பயனர்:அன்புமணி.சு/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                     கூத்தூர்-நாகப்பட்டினம்
   எனது ஊர் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்ட்த்தின் கீழ்வேளுர் வட்ட்த்திலுள்ள கூத்தூர் ஆகும். எங்கள் ஊரில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊரில் ஒரு காலத்தில் கூத்தாடிகள் அதிகம் இருந்த்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.                                                             
     
     எங்கள் ஊரில் புகைவண்டி நிலையம்,அரசு பொதுவுடைமை வங்கி,கூட்டுறவு வங்கி,அஞ்சல் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி போன்றவை உள்ளன.
    
      எங்கள் மாவட்ட்த்தில் எவ்வாறு அனைத்து மதத்தில் உள்ள மக்களும் வசிக்கிறார்களோ  அதே போன்று எங்கள் ஊரிலும் அனைத்து மதமக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.
   
      எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தினையே நம்பியுள்ளனர். முஸ்லிம் மத இன மக்கள் வீட்டுக்கொருவர் வெளிநாட்டில் வசித்து வெலைபார்த்துவருகின்றனர். ஆகையால் எங்கள் ஊரில் அனைத்து வசதிகளும் உடைய ஊராக உள்ளது.
     ’சோழநாடு சோறுடைத்து’ என்பதற்கு ஏற்ப எங்கள் ஊரும் விவசாயத்தினையே நம்பியுள்ளது.பெரும்பாலும் காவிரி நீரையே நம்பியுள்ளனர். காவிரியின் கிளை நதியான வெண்ணாறு பாய்ந்து வளப்படுத்துகிறது. ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த எங்கள் ஊரில் காவிரி  நீர் வராத காரணத்தால் இன்று ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.
     எங்கள் ஊரில் ’உழுபவனுக்கெ நிலம் சொந்தம்’ என்று போராடக்கூடிய அமைப்பு ஒன்று உள்ளது. அந்தமைப்பின் தலைவராக கிருட்டிணம்மாள் ஜெகநாதன் என்பவர் உள்ளார். இவர் வேலை இல்லாதவர் களுக்கு வேலைவாய்ப்பும், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டவும் ஏற்பாடு செய்து உதவி வருகிறார்