பம்ப்ளிமாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பம்ப்ளிமாஸ் என அழைக்கப்படும் எலுமிச்சை வகை மரத்திற்கு 'பம்மெல்லொ' 'ஷேட்டாக்' என்ற ஆங்கில பெயர்கள் உண்டு. இம்மரத்தின் தாவர பெயர் 'சிட்ரஸ் கிராண்டிஸ்' என்பதாகும். இது 'சிட்ரஸ் மேக்சிமா' அல்லது 'சிட்ரஸ் டெக்மோனா' என்றும் வழங்கப்படுகிறது.

தோற்றம்[தொகு]

இதன் பழங்கள் மிக மிகப் பெரியவைகளாக இருக்கும். பழத்தோல் கனமாக இருக்கும். பழத்தோலை உரித்து உள்ளிருக்கும் சுளையை உண்ணலாம். சிவப்பு மற்றும் வெள்ளை சுளைகளைக் கொண்ட இருவகைகள் உள்ளன.

மருத்துவப் பண்புகள்[தொகு]

புளிப்புச்சுவை நிறைந்த பழங்கள் குளிர்ச்சியைத் தரும். பழம் சத்து நிறைந்தது. இருதயத்திற்கு பலம் தரும். பித்த மயக்கத்தைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். அளவிறந்த குருதி நோய்க்கு உதவும். இதன் இலை காக்காய் வலிப்புக்கும், உன்மத்தம் அல்லது பித்தத்துக்கும், இருமலுக்கும் உதவும். பழத்தோல் வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். மூளைக்கு பலம் தரும். வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, கண்நோய் ஆகியவற்றைப் போக்கும். விதை இடுப்பு வலியைப் போக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அர்ச்சுணன். கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 93, 94.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்ப்ளிமாஸ்&oldid=3843838" இலிருந்து மீள்விக்கப்பட்டது