உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:எடையூர் ஜெ.பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் கிராமத்தில் நிரந்தரமாய் வசித்து வருபவர். 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி ஜெயராமன் - அம்மாக்கண்ணு தம்பதியராகப் பிறந்த இவர், எடையூர் கிராமத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரியலூர் கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தவர். பின்னர், மேல்நிலைக் கல்வியை எடையூரிலும், வணிகவியல் இளங்கலைப் பட்டப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். இது தவிர, ஜர்னலிசத்தில் டிப்ளோமும், கணினியில் டிப்ளோமும் பயின்றவர். தி கன்ஸ்யூமர் நியூஸ், தமிழ்நாடு நுகர்விழி, ஹலோ ஹன்ஸ்யூமர்ஸ் உள்ளிட்ட இதழ்களில் நிருபராகவும், பிழை திருத்துனராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் தினசரி நாளிதழிலும், தந்தை பெரியாரின் உண்மை, பெரியார் பிஞ்சு, ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களிலும் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், கேப்பிடல் மெயில் என்கிற வார பத்திரிகையில் இதழாசிரியராக உள்ளார். இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், சிறு வயது முதல் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பதால் பள்ளி மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற கட்டுரை, கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறார். 2007-ம் ஆண்டு இவருடைய ஊசி என்கிற கவிதை நூல் வெளியானது. அதைத் தொடர்ந்து அம்மா ஊட்டிய நிலாச்சோறு என்ற கவிதை நூல் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. விகடன் இணையதளத்தில், இவர் எழுதிய காவிரி பற்றிய ஆய்வுக் கட்டுரை , புத்தகமாக வெளிக்கொண்டுவரப்பட்டு கெளரா ஏஜென்ஸீஸால் வெளியிடப்பட்டது. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை என்கிற அந்தப் புத்தகத்தில், காவிரி பற்றிப் பல எழுத்தாளர்கள் எழுதத் தவறவிட்ட ஆவணங்களை ஆதாரத்துடன் கொடுத்துள்ளார். இது தவிர, விகடன் இணையதளத்தில் எழுதிய ஹாசினி எனும் பட்டாம்பூச்சி கட்டுரையை வெளியிடப்பட்டு வாசகர்களைக் கவர்ந்துள்ளது. தவிர, 2019ம் ஆண்டு நிமிர்ந்து பார் என்கிற கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். மேலும், https://www.எடையூர் ஜெ.பிரகாஷ் facebook.com/, https://edrprakash2 twitter.com/ உள்ளிட்ட வலைத்தளங்களில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதியும், கருத்துகளைப் பதிவிட்டும் வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எடையூர்_ஜெ.பிரகாஷ்&oldid=3211260" இலிருந்து மீள்விக்கப்பட்டது