பயனர்:இனமான தேசிய மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இனமான தேசிய மக்கள் கட்சி[தொகு]

தமிழ் தேசிய இனமானது தன்னுடைய பாரம்பரியமான ஐம்பதனாயிரம் ஆண்டுகள் வரலாற்று உரிமைக்குச் சொந்தமானது. இது சேர, சோழ, பாண்டியர் காலம் வரை தன்மானத்தோடும் இனமானத்தோடும் மகிழ்ச்சியோடு சுயமாக வாழ்ந்து வந்தது. பிறகு, வெள்ளையர்களால் அடிமைப்படுத்தப்பட்டு மொழிசிதைவு ஏற்பட்டு எதற்கெடுத்தாலும் கையேந்தி பிழைக்கும் ஏதிலிகலாக என்னருந் தமிழ்மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிட்டார்கள். வெள்ளையனை வெளியேற்றி ஒரு சுதந்திரத் தமிழ் இனமாக மாறவேண்டும் என்று போராடி தன் இன்னுயிரைய்யும் பணயம் வைத்த லட்சோபலட்ச தமிழ் மக்கள் நாட்டிற்க்கு சுதந்திரம் கிடைத்த பிறகு நல்வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பி இருக்கும்போது தொடர்ச்சியாக தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியும் சரி, திராவிடக் கட்சிகளும் சரி இதுவரை எழுபது ஆண்டுகளாக எம்மினத்தையும் மொழியையும் அடிமையாக்கி தன்மானம் இழக்க செய்து வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய வழியின்றி கையேந்தி இலவசங்களை வாங்கும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இந்த தன்மானத்தைக் காக்கத்தான், இப்படி ஒவ்வொரு தமிழனுடய தன்மானமானது தமிழ்நாட்டின் இனமானமாக உருவெடுக்கிறது. இதுவே இனமான தேசிய மக்கள் கட்சி உருவாக காரணமாகியது.

இனமான தேசிய மக்கள் கட்சியின் கொள்கைகள்[தொகு]

