் வாழும் முஸ்லிம்களிடம் உள்ள பொதுவான வாழ்வியல் கூறுகளாகவே அதிகம் உள்ளது.