பயனர்:ஈழவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழவாணி[தொகு]

ஈழவாணி ஈழத்தில் வவுனியாவில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை வவுனியா றம்பைக்குளம் தேசிய மகளீர் கல்லுரியிலும், கொழும்பு பல்கலைக்கழகத்திலும், அழகப்பா பல்கலைக் கழகத்திலும் உயர்கல்வி பயின்றவர்.

சிறுவயது முதலே கலை, இலக்கிய படைப்பாக்கங்கள் மீது ஆர்வங்கொண்டு செயற்பட்டுவருபவர். தற்போது கவிஞராக, எழுத்தாளராக, நாவலாசிரியராக, பேச்சாளராக எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்கிறார். மட்டுமல்லாமல் பூவரசி அறக்கட்டளையின் ஊடாகப் பல சமுகசேவைத்திட்டங்களையும் ஆற்றிவருகிறார். குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் பெண்களுக்கான உளவள சேவை, ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கான வேலைவாப்பு உதவித்திட்டங்களைப் பெற்றுக்கொடுத்தல், நலிந்த படைப்பாளர்களுக்கு ஊக்குவிப்பளித்து புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருதல் பேன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

நிறுவனர்[தொகு]

பூவரசி மீடியா, பூவரசி பதிப்பகம், பூவரசி அறக்கட்டளை போன்ற நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராகத் தற்போது இருக்கிறார். .பூவரசி திங்களிதழின் பிரதம ஆசிரியராகவும் இருக்கிறார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

கவிதை நூல்கள்[தொகு]

1. மூக்குத்திப் பூ        (பூவரசி- 2016)

2, விலக்கப்பட்ட தாள்கள். (மித்ர-பூவரசி -2014)

3, ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்திரியும்.   (உயிர்மை, 2014)

4, தலைப்பு இழந்தவை. (தகிதா,2009)

5, சிதறல்.          (சூரியன் வெளியீடு,2004)

சிறுகதை நூல்கள்:[தொகு]

6, 27 யாழ்தேவி(பூவரசி- 2017)

7, நிர்வாணமுத்தி.    (மித்ர,2013)

8, நிறங்கள்.    (சூரியன் வெளியீடு,2004)

ஆய்வு நூல்:[தொகு]

9,நூட்டார் வழக்காற்றியலும் நாட்டுப்புறப் பாடல்களும் (பூவரசி -2017)

10,ஈழத்து நாட்டார் பாடல்கள் (உயிர்மை, 2011)

11,நெஞ்சோடு கொஞ்சும் நாட்டுப்புறப் பாடல்கள்.

கட்டுரை நூல்

12, எழும்பறை (பூவரசி -2019)

13  காப்பு- இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதை அடங்கிய தொகுப்பு .(2019)

ஆவணப்படங்கள்:[தொகு]

     வரலாற்றில் வாழ்கிறார் எஸ்.பொ

     தன்னானே - கே.ஏ. குணசேகரன்

     பெண்வீசு;சு நா.பாலேஸ்வரி

     ஈழநாட்டியம்

      புலம்பெயர்ந்த புலம்பல்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஈழவாணி&oldid=2661036" இலிருந்து மீள்விக்கப்பட்டது