  • முதல் - தமிழ் மொழி சிதைவிலிருந்து மொழியை பாதுகாப்பது.
  • இரண்டாவது - தமிழ்மொழியினை அனைத்துப்பள்ளிகளினும் கட்டாயப்பாடமாக்கி தமிழ்வழிக்கல்வி பயின்றவர்களுக்கும், அரசுப்பள்ளிகளில் கல்வி பயின்றவர்களுக்கும் அரசுவேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது.
  • மூன்றாவது - தமிழ்மொழியினை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக கொண்டுவருவது.
  • நான்காவது - தமிழக மக்களின் உரிமைகளான முல்லைப்பெரியார் நதிநீர், காவிரி நதிநீர், கிருஷ்ணா நதிநீர் தடையின்றி தமிழகத்திர்க்கு கிடைத்திட செய்வது, தடைப்பட்டால் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பொருட்களையும் அனுப்பாமல் தடை செய்வது.
  • ஐந்தாவது - தமிழகத்தில் இயற்க்கை வேளாண்மையினை முற்றிலும் அரசுத்தொழிலாக கொண்டுவருவதோடு அல்லாமல் விவசாயிகளையும், விவசாயம் சார்ந்த தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக்குவது ஆகும். மேலும், இயற்க்கை வேளாண்மையை ஐயா நம்மாழுவார் முறைப்படி செய்ய ஊக்குவிக்கப்படும்.
  • ஆறாவது - கால்நடைகள் வளர்ப்புத்தொழிலை முற்றிலும் அரசுத்தொழிலாக மாற்றி, கால்நடைகள் வளர்ப்பவர்களை அரசு ஊழியர்களாக்குவது.
  • ஏழாவது. - இளநீர், நுங்கு, பழச்சாறு, பதநீர் இவைகளை விற்பனை செய்யும் கடைகளை தமிழகம் முழுவதிலும் திறப்பதும், அயல்நாட்டு குளிர்பாணங்களான கோக், பெப்ஸி போன்ற ரசாயனக்கலப்பு பானங்களை நடைப்பாதைகளில் விற்பனை செய்வதற்கான சட்டம் கொண்டுவருவது.
  • எட்டாவது - தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டிற்காக வட்டத்திற்க்கு ஒரு அடகு கடையினை திறந்து மிகவும் குறைந்த வட்டியில் மக்களுக்கு பணம் பெறச்செய்வது.
  • ஒன்பதாவது - தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து கட்டண உபயோகிப்பாளர் மையங்களையும் முற்றிலும் அகற்றி, தடையில்லா, விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்க்கு வழிவகை செய்வது.
  • பத்தாவது - மீன்பிடித்தொழிலை அரசுத்தொழிலாக மாற்றி, மீனவர்களையும் அரசு ஊழியர்களாக்குவது என்பதாகும்.
  • பதினோறவது - தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினர்களுக்கும் சொந்தமாக வீடு கட்டுவதற்க்கு ஆயிரம் சதுரடி நிலம் வழங்குவது.
  • பனிரெண்டாவது - தமிழகத்தில் இருக்கக்கூடிய சாராய ஆலைகளை மூடுவதின் மூலமும், அயல்நாட்டு மதுவகைகளை தடைசெய்வதின் மூலமும் முழுமையான மதுவிலக்கை கொண்டுவந்து குடியில்லா தெளிவான மாநிலமாக தமிழகத்தினை மாற்றுவது.
  • பதிமூன்றாவது - தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்திணரிடமிருந்து பாதுகாக்கவும், மீனவர்களின் வாழுவாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் உரிய பாதுகாப்பு அளிப்பது.
  • பதினான்காவது - மருத்துவத்துறையில் தமிழர்களின் தவம், யோகம், வர்மம் மற்றும் சித்தா போன்றவற்றிற்க்கு முக்கியத்துவம் அளித்து, எந்தவொரு பக்க விளைவும் இல்லாத தமிழ் மருத்துவத்தை நாடெங்கும் வளர்க்க செய்வது.
  • பதினைந்தாவது - தமிழகத்தில் அந்நிய தொழில் நிறுவனங்களையும், அந்நிய முதலீடுகளையும் முற்றிலும் தவிர்ப்பது.
  • பதினாறவது - கல்வி பயிலாதவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அரசுப்பணிகளில் நியமிப்பது.
  • பதினேழாவது - ஊழலையும், ஊழல்வதிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்து ஊழலற்ற நாடாக மாற்ற முழுக்க முழுக்க பாடுபடுவது என்பதாகும்.
  • பதினெட்டாவது - தமிழகத்தின் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க செய்வது, கண்டுபிடித்தவைகளை உள்நாட்டு மக்களுக்கே பயன்பட செய்வது என்பதாகும்.

இனமான தேசிய மக்கள் கட்சியின் தோற்றம்[தொகு]

இனமான தேசிய மக்கள் கட்சி தமிழ் தேசியம் ஆதரவு உடைய ஒரு தமிழ்நாட்டை முதன்மையாக கொண்ட அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் 2015 ஆம் ஆண்டில் பெ கி தமிழ்செல்வக்குமாரால் தொடங்கப்பட்டது. இக்கட்சி தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், மராட்டியம், தில்லி போன்ற இடங்களிலும், தமிழர்கள் வாழும் பல உலக நாடுகளிலும் பரவிகிடக்கிறது. உலக தமிழர்களின் மேம்பாட்டிற்காகவும் உரிமை மீட்சிக்காகவும் பிறந்த உலக தமிழர்களுக்கான பொது அரசியல் கட்சி என்று அறியப்படுகிறது. இக்கட்சியில் படித்த இளைஞர்கள் அதிகம் இருக்கின்றனர்.இது உலக தமிழர்கள் எல்லோருக்குமான அரசியல் உரிமை, தன்னாட்சி , பொருளாதார மேம்பாடு , சமூக விடுதலை, பெண்ணிய விடுதலை,வர்க்க விடுதலை இவைகளுக்கு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தீர்வு காண்பதை இலக்காக கொண்டு உள்ளதால் ஓட்டு மொத்த உலக தமிழர்களுக்கான பொது அரசியல் கட்சி என்று அறிய படுகிறது.


கொடி[தொகு]

இனமான தேசிய மக்கள் கட்சியின் கொடி முதல் பாதி இலஞ்சிவப்பும், இரண்டாம் பாதி நீல நிறத்தினும் நடுவில் வெள்ளை நிற ஐந்து நட்சத்திரங்களும் இடம்பெற்றிருக்கின்றன