பம்பாய் தடைச் சட்டம், 1949

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பம்பாய் தடைச் சட்டம், 1949 (Bombay Prohibition Act, 1949) என்பது பம்பாய் மாநிலத்தில் மதுவிலக்கை ஊக்குவித்தல் மற்றும் அமலாக்குதல் தொடர்பாக பம்பாய் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும் . பம்பாய் மாநிலம் 1960 ஆம் ஆண்டில் மகாராட்டிரா மற்றும் குசராத்து மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது [1]

இச்சட்டத்தின் கீழ் மதுபானம் வாங்குவதற்கு, வைத்திருப்பதற்கு, உட்கொள்வதற்கு அல்லது வழங்குவதற்கு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். அனுமதியின்றி மதுபானம் வாங்குதல், அருந்துதல் அல்லது பரிமாறுதல் போன்ற குற்றங்களுக்காக மூன்று மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ஒருவரை கைது செய்ய காவல்துறைக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது. அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் கொண்டு சென்றால் 50,000 ரூபா அபராதமும் 5 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். [2]

சுதந்திரத்திற்குப் பிறகு, பாம்பாய் தடைக் குழுவின் உறுப்பினராக மராட்டிய ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவராக இருந்த பாம்பாயைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு இயே.எசு. சாவந்தை அரசாங்கம் நியமித்தது.

குறிப்பிடத்தக்க கைதுகள்[தொகு]

2013 ஆம் ஆண்டு ஆவணப்பட தயாரிப்பாளர் பிரித்தி சந்திரானி வீட்டில் சாக்லேட் தயாரிப்பதற்காக மது வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Bombay (Reorganisation) Act, 1960
  2. "Facts know about Bombay Prohibition Act 1949 how to get liquor license permit in Mumbai City". Realityviews.in. 2012-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
  3. "Mumbai shocker: Woman arrested for possessing liquor for chocolates". Ndtv.com. 2012-06-24. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
  4. "Detained for not possessing liquor permits, woman let off - Indian Express". Archive.indianexpress.com. 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
  5. "Worli resident talks about ordeal after raid". Epaper.timesofindia.com. 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_தடைச்_சட்டம்,_1949&oldid=3859026" இலிருந்து மீள்விக்கப்பட்டது