பயனர்:அனிட்டா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                      'ஆசிரிய முகமூடி அகற்றி


 "Teacher Man" என்ற நூலின் வாசிப்பு அனுபவமே ”ஆசிரிய முகமூடி அகற்றி”. ச.மாடசாமி அவர்களால் எழுதப்பட்ட வாசிப்பு அனுபவ நூல். அனைத்து ஆசிரியர்களும் படித்து பயனுற வேண்டிய நூல். அதிலும் மொழி ஆசிரியர்கள் படிக்கும் போது நிச்சயமாக தங்களின் கற்றல் பாதையை மாற்றி கொள்வார்கள்.1960-களில் மக்கோர்டினால் கடைபிடிக்கப்பட்ட இக்கற்றல் அனுபவங்கள் இக்காலகட்டத்திற்கும் பொருந்த கூடியவையே.  
”தாமதமாய் மலர்ந்தவன்” என்று மக்கோர்ட் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வார்.
 தம் பணிக்காலம் முழுவதும் ‘ஆசிரிய முகமூடி’யைக் கழற்ற ஓயாமல் முயன்றவர் மக்கோர்ட்.பணி ஒய்வு பெற்றதும் ”முகமூடி அநேகமாக கழன்று விட்டது.இப்போது என்னால் மூச்சு விட முடிகிறது” என்று எழுதினார் மக்கோர்ட்.
“நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ,திட்டினாலோ அவர்களை இழக்கிறாய்.உன் சத்ததுக்குப் பிறகு வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னை அடிப்பது போல”
”ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்கிறான்.அந்த ஒருவன் நான்தான்”.
இப்படி மனதைத் தொட்ட, சாட்டையால் அடித்த வரிகள் இந்நூலில் ஏராளம், ஏராளம். நான் எப்படிப்பட்ட ஆசிரியராக இருக்கிறேன் என சுயமதிப்பீடு செய்ய இது எனக்கு உதவியது.நானும் மக்கோர்ட் ஆக இருக்க முயற்சி செய்வேன் என என் உள்ளம் உறுதியளித்தது.ஆனால் என் தோலோடு தோலாக ஒட்டிவிட்ட இந்த ஆசிரிய முகமூடியை அகற்றுவது எப்படி?
   
                                              “மாற்றங்கள் என்னிலிருந்தே”


Author - ச.மாடசாமி Country - இந்தியா Language - தமிழ் Publisher - அறிவியல் வெளியீடு Published in - தமிழ், மே 2014 Pages - 72 [1]

  1. TEACHER MAN ஒரு வாசிப்பு அனுபவம் (மே 2014). ஆசிரிய முகமூடி அகற்றி. சென்னை: அறிவியல் வெளியீடு. பக். 72.