பயனர்:இரா.கார்த்திகேசன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது ஊரும் அதன் சிறப்பும்

    இரா.கார்த்திகேசன் ஆகிய நான் மும்மதத்தையும் போற்றக்கூடிய  நாகூர் தர்ஹா, சிக்கல் சிங்கார வேலர் மற்றும் வேளங்கன்னி மாதாக்கோவில் திருத்தலங்களை கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா கீழையூர் ஒன்றியதை சேர்ந்த விழுந்தமாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். 
    எனது பள்ளி மற்றும் கிராமம் இயற்கை சூழலுடன் அமையப்பெற்றது. இங்கு புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. எங்கள் ஊர் அனைத்து மரங்களும் நிரைந்த சோலை வனமாகும். எங்கள் ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் கோடியக்கரை பறவைகள் சரனாலயம் உள்ளது இங்கு மான்கள் மற்றும் பறவைகள் அதிகமாக கானப்படுகின்றன. வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
    ராமாயனத்தில் ராமர் சீதையை தேடி சென்ற போது கோடியக்கரை வழியாக சென்றுள்ளர் அவர் நின்று சென்ற இடமானது இப்போது ராமர் பாத்ம் என்று அழைக்கப்படுகிறது. இது கோடியகாட்டின் மையத்தில் அமையப்பெற்றுள்ளது. இங்கிருந்து பார்த்தால் கோடியகாட்டை முழுமையாக பார்க்கலாம்.

வேதாரண்யத்தில் புகழ்பெற்ற வேதேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளது இது மிகவும் பழமைவாய்ந்த சிறப்புமிகுந்த கோவிலாகும். இது முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட்து.

    வேதாரண்யம் அருகாமையில் உள்ளது அகஸ்தியாம்பள்ளி இங்கு புகழ்வாய்ந்த உப்பளம் உள்ள்து. இந்த உப்பளம் பல ஏழை மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கிருந்து அனைத்து பகுதிக்கும் உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

அகஸ்தியாம்பள்ளியில் உப்பு சத்தியாகிரக போராட்ட்த்தின் நினைவாக இங்கு ஒரு நினைவு தூணும் உள்ளது இது இப்பொழுதும் அனைவரும் வந்துச் செல்லும் சுற்றுலாத்தலமாக திகழ்கிற்து.

   எங்கள் ஊரிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் கடல்கரை அமைந்துள்ளது. இங்கு மீனவர்கள் அதிகம் வாழ்கிறார்கள் அவர்கள் மீன்பிடித்தலை தொழிலாக கொண்டு தினசரி வாழ்வை  நடத்துகிறார்கள்.
   நாகை மாவட்ட்த்தில் உள்ள திருத்தலங்களில் நாகூர் தர்ஹா மிகவும் புகழ்பெற்றது இங்கு அனைத்து மதத்தவர்களும் சென்று வணங்குகிறார்கள். 

அதுபோல் வேளாங்கன்னி மாதா கோவில் திருத்தலம் இதுவும் மிகவும் புகழ்பெற்றது இங்கு அனைத்து மதத்தவர்களும் சென்று வணங்குகிறார்கள். இங்கு இந்திய மக்கள் மட்டுமில்லாது வெளிநாடுகளில் இருந்தும் என்னற்ற மக்கள் வந்து வனங்கிச் செல்கிறார்கள். அதுபோல் சிக்கல் சிங்கார வேலர் சன்னதி ஒரு புகழ்பெற்ற முருகன் திருத்தலமாகும். இது இந்து மக்கள் வழிப்பாடுத்தலமாகும். சித்திரை பெளர்ணமி மிகவும் விழேழமானது.

    எங்கள் ஊர் இயற்கை வளத்தோடு இருப்பதால் காற்று மாசுபாடு இல்லாமல் மக்கள் ஆரோக்கியத்தோடு நோயின்றி வாழ்கிறார்கள்.