பயனர்:எங்க ஊரு இடைக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழநாடு > மயிலாடுதுறை >இடைக்கியம்

சோழவள நாட்டில் காவிரிக்கரையில் அமைந்த மயிலாடுதுறையின் கோட்டத்திலும் குத்தாலம் உட்கோட்டத்திலும் பாலையூர் நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பிலும் அமைந்த ஓர் இயற்க்கை கொஞ்சி விளையாடும் பச்சை கிராமம் எங்கள் இடைக்கியம்.

காவிரி ஆறு பாய்கிற, எங்களுடைய கரிகால மன்னன் ஆட்சி செய்யும் சோழ நாட்டைப் பாருங்கள், எங்களுடைய வயல்களில் நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் போது நாங்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வோம்…

அந்த சமயத்தில் கீழே சிந்துகிற தானிய மணிகளை எல்லாம் சேமித்தாலே போதும்…. அது மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த நெல் விளைச்சலைவிட அதிகமாக இருக்கும்…. காலத்துக்கும் உட்காந்து சாப்பிடலாம்.

இடைக்கியம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் ஆன்மீக தலங்கள் மற்றும் நவக்கிரக கோயில்கள், புகழ்பெற்ற காவிரிக் கரைக்கு எழுந்தருளும் பஞ்ச மூர்த்திகள் விழா, இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்றான இராமகாதையை தமிழ்மொழியில் வடித்த கம்பர் வாழ்ந்த நகரம் என்ற பெருமைகளை உள்ளடக்கியது. இதுதவிர, உ.வே.சா சாமிநாத அய்யர், மாயூரம் வேதந‌யகம் பிள்ளை, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் வாழ்ந்த மண் எங்கள் மண்.

மயிலாடுதுறையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், கோவில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் அமைத்துள்ளது எங்கள் ஊர்.

எங்கள் வாழ்வை எப்பொழுதும் பசுமையாக வைத்துக்கொள்ளும் இயற்கை அன்னையின் கொடை, வடக்கில் வீரசோழன் ஆறு, தெற்கில் நண்டலாறு, உட்புகும் சித்தாறு, தாய் ஊற்று காவிரி, தண்ணீரை சேமிக்க 3 குளங்கள் 2 குட்டைகள் அமைந்துள்ளது.

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு சிறிய சொர்கம் இந்த இடைக்கியம்.  "கேட்டாலே பொறாமையா இருக்குல்ல".....